
நாம் எழுதும் பதிவுகள் அனைத்தும் ஹிட்டாக வேண்டும் என்று தான் நினைப்போம் ஆனால் குறிப்பிட்ட பதிவுகள் மட்டுமே வாசகர்கள் விரும்புகிறார்கள். ஒரு பதிவுக்கு கிடைக்கும் வெற்றி என்பது அந்த பதிவு எவ்வளவு பேரால் படிக்கப் படுகிறது மற்றும் நாம் சொல்கிற விஷயம் எத்தனை பேருக்கு போய் சேருகிறது என்பதை பொறுத்தே அமைகிறது. வந்தேமாதரத்தில் கடந்த ஒரு மாதத்தில் 34 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறந்த அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளை இங்கே காணலாம். இதன் மூலம் முன்பு சிறந்த இடுகைகளை மட்டும் ஒரே பக்கத்தில் வாசகர்கள் பார்த்து கொள்ளலாம்.
நம்மாளுங்க காலைல தூங்கி எழுந்து குளிக்கிராங்களோ இல்லையோ நேரா கம்ப்யுட்டர ஆன் பண்ணி பேஸ்புக் ஓபன் பண்ணி என்ன அப்டேட்ஸ் என்று பாக்குறத பொழப்பா வச்சிக்கிட்டு இருக்காங்க. ஒரு நாளைக்கு இவங்களுக்கு பேஸ்புக் தளத்தை பார்க்கலைன்னா வேலையே ஓடாது. அதே நினைப்பாவே இருப்பாங்க. அப்படி என்னதான்யா இருக்குது அந்த பேஸ்புக்ல யாராவது கேட்டுட்டா போதும் இருக்கிற கோவத்தை எல்லாம் அவுங்க மேல காட்டிருவாங்க.
மேலும் வாசிக்க
9.நோக்கியாவின் மெகா பரிசு போட்டி!! ரூபாய் 4,500,000 வெல்ல அறிய வாய்ப்பு
பிரபல மொபைல் நிறுவனமான நோக்கியாவி பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். உலகம் முழுவதும் மொபைல் வர்த்தகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நிறுவனம். இந்த நோக்கியா நிறுவனத்தின் ரிங்டோன் அனைவரும் கேட்டு இருப்போம் உலகளவில் மிகவும் பிரபலமான ரிங்க்டோன் கேட்பதற்கே மிகவும் இதமாக இருக்கும். இப்பொழுது நோக்கியா நிறுவனம் புதிதாக 2012 ஆண்டிற்கான விண்டோஸ் மொபைல்களை அறிமுக படுத்த இருக்கிறது இந்த மொபைல்களில் உபயோகப்படுத்த புதுவைகையான நோக்கியா ரிங்க்டோனை உபயோகப்படுத்த உள்ளது.
மேலும் வாசிக்க
8.பேஸ்புக் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?தகுதிக்கேற்ற வேலை? Resume அனுப்புவது எப்படி?

இன்று என்ன தான் படித்தாலும் வேலை கிடைப்பது என்பது பெரிய விஷயமாக உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையாலும், கல்வி வளர்ச்சியாலும் சிறந்த வேலையை பெற மிகப்பெரிய போராட்டமே நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான என்ஜினியர்களும், மருத்துவர்களும் உருவாகிக்கொண்டு உள்ளனர். குறிப்பாக கம்யூட்டர் என்ஜீனியர்கள் அதிக அளவில் உருவாகி கொண்டு உள்ளனர். பிரபல சமூக இணைய தளமான பேஸ்புக் தளத்தில் நூற்றுகணக்கான வேலை காலி இடங்கள் உள்ளது. தகுதி வாய்ந்த திறமை ,அனுபவம் மிக்க பணியாளர்களை தேடி கொண்டுள்ளது பேஸ்புக் தளம் அந்த தளத்தில் எப்படி பதிவு செய்வது என பார்ப்போம்.
மேலும் வாசிக்க
7. குறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற கூகுளின் புதிய வசதி -Google Flights
எப்படித்தான் யோசிக்கிராங்களோ இந்த கூகுள் காரங்க தினமும் ஏதாவது ஒரு புது புது வசதியை அறிமுக படுத்திகிட்டே இருக்காங்க. இவுங்க வெளியிட்டுள்ள வசதிகளை பட்டியல் போடணும்னா இந்த பதிவு பத்தாது. இதையெல்லாம் மீறி இப்பொழுது புதிய வசதியாக Google Flights என்ற புதிய சேவையை அறிமுக படுத்தி உள்ளனர். இந்த வசதியின் மூலம் விமான டிக்கெட்டுக்களின் விவரங்கள் விமானம் புறப்படும் நேரம், பயணிக்கும் கால அளவு நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற விலைப்பட்டியல் என அனைத்தையும் பார்த்து கொள்ளலாம்.
மேலும் வாசிக்க
6.மைக்ரோசாப்டின் Windows 8 இலவசமாக டவுன்லோட் செய்ய - Developer Preview
இணையத்தில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். மைக்ரோசாப்ட் இந்த மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளதாம். சமீபத்தில் தான் Windows7 மென்பொருளை வெளியிட்டது. அது கணினி உலகில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. அதற்குள் மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 64bit,32bit என இரண்டு வகை கணினிகளுக்கும் இந்த மென்பொருள் பொருந்து கிறது. ஆனால் தற்பொழுது இந்த மென்பொருள் Developer Preview (சோதனை பதிப்பு) ஆக தான் வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க
5.ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC புதிய அறிவிப்பு
இப்பொழுது ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மேலும் ஒரு புதிய சலுகையாக இனி அந்த E-Ticket(ERS) பிரிண்ட் கூட எடுத்து செல்ல வேண்டாம். VRM (Virtual Reservation Message) எனப்படும் Screen Shot இருந்தாலே போதும். நீங்கள் டிக்கெட் பதிவு செய்து முடிந்ததும் வரும் E Ticket ஐ ஒரு Screen Shot எடுத்து உங்கள் மொபைலிலோ,லேப்டாப்பிலோ அல்லது ஐ-பேட் போன்றவற்றில் சேமித்து கொண்டால் போதும். டிக்கெட் பரிசோதகர் கேட்கும் பொழுது அந்த screen Shot மற்றும் உங்களுடைய ID Proof ஒரிஜினல் காண்பித்தால் போதும் நீங்கள் பயணம் செய்யலாம். (ID Proof இல்லாமல் சென்றால்
மேலும் வாசிக்க
4.புதிய தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்
இணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக இணையத்தை தேடவில்லை என்றே பொருள். இணையத்தில் இல்லை என்பதே இல்லை அனைத்துமே கிடைக்கும் அனால் கொஞ்சம் சிரமம் எடுத்து தேட வேண்டும். இந்த வகையில் நம் தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று லேட்டஸ்ட் ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக
மேலும் வாசிக்க
3.பேஸ்புக்கின் புதிய அசத்தலான தோற்றம் ஆக்டிவேட் செய்ய
நேற்று பேஸ்புக்கின் F8 நடைபெற்றது இதில் பல புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் timeline எனப்படும் பேஸ்புக்கின் புதிய தோற்றம் இந்த புதிய தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணக்கிலும் அந்த புதிய மாற்றத்தை,தோற்றத்தை கொண்டு வருவது எப்படி என பார்ப்போம்.
மேலும் வாசிக்க
2.இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த
கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயில் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் லேப்டாப்பில் இணைய இணைப்பு இருக்காது அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது
மேலும் வாசிக்க
1.VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்
கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.
மேலும் வாசிக்க
Comments