5GB இலவச இட வசதியுடன் வரும் கூகுளின் புதிய சேவை Google Drive

Cloud Storage தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வரும் நவீன தொழில்நுட்பம் ஆகும். Cloud Storage என்பது நாம் நம்முடைய பைல்களை ஆன்லைனில் சேமித்து கொள்ளும் வசதி. இப்படி ஆன்லைனில் சேமிக்கும் பைல்களை எங்கிருந்தும் எந்த நேரத்திலும் ஓபன் செய்து கொள்ளலாம். மற்றும் ஸ்மார்ட் போன்களில் இருந்தும் நேரடியாக உபயோகித்து கொள்ளலாம். சிடி மற்றும் பென்டிரைவில் சேமித்து கொண்டு கூடவே எடுத்து போக வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சேமிக்கும் பைல்களை உங்கள் நண்பர்களுக்கும் share செய்யும் வசதி உள்ளதால் அந்த பைலை அட்டாச் செய்து மெயில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இப்படி பல பயனுள்ள வசதிகளை கொடுப்பது தான் Cloud Storage சேவை எனப்படும்.


இந்த Cloud Storage சேவைகளை பல நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு இடவசதியை வாசகர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கினாலும் பல பயனுள்ள வசதிகளை கொண்டு இயங்கும் Dropbox தான் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இணையத்தை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கும் கூகுள் நிறுவனம் இந்த Cloud Storage வசதியிலும் குதிக்க இருக்கிறது. 5GB இலவச இட வசதியுடன் Google Drive எனப்படும் Cloud Storage சேவையை இந்த மாதத்தில் வெளியிட போவதாக வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 

இப்பொழுது இந்த வதந்திகளையும் தாண்டி அந்த தளத்தின் Screen Shot  கிடைத்துள்ளதாக parkandroid இணையதளம் வெளியிட்டு உள்ளது. 


இந்த ஸ்க்ரீன் ஷாட் வைத்து பார்க்கும் பொழுது இந்த சேவையின் URL drive.google.com என்று இருக்கிறது. மற்றும் விண்டோஸ் கணினியில் இருந்து சேவையை உபயோகிக்க இலவச மென்பொருளும் வெளியிடலாம்.

இப்படி தினம் தினம் புரளிகள் வந்து கொண்டே இருந்தாலும் Google Drive சேவையை வெளியிடாதவரை எதுவுமே உறுதியாக கூற முடியாது.  இந்த மாதம் வ

Comments