ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுவது என்றால் கூட சென்னையில் எந்தெந்த கடையில் ஐஸ்க்ரீம் விற்கிறார்கள் என அறிந்து சாப்பிடும் காலம் இது. இதற்காக நமக்கு உதவி செய்வது தான் இந்த google places. நம்மில் நிறைய பேர் சொந்தமாக தொழில் செய்கின்றனர். இதில் சிறிய தொழில் முதல் பெரிய நிறுவங்களை கூட நடத்து கின்றனர்.அப்படி போன்றவர்களுக்கான பயனுள்ள பதிவு இது.
கூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை வெளியிடுவதன் மூலம் உங்களின் நிறுவனத்தின் வருவாயை கணிசமாக உயர்த்த முடியும். இது ஒரு இலவச சேவை ஆகும்.
கூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை வெளியிடுவதன் மூலம் உங்களின் நிறுவனத்தின் வருவாயை கணிசமாக உயர்த்த முடியும். இது ஒரு இலவச சேவை ஆகும்.
- முதலில் தாங்கள் இந்த கூகுளின் தளத்திற்கு செல்லுங்கள் Google Places இந்த லிங்கில் செல்லுங்கள்.
- உங்களின் ஜிமெயில் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளேனுளைந்து கொள்ளுங்கள்.
- add a new business என்ற இடத்தில் க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
- அதில் உங்களுடைய நாட்டையும் மற்றும் உங்களின் போன் எண்ணையும் கொடுத்து கீழே உள்ள FIND BUSINESS INFORMATION என்பதை க்ளிக் செய்யவும்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் முதலில் வருவது BASIC INFORMATION என்ற பகுதியாகும்.
- இதில் ஸ்டார் குறி போட்டுள்ள விவரங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
- மற்றதை உங்களுக்கு தேவையென்றால் நிரப்பி கொள்ளலாம்.
- இதில் PHOTOS என்ற பகுதியில் உங்களின் நிறுவனத்தின் படத்தினை கூட சேர்த்து கொள்ளலாம்.
- இதே முறையில் நீங்கள் ஏதேனும் வீடியோவினை கூட சேர்த்து கொள்ளலாம்.
- இதில் நீங்கள் தகவலை கொடுக்க கொடுக்க வலது பக்கத்தில் அந்த விவரங்கள் வருவதை காண்பீர்கள்.
- இப்படி உங்களுக்கு தேவையாங்க தகவல்களை கொடுத்த பின் கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.
- உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். இது முக்கியமான பகுதி உங்களுக்கு PIN நம்பர் கூகுளில் இருந்து கொடுப்பார்கள். அதை பெற்று கொள்ளும் வழியை தேர்வு செய்து (SMS, PHONE CALL) கீழே உள்ள FINISH என்பதை க்ளிக் செய்யவும்.
- நீங்கள் PHONE தெருவு செய்து இருந்தால் அடுத்த வினாடியே கூகுளில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் அதில் உங்கள் அக்கௌன்ட் PIN நம்பர் கொடுக்கப்படும்.
- அதை பெற்று கொண்டு உங்கள் நிறுவனத்தை இனி நீங்கள் கூகுள் வரைபடத்தில் சேர்த்து விட்டீர்கள்.
ஒரு அழகி பட்டம் வாங்கறதுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு ச்சே
Comments