BSNL மலிவு விலை டேப்லெட் கணினி வாங்கலாமா, வேண்டாமா?

இந்தியாவில் விலை குறைவாக கொடுக்கும் பொருட்களுக்கு கிராக்கி அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. முதலில் ஆகாஷ் டேப்லெட் வருதுன்னு பீதிய கிளப்பினாங்க சொல்லி ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் வந்த பாடில்லை. அடுத்து இந்த வரிசையில் BSNL கம்பெனியும் குறைந்த விலை டேப்லெட் கணினிகளை அறிமுக படுத்தியது. சரி நாமும் ஒன்னும் வாங்குவோமேன்னு ஒன்னு புக் பண்ணி வாங்கியும் விட்டேன். இதுல எனக்கு பிடிச்ச சில விஷயங்களையும், பிடிக்காத விஷயங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

பிடித்தவைகள்:

  • சாதரணமாக சிறிய ஆன்ட்ராய்ட் போன்களே குறைந்தது ஐந்து ஆயிரத்திற்கு மேல் விற்கும் பொழுது 7" திரை உடைய ஆன்ட்ராய்ட் டேப்லெட் கணினிகளை வெறும் Rs. 3500 க்கு கொடுப்பது பாராட்டுக்குரிய விஷயம். 
  • ஆன்ட்ராய்ட் வகை என்பதால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விதவிதமான கேம்கள், மென்பொருட்களை டவுன்லோட் செய்யலாம்.
  • Battery Capacity நல்லா இருக்கு. நான் தொடர்ந்து உபயோகிக்கல அதானால் ரெண்டு நாளைக்கு ஒரு முறை தான் சார்ஜ் போட வேண்டிய அவசியம் இருக்கு. 
  • Wi-Fi மூலமா இணையம் வேகமாக இயங்குகிறது.  டவுன்லோடிங் ஸ்பீடும் பரவாயில்ல. 
பிடிக்காதவைகள்:
ரூபாய் மூவாயிரத்து ஐநூறு கொடுத்துட்டு ஆப்பிள் ஐபேட் ரேஞ்சுக்கு வசதிகள் இருக்கும்னு எதிர்பார்த்தா தப்பு ஆனால்
  • பணம் கட்டி ரெண்டு நாளுக்குள் அனுப்பிடுரோம்னு சொல்லிட்டு (தொடர் மெயில் தாக்குதலினால்) ஒரு மாதம் கழிச்சு தான் வந்துச்சு.
  • BSNL ஆபர் சிம்கார்ட் தரேன்னு சொல்லி காசு வாங்கிட்டு அந்த சிம்கார்டே அனுப்பல. அதனால் Rs.250 எனக்கு நஷ்டம். 
  • ஆன்ல இருக்கும் பொழுது சார்ஜ் போட்டால் பயங்கர சூடாகுது. அதுல ஒரு சமையலே முடிச்சுடலாம் போல. ஆப் பண்ணி சார்ஜ் போட்டா சூடாகாதான்னு நெனக்காதிங்க அப்பவும் ஆகுது பாதி சமையல் செய்யலாம். 
  • USB போர்ட் இல்ல அதனால நேரடியா பென்டிரைவ் போட முடியாது. அடாப்டர் வச்சு தான் இணைக்க முடியும்.
  • HDMI போர்ட் கேபிள், ஹியர் போன் ஆகியவைகள் இல்ல நாமதான் வாங்கிக்கணும்.
  • பத்து நிமிஷம் யூஸ் பண்ணாலே டேப்லெட் சூடாகிடுது. 
  • இதையெல்லாம் விட செம கடுப்பான விஷயம் 2GB inbuilt மெமரி தரேன்னு சொல்லிட்டு வெறும் 800MB தான் இருந்துச்சு. 
  • சவுண்ட் கிளாரிட்டி பரவாயில்ல, பிக்சர் கிளாரிட்டிபரவாயில்ல, வீடியோ கிளாரிட்டி பரவா இல்ல இப்படி பரவாயில்லைகள் தான் நிறைய உள்ளன.
  • கேமரா சும்மா பேச்சுக்காக... பயங்கர கருப்பா இருக்கிற என்னை கருப்பா பயங்கரமா காட்டுது...

இதுல எதையாவது விட்டுட்டேனா தெரியல நண்பர்கள் சந்தேகம் இருந்தால் கருத்துரையில் கேட்கவும்.

வாங்கலாமா வேணாமா?

எனக்கு பிடிச்சதும் பிடிக்காததும் சொல்லிட்டேன் இனி வாங்கலாமா வேணாமா என்பதை முடிவு எடுக்க வேண்டியது நீங்க தான். ஆனால் என் நண்பன் ஒருவன் வாங்கி இருக்கான் அதுல 2GB மெமரி சரியா இருக்கு ஆதலால் எல்லாமே இது போல் தான் இருக்கும் என்றும் கூற முடியவில்லை.

மூவாயிரத்து ஐநூறு பெரிய விஷயம் இல்லை என்பவர்கள் தாராளமாக வாங்கி கொள்ளுங்கள். இத வாங்குறத விட இன்னும் மூவாயிரம் அதிகம் போட்டு மைக்ரோமேக்சின் funbook டேப்லெட் வாங்கி கொள்ளலாம்  என்பது என் கருத்து.

Comments