பேஸ்புக் பக்கத்தில் பயனுள்ள இரண்டு புதிய வசதிகள்

சமூக வலைதளங்களுக்கு இடையேயான போட்டியில் தங்கள் தளங்களில் புதிய வசதிகளை அறிமுகபடுத்தி கொண்டே இருக்கின்றன பிரபல சமூக இணைய தளங்கள். சமூகத்தளங்களில் ராஜாவான பேஸ்புக் Page Admin & Posts Schedule என்ற இரண்டு புதிய வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது. இந்த வசதிகள் என்ன எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

Facebook Page Admin:
இந்த வசதியின் மூலம் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் மற்றவர்களுக்கும் அட்மின் வசதியை பகிர்ந்து அளிக்கலாம். உதாரணமாக உங்களின் நிறுவனத்திற்கு ஒரு பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் உங்கள் ஊழியர்களுக்கும் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிரும் வசதியை உருவாக்கி தர முடியும். இது ஐந்து படிகளை கொண்டுள்ளது ஒவ்வொரு படிக்கும் உள்ள வசதிகளை கீழே உள்ள டேபிளில் பாருங்கள்.


இந்த வசதியை உபயோகிக்க உங்களின் பேஸ்புக் பக்கத்தை ஓபன் செய்து Manage - Settings - Admin Roles என்பதை தேர்வு செய்து நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் ஈமெயில் முகவரியை கொடுத்து சேமித்து விட்டால் போதும் அவருக்கு கோரிக்கை அனுப்பப்படும் அதன் மூலம் அவர் உங்கள் பக்கத்தில் இணைந்து விடுவார்.


இந்த வசதி இதற்க்கு முன்பே கூகுள் பிளஸ் பக்கத்தில் வந்துவிட்டது என்பது குறிப்பிட தக்கது.

Posts Schedule
இந்த வசதியும் மிகவும் பயனுள்ள வசதி இந்த வசதியின் மூலம் பேஸ்புக் பக்கத்தில் நீங்கள் பகிர வேண்டிய தகவலை முன்கூட்டியே சேமித்து அது பப்ளிஷ் ஆக வேண்டிய நேரத்தை கொடுத்து விட்டால் போதும் அந்த நேரத்தில் தானாகவே பப்ளிஷ் ஆகிவிடும். விடுமுறையில் செல்பவர்களுக்கும் மின்சார பிரச்சினை உள்ளவர்களுக்கு(நமக்கு) இந்த வசதி மிகவும் பயன்படும்.

இந்த வசதியை உபயோகிக்க பேஸ்புக் பக்கத்தை ஓபன் செய்து நீங்கள் பகிர வேண்டிய தகவலோ அல்லது போட்டோ, வீடியோவை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து கீழே இடது ஓரத்தில் உள்ள கடிகாரம் போன்ற ஐகானை க்ளிக் செய்து வருடம், மாதம், மணி, நிமிடம் இப்படி படிப்படியாக உங்கள் பதிவு பப்ளிஷ் ஆக வேண்டிய நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். 


இவைகளை சரியாக தேர்வு செய்த பின்னர் கீழே உள்ள Schedule பட்டனை க்ளிக் செய்தால் அடுத்து ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதை மூடி விடுங்கள் உங்களுடைய பதிவு சரியான நேரத்தில் தானியங்கியாக உங்களின் பேஸ்புக் பக்கத்தில் அப்டேட் ஆகிவிடும். 

இந்த வசதிகள் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments