Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க- Online Petition Filing

நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது. குடிநீர், சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிகடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும். செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள். ஆனால் அனைவாராலும் இதை செய்ய முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் தான் ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும். இதனால் பெருமாலானவர்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை.

ஆனால் நம் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளது.  ஆனால் இந்த வசதி இருப்பதை பல பேர் இன்னும் அறியாமல் உள்ளனர். ஆதலால் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தும் விதமாக இங்கு தெரியப்படுத்துகிறேன்.

  • இதற்க்கு முதலில் Online Petition Filing இந்த லிங்கில் செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் வலது பக்க சைட்பாரில் Select என்ற ஒரு சிறிய கட்டம் இருக்கும்.
  • அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
  • உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நான் திருவள்ளூர் மாவட்டத்தை தேர்வு செய்துள்ளேன்.
  • அந்த விண்டோவில் நான் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள ஈமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். 
  • அதை குறித்து கொண்டும் ஈமெயில் அனுப்பலாம்.
  • அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம். 
  • இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள் அதை குறித்து கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சொதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என அறியலாம்.
  • கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் அந்த கோரிக்கை எண் வைத்து நீதிமன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம். 
  • நண்பர்களே இதில் கொடுக்கும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும் போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். 
நண்பர்களே இந்த செய்தியை முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிப்பதன் மூலம் அவர்களும் பயனடைவார்கள். 

sasikumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

25 comments :

  1. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..

    இனிய தீபாவளி வாழ்த்துக்களுடன்

    சம்பத்குமார்

    ReplyDelete
  2. ஈர்ரொட்லஃபிகருங்க நடமாட்டம் கம்மியா இருக்குனு புகார் கொடுக்கனும்.. ஹி ஹி

    ReplyDelete
  3. மாப்ள Thank you ...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. மக்களின் நேரத்தையும், வீண் அலைச்சலையும் தவிர்க்க உதவும்... பயனுள்ள தகவல் நண்பரே!...

    ReplyDelete
  5. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சசி.

    ReplyDelete
  7. இனிய காலை வணக்கம் பாஸ்,
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இனிய இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  8. உள்ளூர் மக்களின் உடனடித் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள நல்லதோர் பதிவு.

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  9. நல்லதொரு தகவல்...

    இந்த தகவலை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை...

    தம்முடைய பகுதியில் நடக்கும் குற்றங்களையும்ட குறைகளையும் ஆட்சியருக்கு தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும்...

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. Thanks 4 sharing.,

    அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
    நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. அருமையான பதிவு....
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோ....

    ReplyDelete
  12. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..

    இனிய தீபாவளி வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. ஆஹா இப்படி ஒரு வசதி இருக்கா சூப்பருய்யா!!!!!!

    ReplyDelete
  15. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சசி.

    ReplyDelete
  16. usefulஆக இருக்கும் நன்றி சசி.
    இனிய தீபாவளிவாழ்த்துகள்!

    ReplyDelete
  17. பயனுள்ள தகவல் நண்பரே

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  18. பயனுள்ள தகவல்.இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  20. என் உளம் கனிந்த இனிய இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. அன்புள்ள சசி ,
    நலமா ? உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் .நல்ல பயனுள்ள பதிவு .நன்றி .
    அன்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  22. பயனுள்ள தகவல் நண்பா

    தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  23. பலருக்கும் பயனுள்ள பதிவு.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press