நாம் வலைப்பூவில் தினம் தினம் புதிய பதிவுகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் எந்தெந்த இயங்கு தளங்களில் இருந்து பார்க்கிறார்கள் என்ற விவரங்களை Blogger Stats சென்றால் பார்த்து கொள்ளலாம். அதில் ஐ போன்கள் மூலம் எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற விவரமும் தெரியும். ஐ போன்கள் விலையில் அதிகமானவை. ஆகையால் நம்மில் அனைவரும் ஐ போன்கள் வைத்திருக்கும் வாய்ப்பு இல்லை. ஆகையால் ஐபோனில் நம் பதிவு எப்படி தெரியும் என்று நம்மால் பார்க்கவே முடியாது.
- இனி அந்த கவலையை விடுங்கள் இதற்காகவே ஒரு தளம் உள்ளது
- கூகுளில் எதையோ தேடி கொண்டிருக்கும் போது கிடைத்தது இந்த தளம்.
- இந்த தளம் சென்று நம் பிளாக்கின் url கொடுத்து என்ட்டர் தட்டினால் போதும் நம் உடனே நம் தளம் அங்கு இருக்கும் ஐபோன் மாதிரியில் அழகாக தெரியும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
- இதில் நம் கீபோர்டின் space bar அழுத்தி ஐபோனை நம் விருப்பம் போல் திருப்பி கொள்ளலாம்.
- அதில் உள்ள Tips and Options அழுத்தினால் அஹில் உள்ள மேலும் பல வசதிகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு செல்ல இந்த லிங்கில் க்ளிக் Test IPhone செய்யுங்கள்.
டுடே லொள்ளு
Comments