கூகுள் பிளஸ் அசத்தலான தோற்றத்துடன் சில புதிய வசதிகள்

சமூக இணையதளங்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவுவதால் ஒவ்வொரு சமூக தளமும் ஏதாவது ஒரு புதிய வசதிகளை அறிமுகபடுத்தி கொண்டே உள்ளது. வாசகர்களை தக்க வைத்து கொள்ளவும் மேலும் புதிய வாசகர்களை கவரவும் ஏதாவது புதிதாக அறிமுகபடுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்பது கூகுளின் வழக்கம். இப்பொழுது கூகுள் பிளஸ் தளத்தின் தோற்றத்தை முழுமையாக மாற்றி அசத்தலான தோற்றத்தை வெளியிட்டு உள்ளது கூகுள் நிறுவனம்.  இந்த அசத்தலான தோற்றத்துடன் சில புதிய வசதிகளையும் அறிமுகபடுத்தி உள்ளது கூகுள் அவைகள் என்னவென்று கீழே பார்க்கலாம். 

பழைய தோற்றத்தில் மேலே இருந்த மெனு பட்டன்களை இடது ஓரத்தில் கொண்டு வந்து உள்ளது. மற்றும் அந்த பட்டன்களை நமக்கு வேண்டிய படி drag செய்து நகர்த்தி கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் Explore என்ற ஒரு புதிய வசதியும் உள்ளது. அதில் சமீபத்தில் கூகுள் பிளசில் அதிகமாக +1 செய்யப்பட இடுகைகள் பார்த்து கொள்ளலாம்.




புதிய தோற்றத்தை பற்றி அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.



உங்கள் இடுகையை +1 செய்தவர்களின் ப்ரோபைல் போட்டோக்களும் தெரிகிறது. 

ப்ரோபைல் பக்கத்திற்கு கவர் போட்டோ:


பேஸ்புக் தளத்தில் உள்ளது போலவே இனி கூகுள் பிளஸ் ப்ரோபைல் பக்கத்திற்கு இனி Cover Photo வை அமைத்து கொள்ளலாம். முதலில் உங்கள் புரோபைல் பக்கத்திற்கு சென்று Edit Profile என்ற பட்டனை க்ளிக் செய்யவும். அதில் Change Cover Photo என்ற லிங்கை அழுத்தி உங்களுடைய கவர் போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்களின் கவர் போட்டோ குறைந்தது 940X180 அளவு இருக்க வேண்டும். 


உங்களின் கவர் போட்டோவை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி உங்கள் பிளஸ் profile பக்கத்திற்கு கவர் போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

மேலும் விரிவாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.




இந்த புதிய தோற்றத்தில் மேலும் ஏதாவது புதிய வசதிகள் இருப்பின் அவைகளை பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம். 

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது கூகுளுக்கு மிகவும் பொருந்தும். இந்த புதிய தோற்றம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனால் இன்னும் எத்தனை நாள் இதனை வச்சிருக்க போகுதோ தெரியல? உங்களுக்கு இந்த தோற்றம் பிடிச்சிருக்கா 

Comments