- இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணினியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.
- இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை ஆன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.
- எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்வதை முற்றிலும் தவிருங்கள் ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள் ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.
- இலவச மென்பொருட்களை தொகுத்து வழங்கும் தளங்களான Cnet.com , brothersoft.com மற்றும் சில தளங்களில் இருந்தே டவுன்லோட் செய்யவும்.
- டொரன்ட் மூலம் மென்பொருளை டவுன்லோட் செய்வது முற்றிலும் தவிர்க்கவும் ஏனென்றால் இந்த முறையில் தான் நம் கணினி மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
- தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து டவுன்லோட் செய்தாலும் கூட நாம் டவுன்லோட் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்து டவுன்லோட் செய்யவும்.
- குறிப்பாக Cnet.com தளத்தில் டவுன்லோட் செய்யும் போது அதனுடைய Product Ranking 1 முதல் 2 வரை உள்ள மென்பொருட்களை மட்டுமே டவுன்லோட் செய்யவும்.
- எந்த தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யும்போது மொத்த டவுன்லோட் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை டவுன்லோட் செய்தார்கள் என்று பார்த்து அதிகம் பேர் பார்த்து இருந்தால் அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது ஆகவே அந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
- ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணினியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள்.
- இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணினியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம்.
இன்றைய குரோம் நீட்சி- Chrome SEO
நீட்சிகள் வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள நீட்சி இந்த Chrome SEO (Search Engine Optimization). இந்த நீட்சியை பதிவர்கள் அனைவரும் கட்டாயம் உபயோகிக்கவும். என்றால் இந்த நீட்சியின் மூலம் தேடியந்திரங்கள் மூலம் நம் பிளாக்கிற்கு எத்தனை பேர் வந்துள்ளனர். மற்றும் நம் தளத்திற்கு மற்ற தளங்களில் இருந்து கிடைக்கப்பட்டுள்ள Backlinks எவ்வளவு மற்றும் traffic rank, Search Stats, Bookmarks, cached, On site, Domain Details போன்ற வசதிகளை இதில் அறிந்து கொள்ளலாம்.
டுடே லொள்ளு
இந்த கேரட் சூப்பரா இருக்கு வேணுமா
டிஸ்கி: அடுத்த ஒருவாரம் கோவிலுக்கு செல்வதால் ஒரு வாரத்திற்கு எந்த பதிவும் வராது, 27-12-2010 அன்று வழக்கம் போல பதிவுகள் மீண்டும் வெளிவரும்.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளையும் மற்றும் ஓட்டுக்களையும் மறக்காமல் போட்டு செல்லவும். |
Comments