புதியவர்களுக்காக: பிளாக்கர் பதிவில் எப்படி PDFபைல்கள் இணைப்பது

நம்முடைய பிளாக்கர் பதிவில் எப்படி Pdf பைல்கள் இணைப்பது என்று பார்ப்போம். இந்த முறையில் pdf மட்டுமல்லாது .Pdf .Txt .doc .xls ஆகிய பைல்கள் இணைக்கலாம். நம்முடைய பிளாக்கரில் நேரடியாக டாகுமென்ட் பைல்கள் இணைக்கும் வசதி இல்லை ஆகையால் வேறு ஒரு தளத்தில் அப்லோட் செய்து விட்டு பின்பு அந்த பைலுக்கு இணைப்பு கொடுத்தால் மட்டுமே நம்முடைய பதிவில் அந்த டாகுமென்ட் பைல்கள் கொண்டு வரமுடியும்.  அதை எப்படி நம் பதிவில் கொண்டு வருவது என்று இங்கு பார்ப்போம்.
 • இதற்க்கு முதலில் இந்த Scribd தளத்திற்கு செல்லவும்.
 • இதில் பயனர் கணக்கு இல்லையென்றால் உருவாக்கி கொள்ளவும். அல்லது பேஸ்புக்கில் பயனர் கணக்கு இருந்தால் அதன் மூலம் உள்ளே நுழைந்து கொள்ளும் வசதி உள்ளது.
 • உதவிக்கு கீழே உள்ள படத்தில் பாருங்கள்.  
 • படத்தில் காட்டியிருக்கும் பட்டனை அழுத்தினால் வரும் விண்டோவில் Allow என்ற பட்டனை அழுத்தி உள்ளே நுழைந்து கொள்ளவும்.
 • உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Upload என்பதை கிளிக் செய்யவும்.
 • Upload க்ளிக் செய்து உங்கள் டாகுமென்ட் பைலை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
 • உங்கள் பைல் அப்லோட் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 • இது போன்று வந்ததும் உங்கள் பைல்களுக்கான மாற்றங்கள் செய்த பின்னர் கீழே உள்ள Save என்ற பட்டனை அழுத்தவும்.  
 • உங்கள் பைல் சேவ் ஆகி வரும். அடுத்து நீங்கள் சேர்த்த பைல் மீது கிளிக் செய்யுங்கள்.
 • உங்கள் பைல் ஓபன் ஆகி வரும். அந்த பைலுக்கான Embeded கீழே வலது மக்கம் இருக்கும் அதை காப்பி செய்து கொள்ளுங்கள். 
 • படத்தில் காட்டியுள்ள கோடிங்கை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் பதிவில் போஸ்ட் எடிட்டர் பகுதியில் உள்ள   Edit Html மோடில் செல்லவும்.
 •  நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்துவிட்டு திரும்பவும் Compose பட்டனை அழுத்தினால் நீங்கள் சேர்த்த டாகுமென்ட் பைல் உங்கள் பதிவில் வந்திருக்கும். இப்பொழுது உங்கள் பதிவை பப்ளிஷ் செய்து பாருங்கள். 

உங்கள் பதிவில் நீங்கள் சேர்த்த டாகுமென்ட் பைல் வந்திருக்கும். அவ்வளவு தான் இது போல் நீங்கள் பதிவில் நீங்கள் விரும்பிய பைல்களை சேர்த்து கொள்ளலாம்.

Comments