இப்பொழுது இலவசமாக கிடைக்காதது எதுவுமே இல்லை. இணையத்தில் இலவச மென்பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள மென்பொருள் இந்த Liberkey 5.2.0321 என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளில் சுமார் 309 போர்டபிள் மென்பொருட்கள் அடங்கி உள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் நம் கணினிகளுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்கள். இந்த மென்பொருட்களில் மென்பொருட்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு வாசகர்கள் சுலபமாக உபயோகிக்கும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள்.
- இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
- பிறகு அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் உள்ள Liberkey Tools - Manage applications - Install an application Suite இந்த முறையில் க்ளிக் செய்யுங்கள்.
- அடுத்து உங்களுக்கு வேறு விண்டோ வரும். அதில் உள்ள Download the list of available suits என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
- வரும் விண்டோவில் இதில் உள்ள மென்பொருட்களின் List Basic Suite matrum Standard Suite என்று இரு வகையாக பிரிக்க பட்டிருக்கும்.
- அதில் கீழே உள்ள Install all applications on the Selected tool என்ற பட்டனை அழுத்தி மென்பொருட்களை நிருவிகொல்லுங்கள்.
- இதில் உங்களுக்கு வேண்டாத அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள மென்பொருட்களை டிக் குறியை எடுத்துவிட்டு நீக்கி விடலாம்.
- இப்பொழுது உங்களுக்கு தேவையான மென்பொருள் இந்த liberkey மென்பொருளில் சேர்ந்து விடும்.
- இந்த மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவ வேண்டாம். நேரடியாக உங்களுக்கு தேவையான மென்பொருளை க்ளிக் செய்து உபயோகித்து கொள்ளலாம்.
டுடே லொள்ளு
உலகம் பூராவும் சைக்கிள்லே சுத்த போறேன்னு சொல்லிட்டு இங்கயே இவ்ளோ நேரம் ஓட்டிகிட்டு இருந்தா எப்புடி வேகமாக அடுத்த கடைக்கு போங்க
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments