பேஸ்புக்கில் "Star Close Friends" வசதி

காலையில் எப்பவும் போல அப்டேட்ஸ் ஏதாவது பார்க்கலாம்னு பேஸ்புக்கை ஓபன் பண்ணா முகப்பு பக்கத்தில் Star Your Friends என்ற ஒரு அறிவிப்பு வந்து இருந்தது. என்னென்னு பார்த்தல் அது மிகவும் பயனுள்ள வசதியாக தெரிந்தது சரி இதை பற்றி நம் வாசகர்களுக்கு தெரிவிப்போம் என்று இங்கு பதிவாக இங்கே.


ஜிமெயிலில் மொத்த மெயில்களில் இருந்து முக்கியமான ஈமெயில்களை தனியே பிரித்து காட்ட Star வசதி இருக்கிறதல்லவா அது போல தான் இந்த வசதியும். பேஸ்புக்கில் ஒவ்வொருவருக்கும் ஏராளமானவர்கள் நண்பர்களாக உள்ளனர். ஒரு சிலர் ஆயிரத்திற்கும் அதிகமான நண்பர்களை கூட பெற்று இருக்கின்றனர். இந்த பட்டியலில் சிலர் உங்களின் நெருங்கிய நண்பராக இருக்கலாம்  மொத்த நண்பர்களோடு இவர்களும் கலந்து இருப்பதால் இவர்களின் ஒரு சில முக்கியமான பகிர்தல்களை அல்லது அவர்களின் செயல்பாடுகளை(Activity) நீங்கள் தவற விடலாம் அந்த பிரச்சினைகளை தவிர்க்க வந்துள்ளது தான் இந்த Star வசதி.




இதில் உங்களின் நெருங்கிய நண்பர்களை தேர்வு செய்து விட்டால் அவர்கள் உங்களின் Close Friends பகுதியில் சேர்ந்து விடுவார்கள். பிறகு நீங்கள் இரண்டு நாள் கழித்து பேஸ்புக் சென்று Close Friends பகுதிக்கு சென்று பார்த்தாலும் பகிர்தல்களை சுலபமாக கண்டறியலாம் அதிக நேரம் தேட வேண்டிய அவசியமில்லை. இந்த பட்டியலில் உள்ளனர்களின் பகிர்தல்கள், Photos, Likes, Comments இப்படி இவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் இதில் கண்டறிய முடியும்.

இந்த Close Friends பட்டியலை திருத்தம் செய்ய Close Friends லிங்கில் சென்று அந்த பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். அடுத்து வலது புறத்தின் மேலே உள்ள Manage Lists என்பதை அழுத்தி Edit Lists பகுதிக்கு சென்று இந்த பட்டியலை மாற்றி அமைக்கலாம். 


இனி நெருங்கிய நண்பர்களின் அப்டேட்களை தவற விடாமல் பார்த்து அறிந்து கொள்ளலாம். 

Comments