8/04/2010

நம் பதிவை காப்பி அடிப்பதை முற்றிலுமாக தடுக்க சூப்பர் வழி

நண்பர்களே இன்று நாம் பார்க்க போகும் பதிவு மிகவு பயன் உள்ள பதிவு அனைத்து நண்பர்களும்  பயன் படுத்தி கொள்ளுங்கள். நாம் தினமும் கிடைக்கும்  கொஞ்சம் ஒய்வு நேரங்களில் கூட ஒய்வு எடுத்து கொள்ளாமல் உடலை வருத்தி கொண்டு நம்மால் முடிந்த வரை சிறப்பான பதிவை எழுதுகிறோம். இதை நம் நண்பர்களும் வாசகர்களும் படித்து மகிழ்வார்கள். ஆனால் சில ஈன பிறவிகள் நாம் சிரமப்பட்டு எழுதிய இந்த பதிவுகளை காப்பி செய்து அவர்கள் தளத்தில் போட்டு நோகாமல் நோம்பு கும்பிட்டு வந்தார்கள் ஆனால் இனிமேல் அப்படி எதுவும் அவர்களால் பண்ண முடியாது உங்கள் தளத்தில் இருந்து ஒரு எழுத்தை கூட அவன் காப்பி செய்ய முடியாது.


இடது பக்க மவுசை செயலியக்க செய்ய

என்னடா இது இடது பக்க மவுசை செயலியக்க செய்தால் நாம் பதிவில் ஏதேனும் லிங்க் கொடுத்தால் வேலை செய்யாதே என்று யோசிக்கிறீங்களா கவலையை விடுங்கள் நாம் கொடுத்துள்ள லிங்கில் வேலை செய்யும் மற்ற பகுதியில் வேலை செய்யாது. கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.

காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design - Edit Html - Expand Widjet template - சென்று இந்த வரியை </head> கண்டுபிடிக்கவும். காப்பி செய்த கோடிங்கை கண்டுபிடித்த கோடிற்கு முன்னே/மேலே பேஸ்ட் செய்யவும். அடுத்து SAVE TEMPLATE கொடுத்து விடுங்கள் இப்பொழுது உங்கள் தளத்தில் வந்து பதிவு பகுதியில் இடது கிளிக் செய்து பாருங்கள் வித்தியாசம் தெரியும்.பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே படத்தில்  இருப்பதை போல விண்டோ இருக்கும்.வலது கிளிக் செயலியக்க செய்ய

இது நிறைய பேர் உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். தெரியாதவர்களுக்காக இந்த பதிவு. உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design - Add a Gadget - Html/JavaScript - சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
அடுத்து கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தி நம் தளம் வந்து வலது கிளிக் செய்து பார்த்தால் உங்களுக்கு ஒரு அறிவிப்பு பலகை Sorry Function Disabled என்று வரும் இதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ளுங்கள். அவ்வளவு தான் இனி உங்கள் தளத்தில் இருந்து ஒரு எழுத்து கூட காப்பி செய்வது மிகவும் கடினம்.

என்ன இனிமே நம் தளத்த காப்பி பண்ண முடியாதான்னு கேக்கறீங்களா இன்னும் ஒரு சில வழிகள் உள்ளன. அவ்ளோ மூளை இருந்தா அவன் என் காப்பி பண்ண போறான் அது கொஞ்சம் கடினம் . கவலையை விடுங்கள்.   


தல அப்டியே ஒரு ஓட்டு போட்டு போங்க தல புண்ணியமா போவும். 

டுடே லொள்ளு 
 Photobucket
என்ன நல்லா இருக்கீங்களா 

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home