
இனி நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு ஏதேனும் முக்கிய மெயில் வந்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் சாட் வந்தாலோ இனி நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும். அதை பார்த்து முக்கிய நபரிடம் இருந்து வந்தால் நாம் அதை தவறவிடாமல் உடனே அதற்க்கு பதில் அளிக்கலாம்.
புதிய மெயில் வந்தால்
புதிய சாட்டிங் வந்தால்
- இந்த வசதியை பெற இந்த லிங்கில் க்ளிக் செய்து www.gmail.com உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
- பின்பு ஜிமெயிலில் Settings க்ளிக் செய்யுங்கள்.
- பிறகு அங்கு உள்ள Destop Notification வசதிக்கு சென்று கீழே படத்தில் உள்ள மாதிரி தேர்வு செய்யவும்.
- படத்தில் உள்ளதை போல தேர்வு செய்ததும் கீழே கடைசியில் உள்ள SAVE CHANGES என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள்.
- அவ்வளவு தான் இனி எப்பொழுதும் ஆன்லைனில் இருந்து கொண்டு மெயில் வருமா,வருமா என பார்த்து கொண்டு இருக்க தேவையில்லை புதிய மெயில் வந்தால் நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு அறிவிப்பு செய்தி வரும்.
- சாட்டிங் வந்தாலும் இப்படி நமக்கு செய்தி வரும்.
டுடே லொள்ளு
கொஞ்சம் ஏமாந்தேன் அதுக்குள்ள என் தலைய இப்படி ஆக்கி புட்டாங்களே.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments