நம்முடைய தளம் உலக அளவில் எந்த இடத்தில் இருக்கிறது என்று www.alexa.com சென்று பார்ப்போம் ஆனால் அதை நம்முடைய தளத்திலேயே பார்த்தால் எப்படி இருக்கும் அதை தான் இன்று நாம் Alexa Traffic Widget எப்படி நம்முடைய பிளாக்கில் இணைப்பது என்று பாப்போம். இது மிகவும் சுலபமான வழி. இந்த வசதியை பெற நீங்கள் பயனர் கணக்கை தொடங்க வேண்டியதில்லை.alexa rank பெற இங்கு க்ளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளதை போல் விண்டோ ஓபன் ஆகும்.
இங்கு கொடுக்கபட்டிருக்கும் இடத்தில உங்களுடைய பிளாக்கின் முகவரியை கொடுக்கவும். பின்பு அதற்கு பக்கத்தில் இருக்கும் Build Widget என்ற பட்டனை அழுத்தவும். (புரியாதவர்கள் படத்தை க்ளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்). Build Widget பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபன் ஆகும்.
இந்த விண்டோவில் மூன்று வகையான alexa traffic rank மாடல்கள் கிடைக்கும். இதில் உங்களுக்கு தேவையான வடிவின் நேராக உள்ள HTML கோடினை காப்பி செய்து கொள்ளவும்.(புரியாதவர்கள் படத்தை க்ளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்). காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கில் sidebar இல் பேஸ்ட் செய்யவும்.
DASSBOARD- LAYOUT- ADD A GADGET - HTML/ JAVA SCRIPT -சென்று பேஸ்ட் செய்யவும். முடிவில் SAVE செய்யவும். அவ்வளவுதான் உங்கள் பிளாக்கில் ALAXA TRAFFIC RANK WIDGET - வந்து இருக்கும். இனிமேல் நீங்கள் உங்களின் ரேங்க் தெரிந்துகொள்ள எந்த வேறு சைட்டுக்கும் செல்ல வேண்டாம். உங்களின் பிளாக்கிலேயே தெரிந்து கொள்ளலாம் வரும் பதிவில் எப்படி நம்முடைய பிளாக்கின் ALEXA ரேங்கை உயர்த்துவது என்று பார்ப்போம். அவ்வளவு தான் அடுத்து என்ன செய்ய வேண்டும். என்ன மறந்திடீங்கள உங்களின் கருத்துக்களை கொஞ்சம் சொல்லிவிட்டு செல்லுங்கள்.
Comments