நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். உலகளவில் கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.இது உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.
போர்டபிள் என்றால் என்ன:
இந்த மென்பொருள் தற்போது போர்டபிள் வெர்சனாக வெளிவந்துள்ளது. போர்டபிள் என்பது இந்த வகை மென்பொருட்களை நாம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. டவுன்லோட் செய்ததும் நேரடியாக இயக்கலாம். இதனால் இந்த மென்பொருள் கணினி டிரைவ்களில் காலி இடத்தை எடுத்து கொள்ளாது. மற்றும் பென்டிரைவில் காப்பி செய்து கொண்டு எந்த கணினியிலும் நேரடியாக இயக்கலாம்.
புதிய பதிப்பில் உள்ள பயன்கள் சில:
- ப்ளாஷ் பிளேயரினால் உருவாகும் தேவையில்லாத பைல்களை நீக்குகிறது.
- சபாரி உலவியில் ஐகான் ஹிஸ்டரியை நீக்கு கிறது.
- மீடியா பிலேயர்களினால் உருவாகும் தேவையில்லாத பைல்களை நீக்குகிறது.
- கணினியில் உள்ள Recent Documents பகுதியை சுத்தம் செய்கிறது.
- கூகுள் குரோம் மூலம் உருவாகும் downloded history பைல்களை நீக்குகிறது.
- இது போன்று மேலும் பல தேவையில்லாத பைல்களை நம் கணினியில் இருந்து நீக்கி நம் கணினியை சுத்தமாக வைத்து கொள்கிறது.
- விண்டோஸ் 7/Vista/XP/2000 போன்ற இயங்கு தளங்களில் இயங்குகிறது. 32bit-64bit ஆகிய இரண்டிலும் வேலை செய்யும்.
- இந்த லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
உபயோகிக்கும் முறை:
- டவுன்லோட் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும்.
- உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
டுடே லொள்ளு
ங்கொய்யால நில்றா , முடிஞ்சா டேன்ஸ் போட்டில ஜெயிச்சி பாரு
Comments