
- பயனர்கள் மிகவும் சுலபமாக செயல்படுதும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அதிகபட்சம் 20mb உள்ள பைல் வரை வாட்டர்மார்க் போடலாம்.
- இது முழுக்க முழுக்க இலவச சேவை
- வாட்டர் மார்க் நிறத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
உபயோகிக்கும் முறை:
- கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும் அதில் Choose File என்ற ஒரு விண்டோ வரும் அதில் கிளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- உங்கள் வாட்டர்மார்க் வர வேண்டிய இடம், வாட்டர்மார்க் நிறம் மற்றும் Transparency தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Watermark Pdf பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது உங்கள் PDF பைலின் மீது வாட்டர் மார்க் இடப்பட்டால் உங்களுக்கு கீழே இருப்பதை போன்ற ஒரு அறிவிப்பு வரும்.
- படத்தில் காட்டி இருப்பது போல வந்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள Click Here என்ற லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கான PDF பைல் தயாராகிவிடும்.
- பிறகு அதில் உள்ள Save பட்டனை அழுத்தி வாட்டர் மார்க் போட்ட PDF பைலை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
- இந்த முறையில் உங்களுக்கு எத்தனை பைல்களில் வாட்டர்மார்க் வேண்டுமோ போட்டு கொள்ளலாம்.
Link-Pdfaid
பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஓட்டளித்து பலரை சென்றடைய உதவுங்கள்.
Comments