சமூக தளங்களின் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல போட்டிகள் இருந்தாலும் வாசகர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வித்தியாசமாகவும் இருந்தால் கண்டிப்பாக வாசகர்களின் அமோக ஆதரவு அந்த இணைய தளத்திற்கு உண்டு என்பதை நிருபித்து காட்டியுள்ளது PINTEREST என்ற சமூக இணையதளம். பெரும்பாலான சமூக இணையதளங்களும் ஒரே மாதிரியான வசதிகளை Friends, Chatting, Sharing, like இப்படி ஒரே மாதிரியான கொண்டு இருக்கும் ஆனால் Pinterest சற்று வித்தியாசமானது. ஒரு போட்டோ ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பதை சரியாக பயன்படுத்தியுள்ள சமூக இணையதளம் Pinterest.
சிறப்பம்சங்கள்:
- இந்த தளத்தில் நீங்கள் போட்டோ அல்லது வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும் சாதாரண செய்திகளை பகிர முடியாது.
- இந்த தளத்தின் தோற்றம் பெரும்பாலானவர்களை கவரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த Pinterest தளத்தில் உங்கள் பிளாக்கில் உள்ள போட்டோக்களை நேரடியாக பகிர்ந்து உங்கள் பிளாக்கின் வாசகர்களை(Traffic) அதிகரித்து கொள்ளலாம்.
- போட்டோ அல்லது வீடியோ பகிரும் பொழுது அதற்க்கு சம்பந்தமாக தனி தனி பிரிவுகளில் பகிரலாம். மொத்தம் 30 க்கும் அதிகமான வகைகள் இந்த தளத்தில் உள்ளது.
- குறைந்த நாட்களிலேயே மாதத்திற்கு 21 மில்லியன் வாசகர்களை பெறும் சிறந்த சமூக இணையதளமாகும்.
ஆனால் இந்த சமூக இணையதளத்தில் நேரடியாக கணக்கு ஓபன் செய்து உபயோகிக்க முடியாது. முதலில் இந்த தளத்தில் சென்று உங்கள் ஈமெயிலை கொடுத்து INVITE அனுப்ப வேண்டும் பிறகு அவர்கள் உங்களுக்கான உறுப்பினர் விவரங்களை மெயிலில் அனுப்புவார்கள். பிறகு தான் உங்களால் Pinterest தாளத்தை உபயோகிக்க முடியும்.
உபயோகிப்பது எப்படி:
Approval கிடைத்தவுடன் இந்த தளத்தில் நுழைந்து Add என்பதை அழுத்தி வரும் விண்டோவில் உங்களுடைய போட்டோ இணையத்தில் இருந்தால் Add a Pin என்பதையும் உங்கள் கணினியில் இருந்தால் Upload a Pin என்பதையும் அழுத்தி உங்களுடைய போட்டோவை தேர்வு செய்து உங்களுடையை போட்டோவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.
INVITE வேண்டுமா?
Pinterest தளத்தில் ஏற்க்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் invite மூலம் உடனடியாக இந்த தளத்தில் இணைய முடியும். நானும் ஏற்க்கனவே இதில் உறுப்பினராக இருப்பதனால் என்னாலும் Invite அனுப்ப முடியும். உங்களுக்கு Invite வேண்டுமென்றால் கீழே கமென்ட் பகுதியில் உங்களின் ஈமெயில் ஐடியை கொடுத்தால் உங்களுக்கு இதன் Invitation அனுப்பி வைக்கிறேன்.
Pinterest தளத்தில் என்னை தொடர கீழே உள்ள போட்டோ மீது க்ளிக் செய்யவும்.
இதில் உள்ள வசதிகள் மற்றும் பயன்படுத்தும் விதம் ஆகியவைகளை பற்றி விரிவாக வரும் பதிவுகளில் காணலாம்.
தொடர்புடைய இடுகைகள்:
Comments