கூகுள் தேடியந்திரத்தில் புதிய பயனுள்ள வசதி

இணையத்தில் கூகுள் தளத்தை பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இணையத்தில் கொட்டிகிடக்கும் கோடி தகவல்களில் நமக்கு தேவையானதை நொடிபொழுதில் தேடி நமக்கு கொடுக்கும் மிக சிறந்த பணியை இந்த தேடியந்திரங்கள் செய்கிறது. அதிலும் கூகுளில் செயல்பாடு பிரம்மிக்க வைக்கிறது. ஒருவேளை இந்த தேடியந்திரங்கள் இல்லை என்றால் நம்முடையை நிலைமையை யோசித்து பாருங்கள்.  கூகுள் தேடியந்திரம் அடிக்கடி ஏதாவது ஒரு புதிய வசதிகளை வாசகர்களுக்கு கொடுத்து கொண்டே இருப்பார்கள். தற்போதும் ஒரு புதிய வசதியை நமக்கு கொடுத்துள்ளனர். 

இனி கூகுள் தேடியந்திரத்தில் முடிவுகளில்என்ற பட்டன் வரும். கூகுளில் நமக்கு கிடைக்கும் முடிவு பயனுள்ளதாக இருந்தால் அதற்க்கு நேரே உள்ள இந்த பட்டனை க்ளிக் செய்து ஓட்டு போட்டு விட்டால் அடுத்தவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.  கூகுள் இனி ஓட்டுக்களை வைத்தே பதிவுகளை முன்னிலை படுத்தும். ஆகவே மற்ற தேவையில்லாத தளங்கள் கூகுளில் வருவது முற்றிலும் தடுக்கப்படும்.

எப்பொழுதுமே கூகுளில் ஏதாவது ஒரு புதிய வசதியை பொது சேவைக்கு வெளியிடுவதற்கு முன் அந்த வசதியை சோதனை (Experimental) ஓட்டமாக தான் வெளியிடுவார்கள். அதே போல் தான் இந்த +1 வசதியையும் நமக்கு அறிமுக படுத்தி உள்ளார்கள். 
  • இந்த வசதியை உங்கள் கணினியிலும் கொண்டு வர முதலில் உங்கள் கூகுள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிளாக்கர், யூடுப், ஜிமெயில் இப்படி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
  • அடுத்து இந்த லிங்கில் க்ளிக் செய்து கூகுள் தளத்திற்கு செல்லுங்கள்.
  • அங்கு தங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Join this experimental என்ற ஒரு பட்டன் இருக்கும் அதில் க்ளிக் செய்யுங்கள்.
  • அந்த பட்டனை அழுத்தியவுடன் அந்த +1 பட்டன் உங்கள் கூகுள் கணக்கில் சேர்ந்து விடும். 
  • இப்பொழுது கூகுள் தளத்தில் சென்று ஏதாவது தேடி பெற்று இதில் சிறந்த தளத்திற்கு உங்கள் மதிப்பெண்ணை இட்டு செல்லுங்கள். 
  • தேடலில் தேவையற்ற தளங்களை தடை செய்யுங்கள். 
  • இந்த வசதி கூகுளின் புதிய டொமைன்கலான plus.me அல்லது plusone.me போன்ற தளங்களுக்கு மாற்ற பட வாய்ப்புள்ளது. இதில் plus.me பெயருக்கு தான் அதிக வாய்ப்பிருக்கிறது.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் 

 நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே தமிழ்மண ஓட்டு பட்டையில் ஓட்டு போடும் நண்பர்கள் தயவு செய்து கருத்துரையில் தெரிவிக்கவும். ஓட்டு போடும் பொழுது ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் பிழை செய்தி வந்தாலும் என்ன என்று தெரிவிக்கவும். சிறிய பிரச்சினைக்காகவே கேட்கிறேன் ஆதலால் யாரும் கிண்டலாக பொய் கூற வேண்டாம்.

டுடே லொள்ளு 
என்னப்பா இது எந்த பக்கத்த திருப்புனாலும் இந்த மோசமா பின்லேடன் சாரி ஒசாமா பின்லேடன் பத்தியே போட்டு இருக்கு! 
யாருப்பா அது ஏதாவது அரசியல் கட்சி தலைவரா???...

Comments