Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஜிமெயில் Contacts -களை உங்கள் நண்பர்களின் மெயிலுக்கு சுலபமாக அனுப்ப

This Guest post is posted by M. Anitha (B.Tech) Student.


தற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். இந்த ஜிமெயிலில் நம் கணக்கில் உள்ள தொடர்பு முகவரிகளை (contacts) எப்படி நம் நண்பர்களின் மெயில் முகவரிக்கு அனுப்புவது என கீழே காணலாம்.

  • முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து உங்கள் ஜிமெயில் பக்கத்தில் உள்ள Contacts லின்க்கை க்ளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் உங்கள் கணக்கில் உள்ள அனைத்து முகவரிகளும் உங்களுக்கு வரும். அதில் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவேண்டிய முகவரிகளை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • தேர்வு செய்து கொண்டு More actions என்ற பட்டனை க்ளிக் செய்து அதில் வரும் Export என்ற வசதியை க்ளிக் செய்யவும்.

  • அடுத்து வரும் விண்டோவில் Export என்ற பட்டனை தேர்வு செய்து கொண்டு உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள். 
  • Export பட்டனை அழுத்தியதும் நீங்கள் தேர்வு செய்த அனைத்து முகவரிகளும் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகும். 
  • இப்பொழுது வழக்கம் போல Compose mail அழுத்தி டவுன்லோட் செய்த பைலை attach செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம்.
  • நீங்கள் அனுப்பிய .csv பைலை உங்களின் நண்பர் முகவரியில் சேர்க்க முதலில் Contacts - More actions - import சென்று நீங்கள் அனுப்பிய பைலை தேர்வு செய்து Import க்ளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய முகவரிகள் அவரின் கணக்கில் சேர்ந்து விடும்.

  • இது போல சுலபமாக உங்கள் தொடர்பு முகவரிகளை உங்கள் நண்பர்களுக்கு சுலபமாக அனுப்பலாம்.

This Guest post is posted by M. Anitha (B.Tech) Student.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

8 comments :

  1. ஆகா, இது புதுசா இருக்கே சகோ,
    ட்ரை பண்ணிப் பார்த்திட்டாப் போச்சு.

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சசி

    ReplyDelete
  3. நல்ல விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றிகள்..

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு,கெஸ்ட் போஸ்ட் பை அனிதாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உங்களால் நான் பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்கிறேன்..நன்றி..

    ReplyDelete
  6. உங்களால் நான் பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்கிறேன்..நன்றி..

    ReplyDelete
  7. கண்டிப்பாக இது எல்லோருக்கும் பயன்படும் தகவல்தான்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. சின்ன சின்ன விஷயம்னாலும் அதை சிறப்பா கொடுக்கறது தான் உங்க பாணி..!

    பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள் சசி!

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press