எழுத்தாளர்கள் செய்திதாள்களுக்கு எழுதி மாத கணக்கில் வெளியிடுவார்களா மாட்டார்களா என்று சந்தேகத்துடனே இருந்து வந்த எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் இந்த பிளாக். நவீன தொழில்நுட்ப உலகில் இணையத்தில் எழுதுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இலவச சேவை என்பதாலும் கருத்தை பதிவு செய்த உடனே உலகில் எந்த மூலையில் இருந்தும் பார்க்கலாம் என்பதால் தற்பொழுது இணைய எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சில பேர் பொழுது போக்கிற்காவவும், சில பேர் தங்கள் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்கவும் மேலும் சில பேர் பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் இப்படி பல காரணங்களுக்காக பதிவு எழுதுகின்றனர்.

ஜூலை 2011 கணக்கெடுப்பின் படி மொத்த பிளாக்கின் எண்ணிக்கை 164 மில்லியன் பிளாக்குகள் உள்ளனவாம். (இந்த தகவல் சரியாக இருக்காது Blog pulse,Technorati போன்ற தளங்களின் கணக்கை வைத்தே இதை தீர்மானித்து இருக்கிறார்கள். ஆனால் அனைத்து பிலாக்குகுகளும் இந்த தளத்தில் சேர்க்கபடுவது இல்லை)
சுவாரஸ்யமான தகவல்கள்:
- பதிவர்களில் 49% பேர் அமெரிக்காவில் இருந்து எழுதுகிறார்கள்.
- 25-34 இடைப்பட்ட வயதுடையோர் தான் அதிகளவு 30% இணையத்தில் எழுதுகின்றனர்.
- 64% பேர் பொழுது போக்கிற்காகவே பதிவு எழுதுகின்றனர். இதில் 27% பேர் முழுநேர பதிவர்களாக உள்ளனர்.
- 21% பதிவர்கள் 6 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து எழுதிவருகின்றனர்.
- 25% பேர் மொபைல் போன்களை உபயோகித்து பதிவு எழுதுகின்றனர்.
- தேடியந்திரங்களில் இருந்தும் சமூக தளங்களில் இருந்தும் அதிகளவு வாசகர்கள் வருகின்றனர்.
- 40% பதிவர்கள் பிளாக்கில் விளம்பரம் போட்டு சம்பாதிக்கிறார்கள்.

மேலும் தகவல்களை மேலே உள்ள படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பதிவு பிடித்து இருந்தால் கீழ் உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு பலரை சென்றடைய உதவுங்கள்.
Comments