10/10/2011

உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் ஓட்டு போட வேண்டிய வாக்குச்சாவடி விவரம் அறிய

இப்பொழுது தமிழகம் முழுக்க பற்றி கொண்டிருக்கும் ஒரு பரபரப்பு இந்த உள்ளாட்சி தேர்தல். எங்க பார்த்தாலும் ஒரு சிறிய கூட்டம் அவர்களுக்குள் அரசியல் விவாதங்கள் என பல இடங்களில் காணமுடிகிறது. வேட்பாளர்களும் வித்தியாச வித்தியாசமாக வாக்களர்களுக்கு லஞ்சம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சட்டமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தலில் பணம் அதிகமாக விளையாடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சட்டமன்ற தேர்தலை நியாமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு இந்த உள்ளாட்சி தேர்தலையும் நியாயமாக நடத்தமுடியுமா என்பது சவாலான விஷயமே.

ஓட்டு போடவேண்டிய பூத் நம்பர் தெரியாமல் இங்க போங்க அங்க போங்கன்னு அலைய விடுவாங்க. குறிப்பாக சென்னையில் இது அதிகம் நடைபெறும். நம் தேர்தல் ஆணையமும் வாக்காளர்கள் சுலபமாக ஓட்டு போட தேர்தலுக்கு முன்பாகவே பூத் சிலிப் கொடுப்பது போன்ற  பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. அந்த வரிசையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் வாக்களர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்கு சாவடியின் விவரங்களை ஆன்லைனில் சுலபமாக அறிய ஒரு புதிய இணைய பகுதியை வடிவமைத்துள்ளது. 

முதலில் இந்த லிங்கில் http://tnsec.tn.nic.in/voterinfo/ கிளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லுங்கள். அதில் தமிழக மாவட்டத்தின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய மாவட்டத்தை கிளிக் செய்யுங்கள்.


அந்த லிங்கில் கிளிக் செய்து சென்றால் இன்னொரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய வாக்காளர் எண்ணை கொடுக்கவும். உங்களிடம் தற்பொழுது வாக்காளர் எண் இல்லை எனில் இந்த லிங்கில் சென்று உங்களுடைய எண்ணை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வாக்காளர் எண்ணை கொடுத்த பிறகு கீழே உள்ள View Detail என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதி போல வரும் அதில் உங்களின் வாக்காளர் விவரங்கள் இருக்கும் மற்றும் கீழே நீங்கள் ஓட்டு போடா வேண்டிய இடமும் காட்டப் பட்டிருக்கும். 


நான் குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் நீங்கள் ஓட்டு போட வேண்டிய இடம் இருக்கும் அதை குறித்து கொண்டு வாக்குசாவடிய தேடி அலையாமல் நேரடியாக சென்று உங்கள் வாக்கினை கட்சி பாகுபாடு இன்றியும் உறவினர் பாகுபாடு இன்றியும் நல்ல வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்கினை செலுத்தவும். 

பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டளித்து பதிவு பலரை சென்றடைய உதவுங்கள். 

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home