மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் பயர்பாக்ஸ் 4b5 டவுன்லோட் செய்ய

நாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது இந்த பிரவுசர்களாகும். இணையத்தில் நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் இதில் பெரும்பாலனாவர்களால் உபயோகபடுத்த படுவது IE, chrome, மற்றும் பயர்பாக்ஸ் உலாவியாகும். இதில் பயர்பாக்ஸ் பிரவுசர் இரண்டாவது மிகப்பெரிய பிரவுசராகும். முதலிடத்தில் இருப்பது IE ஆகும். விண்டோஸ் கணினி வாங்கும் போதே இந்த IE பிரவுசரை நிறுவி கொடுப்பதால் தான் இந்த உலவி முதல் இடத்தில உள்ளது. இல்லை என்றால் பயர்பாக்ஸ் தான் முதலிடத்தில் இருக்கும். 

சென்ற மாதம் தான் பயர்பாக்ஸ் 4 வெளியிடப்பட்டு இணைய டவுன்லோடில் சாதனை நிகழ்த்தியது. இதுவரை இந்த பயர்பாக்ஸ் 4 உலவியை 112,923,144 பேர் டவுன்லோட் செய்து உள்ளனர். வெளியிட்ட குறைந்த நாட்களிலேயே இவ்வளவு பேர் டவுன்லோட் செய்த இந்த மென்பொருள் தற்போது மேலும் பல வசதிகளை மேம்படுத்தி தனது புதிய பதிப்பான பயர்பாக்ஸ் 4b5 வெளியிட்டுள்ளது. ஆனால் இது முதலில் சோதனை(Beta) ஓட்டமாகவே விடப்பட்டுள்ளது.


மேம்படுத்தப்பட்ட வசதிகள்:

? Firefox - விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா உபயோகிப்பவர்கள் பயர்பாக்சின் பிரவுசரில் உள்ள பட்டன்கள் புதிய மற்றும் சிறந்த தோற்றத்தை காட்டுகிறது.
? HSTS - இந்த வெர்சனில் HSTS Protocol உதவியுடன் நம் பிரவுசரில் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தும் வசதியை ஏற்படுதிள்ளது. ஹாக்கர்களிடம் நம் கணினி பாதுகாக்க படுகிறது.
? Audio API - இணையத்தில் இருக்கும் மீடியா பைல்களை கையாள புதிய வசதியை கொடுத்துள்ளது. 

கீழே உள்ள இணைப்புகளில் சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
விண்டோஸ் கணினிகளுக்கு(English) - Download
லினக்ஸ் கணினிகளுக்கு(English) - Download
Mac கணினிகளுக்கு             (English)- Download 

டுடே லொள்ளு 

தெரியாம இந்த பதிவுலகம் பக்கம் வந்துட்டேன், ஆளாளுக்கு டிப்ஸ் தரேன்னு சொல்லி என்ன இப்படிபண்ணிட்டாங்களே....  

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments