பேஸ்புக் கமென்ட் பெட்டியை(Comment Box) பிளாக்கரில் இணைக்க

பிளாக்கர் தளத்தில் நிறைய வசதிகள் பயனுள்ளதாக இருந்தாலும் பிளாக்கரின் கமென்ட் பகுதி கண்டிப்பாக பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காது. கமென்ட் பெட்டியில் முக்கிய மாக இருக்க வேண்டிய REPLY வசதி இல்லாததால் ஒருவர் போட்ட கமேண்ட்டுக்கு பதில் போட அவர் போட்ட கமெண்ட்டை காப்பி செய்து போட்டால் தான் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியும். அதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. அவர்கள் போட்ட கமென்ட் அருகில் நம்மால் பதில் போட முடியாது. இது போன்ற சில பிரச்சினைகள் இருப்பதால் பிளாக்கரின் கருதுபெட்டியை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.இந்த பிரச்சினைகளை தீர்க்க வந்து விட்டது பேஸ்புக்கின் புதிய கமென்ட் பெட்டி இதனை பிளாக்கில் இணைத்தால் மேலே உள்ள பிரச்சினைகளை தீர்த்து விடலாம்.

எப்படி வேலை செய்கிறது என பரிசோதிக்க கீழே கமென்ட் பகுதியில் பாருங்கள் புதிதாக பேஸ்புக் கமென்ட் பெட்டி இணைக்க பட்டிருக்கிறது.
  • இந்த விட்ஜெட்டை இணைக்க உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • Design ==> Edit Html ==> Expand Widget Template போயிட்டு கீழே உள்ள கோடிங்கை கண்டு பிடிக்கவும். 
<data:post.body/>
  • இதற்க்கு கீழே தான் ஓட்டு பட்டைகளை சேர்த்து இருப்போம். கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டு பிடித்த கோடிங்கிற்கு கீழே பேஸ்ட் செய்யவும். ஓட்டு பட்டைகளுக்கு கீழே comment box வர வேண்டுமென்றால் அதற்க்கு கீழே பேஸ்ட் செய்யவும்.
<h3>Post Comment</h3>
<div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='3' width='550'/>
num_posts='3' என்று இருப்பது உங்கள் பதிவில் டீபால்ட்டாக தெரியும் கமேண்டுகளின் எண்ணிக்கை மீதி கமெண்டுகள் மறைந்து இருக்கும். தேவையென்றால் இதை மாற்றி கொள்ளலாம்.

width='550' - என்பது கமென்ட் பெட்டியின் அளவு உங்கள் டெம்ப்ளேட்க்கு ஏற்ற மாற்றி இதனை நீங்கள் மாற்றி கொள்ளலாம்.
  • கோடிங்கை காப்பி செய்து போட்டவுடன் கீழே உள்ள Save Template பட்டனை அழுத்துங்கள்.

இப்பொழுது உங்கள் பிளாக் சென்று பாருங்கள் நீங்கள் சேர்த்த பேஸ்புக் கமென்ட் பெட்டி வந்திருக்கும். இனி வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க Reply அழுத்தி சுலபமாக பதில் அளிக்கலாம். 

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கருத்துரையில் கேளுங்கள். 

//**ALSO CHECK**//

Comments