வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் எல்லாமே சுலபமாகி விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர். அதில் ஒரு முக்கியமான வசதியாக கணினி இல்லாமல் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பது எப்படி என இங்கு பார்க்க போகிறோம். நாம் முந்தைய பதிவில் ட்விட்டரை எப்படிSMS மூலம் உபயோகிப்பது என பார்த்தோம் இன்று பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிப்பது எப்படி என பார்க்க போகிறோம்.
இதற்க்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஏற்க்கனவே பதிவு செய்திருந்தால் எப்படி உபயோகிப்பது என கீழே பாருங்கள். பதிவு செய்யாதவர்கள் தொடருங்கள்.
மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி:
மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி:
- முதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
- அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobile என்பதை கிளிக் செய்யுங்கள்.
- பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
- முதலில் நீங்கள் வசிக்கும் நாட்டினை தேர்வு செய்து கொண்டு அடுத்து கீழே உள்ளதி உங்கள் மொபைலின் Service Provider தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- ஒருவேளை உங்களுடைய Service Provider அந்த பட்டியலில் இல்லை என்றால் Other Carrier என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- Next பட்டனை அழுத்தவும். இன்னொரு விண்டோ திறக்கும்.
- இப்பொழுது உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து அங்கு கொடுத்திருக்கும் எண்ணுக்கு SMS அனுப்புங்கள். (ஒவ்வொரு நாட்டிற்கும் மொபைல் எண் வேறுபடும்)
- நீங்கள் SMS அனுப்பிய உடனே உங்களுக்கு ஒரு பதில் SMS வரும் அதில் உள்ள Confirmation code குறித்து கொண்டு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் கொடுக்கும்.
- மற்றும் உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றால் Share my mobile number with my friends என்பதில் உள்ள டிக் மார்க் நீக்கி விட்டு Next பட்டனை அழுத்தவும்.
- அவ்வளவு தான் உங்களின் மொபைல் எண் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு விடும். மற்றும் அதில் உள்ள settings உங்களுக்கு தேவையான படி மாற்றி வைத்து கொள்ளுங்கள்.
இனி நீங்கள் பதிவு செய்யப்பட மொபைல் SMS வழியே பேஸ்புக்கை உபயோகிக்கலாம். எப்படி உபயோகிப்பது என அறிய கீழே பாருங்கள்.
SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கும் முறை:
மொபைல் SMS மூலம் உபயோகிக்க கீழே உள்ள முறைகளை பயன்படுத்தவும். சற்று முன் நான் SMS மூலம் சோதித்து பார்த்த அப்டேட் கீழே
பேஸ்புக் சுவரில் எழுத சாதரணமாக SMS டைப் பண்ணி முன்பு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினால் போதும் சுவரில் அப்டேட் ஆகிவிடும்.
புதிய நண்பரை சேர்க்க - add your friend name
Subcribe செய்ய - Subscribe your friend name
மேலும் விவரமாக அறிய கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதில் உள்ள அனைத்து கட்டளைகளையும் SMS மூலமாக செய்து விடலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Comments