பிலாக்கரில் "Subcribe by Email" வசதியை கொண்டு வர

 பதிவு எழுதும் பெரும்பாலானவர்களின் விருப்பம் தன்னுடைய தன்னுடைய தளத்தினை பிரபல படுத்துவதே ஆகும். அப்படி பிரபல படுத்தவே நாமும் தினமும் பதிவை எழுதுகிறோம். ஆனால் கோடிக்கணக்கான வாசகர்கள் கொண்ட இந்த இணைய உலகில்  தினம் தினம் புது புது வாசகர்கள் நம் தளத்திருக்கு வருவார்கள். ஒருமுறை வரும் அனைவரும் அடுத்த முறை வருவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று அப்படி உள்ள இந்த இணைய உலகில்   இந்த வசதியை கொடுத்தால் அவர்களின் மெயிலுக்கு நம்முடைய பதிவின் சிறு முன்னோட்டத்தை அனுப்பினால் அவர்கள் நம்முடைய பதிவு பிடித்திருந்தால் நம்முடைய தளத்திற்கு வருவார்கள் இதன் மூலம் நம்முடைய பக்கத்தை மேலும் பிரபலமடைய செய்ய முடியும்.

இந்த அற்புத சேவையை நமக்கு தருவது கூகுளின் ஒரு பகுதியான Feed Burner என்ற தளம். இந்த லிங்கில் செல்லவும்.   http://feedburner.google.com உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.  அதில் உங்கள் தள முகவரி கொடுத்து NEXT பட்டனை அழுத்தவும்.

  • அடுத்து வரும் விண்டோவில் NEXT பட்டனை அழுத்தவும்.   
  • அதற்க்கு அடுத்து வரும் விண்டோவிலும் NEXT அழுத்தவும்.  
  • அதற்க்கு அடுத்து வரும் விண்டோவிலும் NEXT அழுத்தவும்
  • அதற்க்கு அடுத்து வரும் விண்டோவிலும் NEXT அழுத்தவும்.
கடைசியாக உங்கள் தளம் சேர்ந்து விடும். இப்பொழுது உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • Publicize - Emai Subscriptions - கிளிக் செய்யவும்.
  • Activate - கிளிக் செய்யுங்கள்.
  • படத்தில் உள்ளது போல் செட் செய்து விட்டு Go கிளிக் செய்யுங்கள். 
  • படத்தில் காட்டியுள்ளது போல் Add Widget கிளிக் செய்தால் போதும் இந்த விட்ஜெட் உங்கள் தளத்தில் சேர்ந்து விடும்.
இன்னும் ஒரு சிறிய வேலை உள்ளது. Settings - Side Feed - சென்று Full or Short எது வேண்டுமோ செலக்ட் செய்து Save செய்து விடுங்கள்.

பதிவில் வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் .

டுடே லொள்ளு     
Photobucket
Elephant drinking water
இந்த எவ்ளோ தண்ணி தாம்பா குடிக்கும் 

Comments