குரோம் உலவியில் உள்ள ரகசியங்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

நீங்கள் தொடர்ந்து ஒரே கணினியில் குரோம் உலவியை உபயோகித்து வந்தால் ஒவ்வொரு தடவையும் பாஸ்வேர்ட் கொடுப்பதற்கு சிரமப்பட்டு கொண்டு பாஸ்வேர்டை சேமித்து வைத்திருப்போம். இதன் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்காமல் நேரடியாக இந்த தளங்களுக்குள் செல்லலாம். ஆனால் இதில் உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சினை பாதுகாப்பு. மற்றவர்கள் உங்கள் கணினியில் உள்ள குரோம் உலவியை ஓபன் செய்தாலும் உலவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட்களை கண்டறிந்து உங்கள் ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம். பயர்பாக்சில் Master Password என்ற வசதி இருப்பதால் ஓரளவு ஆபத்து குறைவு ஆனால் குரோமில் அந்த வசதி இல்லை என்பதால் யார் வந்து ஓபன் செய்தாலும் சுலபமாக உங்கள் ஆன்லைன் கணக்கின் பாஸ்வேர்ட்களை அறிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினையை தவிர்க்க உள்ளது தான் Simple Password Startup வசதி. 



இந்த நீட்சியை குரோம் உலவியில் இணைத்து விட்டு Tools - Extension - Simple Startup Password - Options பகுதிக்கு சென்று உங்களுக்கு என ஒரு பாஸ்வேர்டை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள். இனி ஒவ்வொரு முறையும் உங்கள் கணினியில் உள்ள குரோம் உலவியை ஓபன் செய்யும் பொழுதும் முகப்பு பக்கத்தில் பாஸ்வேர்ட் கேட்கும் பாஸ்வேர்டை சரியாக கொடுத்தால் தான் உலவியை உங்களால் உபயோகிக்க முடியும் ஒரே முறை தவறாக கொடுத்தாலும் உலவி மூடி விடும்.

பாஸ்வேர்ட் தெரியாமல் ஓபன் செய்பவர்களுக்கு முகப்பு பக்கத்தை பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. இனி உலவியில் உள்ள உங்களின் ரகசியங்களை சுலபமாக பாதுகாத்து கொள்ளலாம்.

சுலபமாக ஞாபகம் வைத்திருக்கும் படி Startup கடவுச்சொல்லை கொடுக்கவும். ஒரு வேலை பாஸ்வேர்டை மறந்து விட்டால் குரோம் உலவியை ரீஇன்ஸ்டால் செய்வதை விட வேறு வழி இல்லை.

நீட்சியை டவுன்லோட் செய்ய - Simple Startup Password 

Comments