நம் பிலாக்கரில் "Top Commentators Widget" கொண்டு வர

நாம் இங்கு ஒரு அற்புதமான விட்ஜெட்டை பற்றி இங்கு பார்க்க போகிறோம். நாம் நம்முடைய பிளாக்கில் அவரவர் வசதிகேற்ப பதிவிடுகிறோம். அந்த பதிவு நம் வாசகர்களுக்கு பிடித்திருந்தால்
அதற்கு அவர்கள்  பின்னூட்டம் இடுகிறார்கள் இதை நாம் அறிந்ததே. அப்படி இடப்படும் பின்னூட்டங்கள் இதுவரை எத்தனை உள்ளது என்பதை நாம் அறிவது கடினமே அதுமட்டுமில்லாமல் இதுவரை எத்தனை பேர் எத்தனை கமென்ட் போட்டுள்ளார்கள் என்று அறிவது மிகவும் கடினமே. அந்த குறையை தீர்ப்பதற்காகவே இந்த பதிவு.  இது நம் தளத்தில் கமென்ட் போடும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்த மாதிரி இருக்கும்.  இந்த விட்ஜெட்டை நம் தளத்தில் சேர்ப்பது மிகவும் சுலபமான விஷயமே. இதை நம் சைடு பாரில் கொண்டு வர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.

 காப்பி செய்து கொண்டு உங்கள் தளத்தில்

  • DASSBOARD
  • DESIGN 
  • ADD A GADGET 
  • HTML JAVA SCRIPT - சென்று பேஸ்ட் செய்து இதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய வேண்டும். 
  • vandhemadharam என்று வரும் இடத்தில் உங்களுடைய பிளாக்கின் முகவரியை கொடுக்கவும். 

கீழே உள்ள படத்தையும்  பார்க்கவும்   


அடுத்து num=100 என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு தேவையென்றால் மாற்றி கொள்ளலாம். இது உங்கள் தளத்தின் வாசகர்ளின் எண்ணிக்கையாகும்.  
அவ்வளவு தான் கீழே உள்ள save பட்டனை சொடுக்கி உங்கள் பிளாக்கில் சென்று பார்த்தால் "Top commentator widget" உங்களுடைய தளத்தில் வந்திருக்கும்.   

UPDATE

குறிப்பு: பின்னூட்டத்தில் நம்ம வால்பையன் autor comment எண்ணிக்கை வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டாதனால் இது அனைவருக்கும் தெரிய படுத்த பதிவை அப்டேட் செய்கிறேன் 
உங்களுடைய கமெண்டின் எண்ணிக்கை வராமல் இருக்க "yourname" என்று இருக்கும் இடத்தில் "Blogger profile name"  டைப் செய்து save பண்ணி விடுங்கள்.   அதாவது உங்களுடைய பிலாக்கர் சுய விவரத்தில் நீங்கள் தமிழில் கொடுத்து இருந்தால் தமிழிலும்,  ஆங்கிலத்தில் கொடுத்து இருந்தால் ஆங்கிலத்திலும்  அப்படியே கொடுக்க வேண்டும்.  மாற்ற கூடாது. 

பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்  

டுடே லொள்ளு 

Photobucket

நீங்க ரெண்டே பேரு விளையாடிக்கிட்டு இருந்தா நாங்க எதுக்குடா 

Comments