கூகுள் தேடுபொறியில் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

தேடியந்திரங்களில் யாரும் தொட முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது கூகுள் இணையதளம் ஆகும். மொபைல்களில் இன்டர்நெட் வசதி வந்த பிறகு கிராமங்களில் கணினியை உபயோகிக்காதவர்கள் கூட மொபைல் மூலம் கூகுளின் வசதியை அறிந்துள்ளனர். இவ்வளவு பேரையும் கவர்ந்திழுக்க காரணம் அதிலுள்ள வசதிகள்.

அதுமட்டுமில்லாமல் தேய்ந்து போன ரெக்கார்டை திரும்ப திரும்ப தேய்க்காமல் வாசகர்கள் பயன்பெறும் வகையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய வசதிகளை புகுத்தி வருவதே கூகுளின் சிறப்பு. அந்த வகையில் தற்பொழுது சில புதிய வசதிகளை கூகுள் தேடியந்திரந்தில் அறிமுக படுத்தி உள்ளனர். அவைகளை கீழே பார்ப்போம்.

1)Scientific Calculator :
கூகுள் தேடியந்திரத்தை வெறும் தேடு பொறியாக மட்டுமின்றி வேறு பல காரணங்களுக்கும் உபயோகிக்கலாம். அதில் முக்கியாமனது கால்குலேட்டர் வசதி. 1+1 என்னன்னு கேட்டால் உடனே சொல்லிடுவோம் 44646*545456 என்னெவென்று கேட்டால் உடனே நாம் தேடுவது கால்குலேட்டரை தான்.  மற்றும் ஏதேனும் மிகவும் கடினமான scientific கணிதங்களை போட Scientific Calculator இருந்தால் தான் போட முடியும்.  இனி இதற்க்காக எங்கும் அலைய வேண்டியதில்லை கூகுளில் Scientific Calculator வசதியை அறிமுக படுத்தி உள்ளனர்.

கூகுளை திறந்து சர்ச் பாரில் சாதரணமாக  1+1 டைப் செய்தால் அதற்க்கான விடை கீழே இருப்பதை போன்று scientific Calculator-ல் வந்திருப்பதை காணலாம்.

இதில் எவ்வளவு கடினமான கணிதங்களுக்கும் எளிதாக விடையை தெரிந்து கொள்ளலாம். மற்றும் இதில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதியும் இருப்பதால் 2+2 என சொன்னாலே அதற்க்கான விடையை அறிந்து கொள்ளலாம். 

இந்த கால்குலேட்டரின் உதவியுடன் நான் போட்ட சில சிக்கலான கணிதங்களை கீழே காணுங்கள்.



2) Unit Converter:
கால்குலேட்டர் வசதியோடு மற்றொரு பயனுள்ள வசதியையும் அளித்துள்ளது.   அலகுகளை ஒன்றிலிருந்து மற்றொன்டிற்கு மாற்ற உதவும் வசதியை கொடுத்ள்ளனர்.

அதாவது 1 டிகிரி செல்சியஸ் என்பது எத்தனை பாரன்ஹீட் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 10km என்பது எத்தனை மைல் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 1452 டன் என்பது எத்தனை கிலோ என தெரிய வேண்டுமா? அனைத்தையும் சுலபமாக கூகுள் தேடியந்திரத்தில் தெரிந்து கொள்ளலாம்.




இது போன்று அனைத்து அலகுகளையும் உங்களுக்கு தேவையானத்தில் மாற்றி கொள்ளலாம். 

இந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயன்படும். ஆகவே உங்களுக்கு மாணவர்களிடத்தில் இந்த வசதியை அறிமுக படுத்துங்கள். 


இந்த பதிவு பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments