நம் பிளாக்கை Google,yahoo,Bing போன்ற Search Engine-ல் இணைக்க

இணைய உலகில் தாதாவாக திகழும் மூன்று முக்கிய Search Engine-ல் நம்முடைய பிளாக்கை இணைப்பது என்று பார்ப்போம். இதன் மூலம் நம் தளத்திற்கு மேலும் பல வாசகர்களை கவர முடியும் என்பதில்  மாற்று கருத்து இல்லை. பிளாக்கருக்கு SEO (Search Engine Optimization) கிடைத்தால் மட்டுமே நம்முடைய பிளாக் பிரபலமடையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


நம் தளத்தை எப்படி பிரபலமாக்குவது என்று சென்ற பதிவில் பார்த்தோம். அதில் இந்த குறிப்பும் கொடுத்து உள்ளேன். அதை எப்படி இணைப்பது என்று இங்கு விரிவாக காண்போம்.

Google Web Master Tools  

கூகுள் நிறுவனத்தின் Search Engine-ல்  இணைப்பதற்கு இந்த லிங்கில் செல்லுங்கள் https://www.google.com/webmasters/tools . உங்களுடைய Email Id , Password கேட்டால் கொடுத்து விட்டு உள்ளே செல்லுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
Google Webmaster
  • வரும் விண்டோவில் படத்தில் காட்டியுள்ளதை போல் Add a site என்பதை கிளிக் செய்து உங்களுடைய URL கொடுத்து Continue என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

Google webmasters
  • நீங்கள் கொடுத்த URL அங்கு சேர்ந்திருக்கும். அந்த URL மீது Click செய்யவும். உங்களுக்கு கீழே இருக்கும் விண்டோ வரும். 
google webmaster tool

  • இதில் Site maps என்ற இடத்தில் உள்ள Submit a Sitemap என்ற லிங்க் மீது  கிளிக் செய்யவும். உதவிக்கு மேலே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும். 
  • இப்பொழுது உங்களுக்கு ஒரு சிறிய text box ஓபன் ஆகும் அதில் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த இடத்தில் பேஸ்ட் செய்யவும். 
  • பேஸ்ட் செய்து விட்டு பக்கத்தில் உள்ள Submit sitemap என்பதை கிளிக் செய்தால் போதும் உங்களுடைய பிளாக்  Google Search Engine-ல் சேர்ந்து விடும். 
  • முக்கியமான விஷயம் நீங்கள் கொடுத்த Sitemap பக்கத்தில் பச்சை நிறத்தில் டிக் குறி வந்தால் மட்டுமே நீங்கள் கொடுத்த Site Map சரியாக Verify செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
Google Sitemap

  •   இல்லை என்றால் சற்று நேரம் பொருத்து இருந்து பார்க்கவும் டிக் குறிக்கு பதில் வேறு ஏதேனும் குறி வந்தால் உங்கள் Sitemap திரும்பவும் ReSubmit செய்யவும். 
Update Not verified owenship

  • நீங்கள் சரியான பிளாக்கர் ஐடி கொடுத்தபிறகும் Not verified owenship என்று error வந்தால் அங்கு அவர்கள் கொடுத்துள்ள Add Meta tag என்ற ஆப்சனை கிளிக் செய்து கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி கொள்ளுங்கள்.
  •   உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design- EditHtml பகுதிக்கு சென்று <head> இந்த வரியை கண்டு பிடித்து காப்பி செய்த கோடிங்கை இதற்க்கு கீழே/பின்னே பேஸ்ட் Save Template கொடுத்து விடவும் 
  • செய்துவிட்டு திரும்பவும் Google வந்து தளத்தில் உள்ள Verify பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் பிளாக் verify ஆகிவிடும்.  


Bing & yahoo Search Engine 
அடுத்து கூகுளிற்கு அதுத பெரிய Search Engine-களான Bing மற்றும் yahoo எப்படி இணைப்பது  என்று இங்கு பார்க்க போகிறோம். இதில் இணைப்பது மிகவும் சுலபம். இதற்காக Sitemap Generator என்ற அருமையான tool உள்ளது.  கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்யுங்கள் Sitemap Generator இதில் சென்றால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
Sitemap Generator
இதில் உங்கள் URL கொடுத்து Create Blogger Sitemap என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய URL சேர்ந்து உங்களுக்கு கீழே இருப்பதை போல வரும் 

Sitemap Generator
  நான் வட்டமிட்டு காட்டியுள்ள பகுதிகளில் நீங்கள் கிளிக் செய்தால் போதும் உங்கள் பிளாக் Search Engine-ல் சேர்ந்து விடும். அவ்வளவு தான் உங்களுடைய பிளாக்கை மிகப்பெரிய மூன்று Search Engine-ல் சேர்த்து விட்டோம். இதன் மூலம் புதிய வாசகர்கள் நம் தளத்திற்கு வருவார்கள். 
பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.


Comments