சென்ற மாதத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகள் [Feb 2012]

வலைப்பூவில் தினமும் ஏதாவது ஒரு தலைப்பில் ஏராளமான பதிவுகள் வந்து கொண்டுள்ளது. அனைத்து பதிவுகளும் நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் பல பேர் பயன்பெற வேண்டும் என்று நினைத்தாலும் குறிப்பிட்ட ஒரு சில பதிவுகள் தான் அதிக வாசகர்களை கவர்கிறது. அப்படி சென்ற மாதத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 இடுகைகளை பற்றி பதிவு இது.

பிரபல சமூக இணையதளமான பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுளால் களமிறக்கப்பட்ட கூகுள் பிளஸ் இணையதளம் நாளுக்கு நாள் அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இந்த வருட முடிவிற்குள சுமார் 400 மில்லியன் வாசகர்களை கூகுள் பிளஸ் பெறும் என இணைய வல்லுனர்கள் கணித்துள்ளனர்.  கூகுளின் மிக சிறந்த சேவையான Google Translate வசதியை எப்படி கூகுள் பிளஸ் தளத்தில் கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவாகும்.


9. பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்ற - Disable Timeline
பேஸ்புக் தனது profile தோற்றத்தை முழுவதுமாக மாற்றிய அனைத்து வசதிகளையும் ஒரே பக்கத்தில் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய தோற்றம் timeline. இந்த புதிய தோற்றம் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காமல் போனது. இதனை நீக்கி பழைய தோற்றத்தை கொண்டுவருவது எப்படி என்பதை விளக்கும் பதிவு இது.

8. மொபைல் உபயோகிப்பவர்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் [Infographic]
மொபைல் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமாக வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில் மொபைல் போன் உபயோகிப்பாளர்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அளிக்கும் பதிவாகும். உலகம் முழுவதும் உள்ள மொபைல் போன் உபயோகிப்பாளர்களை பற்றிய சிறப்பு பதிவாகும்.

7. புதிய தலைமுறை செய்தி சேனலை இணையத்தில் நேரடியாக(Live) காண
புதிய தலைமுறை செய்தி சேனலை இணையத்தில் நேரடியாக பார்க்கும் வசதியை பற்றிய பதிவாகும். வெளிநாட்டிலும் வெளி மாநிலத்தில் இருப்பவர்களும் இந்த சேனலை பார்க்க முடியாதிருந்த கவலையை நீக்க வந்த பயனுள்ள வசதியாகும். தமிழில் முதல் முறையாக புதிய தலைமுறை இந்த வசதியை அளித்தால் பெரும்பாலனவர்களை கவர்ந்தது இந்த இடுகை.

உலகம் முழுவதும் உபயோகிப்பதும் மென்பொருளான VLC மீடியா மென்பொருளின் புதிய பதிப்பை டவுன்லோட் செய்யவும் புதிய வசதிகளை விளக்கும் பதிவாகும். பெரும்பாலானவர்கள் VLC உபயோகிப்பதால் அதிக வாசகர்களை கவர்ந்தது இந்த பதிவு. 

இந்தியாவில் முதன் முறையாக ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் வாசகர்களுக்கும் ஆன்லைன் வசதிகளை அளித்துள்ளதை விளக்கும் பதிவு இது. பெரும்பாலானவர்கள் ஏர்டெல் சிம்களை உபயோகிப்பதாலும் ஆன்லைனில் பல வசதிகளை பெற முடியும் என்பதாலும் இந்த பதிவுக்கு அதிக வரவேற்ப்பு கிடைத்தது.

இது சற்று வித்தியாசமான மென்பொருளை பற்றிய பதிவு. ஒரே நிறங்களில் உங்கள் கணினியில் உள்ள போல்டர்களை பார்த்து போர் அடிக்குதா ஆம் என்றால் இனி உங்கள் போல்டர்களை கலர் கலராக மாற்றி கொள்ளலாம். பெரும்பாலானவர்கள் அழகையும் மாற்றத்தையும் விரும்புவதால் இது வரவேற்ப்பை பெற்று இருக்கலாம் என நினைக்கிறேன்.
காதலர் தினத்திற்காக ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மென்பொருளை இலவசமாக   வழங்கியதை விளக்கும் பதிவு இது. இந்த சலுகை இப்பொழுது முடிவடைந்து விட்டது. ஆனால் இதனுடைய இலவச பதிப்பை Advanced system care  இப்பொழுது டவுன்லோட் செய்து கொள்ளலாம். இலவச சலுகை என்பதால் வாசகர்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது இந்த பதிவு.

வந்தேமாதரத்தில் சமீப காலங்களில் இந்த ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய பதிப்புகளை பற்றி தொடராக வந்து கொண்டுள்ளதை காண்பீர்கள். இந்த பதிவுகள் வாசகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு மென்பொருளுக்கு ஒரு பதிவு என்ற காலம் மறைந்து ஒரே பதிவில் ஐந்து இலவச மென்பொருட்கள் கிடைப்பதால் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 


1. மிகக் குறைந்த விலை டேப்லெட் கணினிகள் BSNL வெளியிட்டது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்ய
ஆகாஷ்க்கு அடுத்த படியாக BSNL நிறுவனம் வெளியிட்டுள்ள மிக குறைந்த விலையுள்ள டேப்லேட் கணினிகளை எப்படிமுன்பதிவு செய்வது என்பதை விளக்கும் பதிவு இது. பல்வேறு வசதிகளுடன் மலிவு விலையில் கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் இது முன்பதிவு செய்து உள்ளனர். இதில் உள்ள குறை வாய்ஸ் காலிங் கிடையாது.


Comments