Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

BSNL vs ATab vs Aakash மலிவு விலை டேப்லேட் கணினிகளில் எது சிறந்தது?

இந்தியாவில் முதல் முறையாக மிகவும் குறைவான விலையில் Datawind நிறுவனம் Aakash என்ற மலிவுவிலை டேப்லட் கணினிகளை வெளியிட்டது. அடுத்து இதன் அப்டேட்டட் வெர்சன் UBISLATE7 கணினிகள் வர இருக்கிறது என அறிவிப்பு வந்தவுடன் ஆர்டர்கள் குவிந்தன. சில சிறந்த வசதிகளுடன் மலிவான விலையில் கிடைத்தால் ஆளாளுக்கு போட்டி போட்டுகொண்டு இந்த டேப்லேட்களை முன்பதிவு செய்தனர். ஆனால் இன்று வரை அது யாருக்குமே கிடைக்க வில்லை என்பது தான் உண்மையான நிலை. அரசுக்கும் Datawind நிறுவனத்திற்கும் இடையே சில கருத்து வேறுபாட்டினால் Datawind நிறுவனம் இதிலிருந்து விலகியது. இப்பொழுது Ubislate7 டேப்லேட்டை இந்திய அரசே வெளியிட போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இது ஒரு புறமிருக்க இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான BSNL Pantel நிறுவனத்துடன் இணைந்து Rs. 3250 விலையில் தற்பொழுது மலிவு விலை கணினிகளை வெளியிடப்போவதாக அறிவித்து உள்ளது. ஏற்க்கனவே ஒரு லட்சத்தை தாண்டி விட்டது இதன் முன்பதிவு எண்ணிக்கை. இவை இரண்டோடு போட்டி போடும் வகையில் மற்றொரு நிறுவனம் ATab என்ற டேப்லேட் கணினிகளை Rs. 5000/- விலையில் வெளியிட போகிறதாம். 

ஆகவே இப்பொழுது பெரும்பாலானவர்களுக்கும் ஏற்ப்பட்டுள்ள குழப்பம் இவை மூன்றில் எது சிறந்தது என்பது தான். கீழே இதன் வசதிகள் பற்றிய Comparison Table பாருங்கள்.

Specfication ATab BSNL-IS701R AKASH-Ubislate7
Processor 1.1 GHz 1 GHz Cortex A8 – 700 Mhz
OS  Android Android2.3 Android2.3
Price Rs.5000 Rs.3250 Rs.2999
RAM 512MB 256MB 256MB
Battery 3200mAH 3000mAH 3200mAH
Screen 7" TFT 7" 7" 
ROM 2GB 2GB 2GB
Expandable 16GB 32GB 32GB
Connectivity Wi-Fi GPRS (or) Wi-Fi GPRS (or) Wi-Fi
USB Ports 1 1 2
Voice calling No No Yes

என்னை பொறுத்த வரையில் Atab டேபெல்ட் கணினிகள் 1.1GHz Processor மற்றும் 512MB கொண்டுள்ளதால் இணையத்தில் வேகமாக உலவ முடியும். ஆனால் இந்த நிறுவனம் வெறும் 10,000 கணினிகள் மட்டும் வெளியிட உள்ளதால் அனைவரும் இந்த கணினிகளை பெற முடியாது.

இதற்கடுத்து பார்க்கும் பொழுது BSNL சிறந்ததாக உள்ளது. அரசு நிறுவனம் என்பதால் நம்பிக்கையுடன் வாங்கலாம். 

இந்த இரண்டு கணினிகளிலும் இல்லாத ஒரு வசதி voice calling  ஆகாஷ் கணினிகள் உள்ளது.  இவைகளை உங்களுடைய கருத்து என்ன என்பதை கீழே கமேண்டில் தெரிவிக்கவும்.

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

16 comments :

 1. இவை இந்தியாவில் வாங்கினால் வெளி நாடுகளில் உபயோகப்படுத்த முடியுமா? சொல்லுங்க மாப்ள!...ஏற்கனவே இங்க இருக்க நண்பர்களிடம் எலேய் எங்கூருல எல்லாம் $5000 க்கு கார் இருக்குலேய்ன்னு சொல்லிட்டு திரியிறேன்..இங்க குறைந்தது $30,000 அமெரிக்க டாலர்கள்...எல்லாம் ஒரு ஜென்ரல் நாலேட்ஜுக்கு தான் சொல்றேன்...எங்க எது எவ்ளோ வித்தாலும் எது கம்மி ரேட்டுன்னு பாத்து வாங்குறதுல நான் எப்பவும் இந்தியனுங்கோ!

  ReplyDelete
 2. எல்லாத்தயும் பதிவு பன்னிட்டேன்.ஆனா இதுவரை எதுவுமே வரல

  ReplyDelete
 3. சிறந்த ஒப்பீடு..., பகிர்வுக்கு நன்றி ..!

  ReplyDelete
 4. பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

  Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

  ReplyDelete
 5. nannum intha 3 tab book pannirukken aana vantha paadu illa .........

  ReplyDelete
 6. ஏதாவது ஒண்ணு, சீக்கிரம் கொடுத்தங்கன்னா தேவலை.

  ReplyDelete
 7. நல்ல ஒப்பிடு ... எது first வருதுன்னு பாப்போம்

  ReplyDelete
 8. முதலில் அவை சந்தைக்கு வரட்டும்.. பிறகு யோசிப்போம்!

  ReplyDelete
 9. நல்ல ஓப்பீடு, டைமிங் பதிவு, ஆனா எந்த டேப்லெட்டும் வெளில வந்த மாதிரி தெரியல.......

  ReplyDelete
 10. BSNl தான் நம்ம சாய்ஸ். ஆனா வருமா வராதான்னு பட்டிமன்றம் வச்சிதான் முடிவு பண்ணனும் போல. நம்ம கபில்சிபில நடுவரா போட்ரலாம். என்ன நான் சொல்றது?

  ReplyDelete
 11. போன வாரம் ஒருவர் BSNL அலுவலகத்தில் வந்து சண்டை போட்டார். அவர் இரண்டு NOVA டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு ஆர்டர் செய்து இரண்டுமாதம் ஆகிவிட்டது இன்னும் கிடைக்கவில்லை என்று ஆகவே ஜாக்கிரதை!!!.

  ReplyDelete
 12. விளக்கமான பதிவு ! எதோ நல்லது ஒன்னு கிடைச்சா (?) சரி தான் !

  ReplyDelete
 13. தேர்ந்தெடுக்க வசதியாக நல்ல ஒப்பீடு!

  ReplyDelete
 14. நல்ல ஓப்பீடு

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press