26 அக்டோபரில் வெளி வருகிறது Windows 8 சலுகை விலையில் அப்டேட் செய்ய


கணினி துறையில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் இயங்கு தளமான விண்டோசின் அடுத்த பதிப்பை வெளியிட இருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். முந்தைய பதிப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தொடுதிரை வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள Windows 8 இயங்கு தளத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்க்கு முன் விண்டோஸ் 8 -இன் Consumer Preview மற்றும் Release Preview என்ற சோதனை பதிப்புகளை வெளியிட்டு இருந்தது. இந்த இரண்டு பதிப்புகளையும் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கியது. பயனர்களின் கருத்துக்களின் படி அதில் இருந்த பிழைகளை நீக்கி வரும் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி இந்த Windows 8 மென்பொருள் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

ஆகவே விண்டோஸ் 8 சோதனை பதிப்புகளை உபயோகப்படுத்தி கொண்டிருக்கும் பயனர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் அதனை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமெனில் விண்டோஸ் 8 மென்பொருளின் புதிய வெர்சனை உங்கள் கணினியில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் விண்டோசின் முந்தைய பதிப்புகலான XP, Vista, Windows 7 ஆகியவைகளை உபயோகித்து கொண்டிருந்தால் இந்த புதிய விண்டோஸ் 8 மென்பொருளை சலுகை விலையில் அப்டேட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.

அதாவது வரும் 31 January 2013 முன் விண்டோஸ் 8 மென்பொருளை $39.95 (around Rs. 2000) கொடுத்து ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம். நேரடியாக ஸ்டோர்களில் சென்று DVD யாக வாங்கினால் $69.99 (around Rs. 4000) பெற்று கொள்ளலாம். 

இந்த சலுகை விலை மேற்கூறிய தேதிக்குள் அப்டேட் செய்பவர்களுக்கு மட்டுமே.  ஆகவே உங்களுக்கு விண்டோஸ் 8 மென்பொருள் வேண்டுமென்றால் வெளியிட்ட தேதியிலிருந்து மேலே குறிப்பிட்ட தேதிக்குள் அப்டேட் செய்து கொள்ளவும். மற்றொரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் விண்டோசின் ஒரிஜினல் வெர்சன் உபயோகிப்பவர்கள் மட்டுமே இந்த சலுகை வசதியை பெற முடியும்.

Comments