ஜிமெயிலில் "Custom Themes" புதிய பயனுள்ள வசதி

ஜிமெயிலில் தீம்கள் என்ற வசதி உள்ளது பற்றி அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் அவர்களின் ஜிமெயில் பக்கத்தை வித விதமான ஸ்டைல்களில் அழகு படுத்தி கொள்ளலாம். மேலும் ஒரு புதிய வசதியாக ஜிமெயிலில் இப்பொழுது Custom Theme என்ற வசதியை அறிமுக படுத்தி உள்ளனர். இந்த வசதியின் மூலம் உங்களுக்கு தேவையான போட்டோவை ஜிமெயிலில் பின்பக்க படமாக (Background image) வைத்து கொள்ளலாம். Custom Theme வசதி "Light" மற்றும் "Dark" என்ற இரண்டு தீம்களை கொண்டுள்ளது.


முதலில் ஜிமெயில் தளத்தை ஓபன் செய்து கொண்டு Settings ஐகானை கிளிக் செய்து அதில் வரும் Themes பகுதியை தேர்வு செய்தால் அதில் Custom Themes என்ற புதிய பகுதியை காணலாம். அதில் சென்று உங்களுக்கு பிடித்த போட்டோவை தேர்வு செய்து கொள்ளலாம்.


உங்களிடம் எந்த போட்டோவும் இல்லை என்றாலும் நீங்கள் கூகுள் பிளசில் பகிர்ந்த போட்டோவையும் தேர்வு செய்து கொள்ளலாம். கூகுள் பிளசில் உள்ள போட்டோக்களும் பிடிக்கவில்லை என்றாலும் அதில் Featured பகுதியை கிளிக் செய்தால் அழகான போட்டோக்களை பல பிரிவுகளாக வகை படுத்தி உள்ளனர். நீங்கள் விருப்பப்பட்டால் அவைகளையும் உங்கள் தீமாக தேர்வு செய்து கொள்ளலாம். 


இனி உங்களுக்கு பிடித்த புகைப்படங்களை வைத்து ஜிமெயிலை அழகாக மாற்றுங்கள்.

Comments