தமிழில் தீபாவளி வாழ்த்து (Greeting Cards) அனுப்ப சிறந்த தளங்கள்

ஒரு பண்டிகை என்றதுமே அனைவரும் நினைப்பது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என. அஞ்சல் வழியாக வாழ்த்து அட்டைகள் (Greetings Cards) அனுப்பிய காலம் போய் இப்பொழுது ஈமெயிலிலும், மொபைல்களிலும் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்கிறோம். இணையத்தில் இலவசமாக வாழ்த்து அட்டைகள் அனுப்ப ஏராளமான தளங்கள் உள்ளது. இதில் குறிப்பிட்ட தளங்களே தமிழில் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் வசதியை ஏற்ப்படுத்தி தருகிறது. அந்த வகையில் தமிழில் வாழ்த்து அட்டைகளை அனுப்ப சிறந்து பத்து தளங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.




koodal
இந்த தளத்தில் பல தீபாவளி வாழ்த்து அட்டைகள் தமிழில் கிடைக்கின்றன. இதில் உள்ள அட்டைகளை கணினியில் டவுன்லோட் செய்தும் நண்பர்களுக்கு அனுப்பலாம்.

365 Greetings
இந்த தளத்திலும் சில தமிழ் வாழ்த்து அட்டைகள் உள்ளன. இந்த தளத்தில் இருந்தே நேரடியாக சமூக தளங்களில் பகிரும் வசதியை கொடுத்து உள்ளனர். மற்றும் இதில் உள்ள பின்புற நிறத்தை நமது விருப்பப்படி மாற்றி கொள்ளலாம்.

V4Orkut
இந்த தளத்திலும் சில தமிழ் வாழ்த்து அட்டைகள் உள்ளன. நேரடியாக பேஸ்புக் தலத்தில் பகிரும் வசதி உள்ளது.

Latest Greeting Cards
இந்த தலத்தில் சில Flash Cards தமிழில் உள்ளது. அதற்க்கான கோடிங்கும் கீழே கொடுத்து இருப்பார்கள் அதை காப்பி செய்து வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இங்கு எனக்கு தெரிந்த சில தளங்களை குறிப்பிட்டு உள்ளேன். தங்களுக்கு வேறு ஏதேனும் தளத்தை பற்றி தெரிந்தால் கமேண்டில் சொல்லலாம். 

Comments