இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்

நாம் நேற்று இணையத்தில் பிளாக்கர் மூலம்  சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். நம்முடைய பிளாக்கருக்கு இணையத்தில் கிடைக்கும்  விளம்பரங்கள் மூன்று முறைகளில் செயல் படுகிறது அவையாவன
விளம்பரங்கள் செயல் படும் முறைகள்  
  1. Pay per Click - இந்த வகை விளம்பரங்கள் ஒரு கிளிக் செய்தால் இவ்வளவு தொகை என்று பிரித்து அதன் அடிப்படையில் செயல்படும்.
  2. Page per Impression - இந்த வகை ஒவ்வொரு முறையும் நம் தளத்தில் விளம்பரங்கள் லோடு ஆகி வரும் எண்ணிக்கை வைத்து செயல்படும். நம் கணினியின் IP எண்ணை வைத்து கணக்கிடபடுகிறது.
  3. Pay per Action - இந்த வகை விளம்பரங்கள்  நம் தளத்தில் வாசகர்கள் கிளிக் செய்து அந்த குறிப்பிட்ட பொருளை வாங்கினால் மட்டுமே நமக்கு வருவாய் வரும்.   
Contexual Ads
நம்முடைய பிளாக்கருக்கு வரும் விளம்பரங்களில் அதிக பிரபலமானதும் அதிக வருவாய் ஈட்டி தருவதும் இந்த வகை விளம்பரங்கள் தான். நம் வாசகர்கள் செய்யும் ஒவ்வொரு கிளிக்கிற்கும் குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து வழங்குவார்கள். பெரும்பாலும் இந்த வகை விளம்பரங்கள் pay per click வகையை சேர்ந்தது.
சிறந்தவை  :   Google Adsense, Kontera  

In-Text Advertising Programs :
 நீங்கள் கூட இணையத்தில் பார்த்திருப்பீர்கள் ஏதேனும் எழுத்தின் மீது நம் மவுசின் கர்சரை வைத்தால் அதிலிருந்து ஒரு விளம்பரம் தோன்றும். இந்த வகை விளம்பர்கன் TEXT LINK ADS எனப்படும். இந்த விளம்பரங்களுக்கு நாம் தனியாக நம் பிலாக்கரில் இடம் ஒதுக்க தேவையில்லை நம் பதிவில் உள்ள எழுத்தில் லிங்க் கொடுத்தாலே போதும் என்பது இதன் தனி சிறப்பு. பிளாக்கில் இணைக்க இணையத்தில் உள்ள விளம்பரங்களை பற்றி 
சிறந்தவை:   Info links இந்த தளம் சென்று உங்கள் பிளாக்கர் முகவரி மற்றும் உங்கள் விவரங்களை அவர்களுக்கு அனுப்பவும்.  


Affiliate Ads 
நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் நம் தளத்தில் உள்ள விளம்பர லிங்க் மீது கிளிக் செய்து அந்த பொருளை வாங்கினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையை நமக்கு வழங்குவார்கள் இந்த வகை விளம்பரங்கள் Affiliate Ads எனப்படும். இது போல விளம்பரங்களை நம் பிளாக்கிற்கு பெறுவது மிகவும் சுலபம்.
(சிறந்தவை)  ebay Affiliate , Amazon Affiliate

Sponsor Reviews 
இது சற்று வித்தியாசமான முறை ஆகும்.  சில நிறுவனங்கள் நம்மை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்கள் நிறுவனத்தை பற்றியோ அல்லது தயாரிக்கும் பொருட்களை பற்றியோ அல்லது அவர்களின் இணையதளத்தை பற்றியோ உயர்த்தி பதிவு எழுத பணம் தருவாகள்.
விளம்பரங்கள் பெற : pay per post தளத்திற்கு சென்று பெறவும்.


நீங்கள் எந்த விளம்பரதாரர்களின் தளத்திற்கு சென்றாலும் அனைத்து தளத்திற்கும் அடிப்படை தேவை உங்களுடைய தளத்தின் Rank அதனால் கீழே உள்ள சில முக்கியமான டிப்ஸ் கொடுத்துள்ளேன்.  அதனை கடைபிடித்தால் நிச்சயமாக நம் பிளாக்கை பிரபல மாக்கி அதன் மூலம் நம் வருவாயை பெருக்கி கொள்ள முடியும். 


பிளாக்கை பிரபலமாக்குவது எப்படி :- 
  • நம் பிளாக்கில் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு பயன்  தரும் விஷயத்தையோ அல்லது சுவாரஸ்யமான விஷயத்தையோ எழுத வேண்டும். 
  • நம் பதிவின் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் மிக கவனம் செலுத்தவேண்டும் . ஏனென்றால் தலைப்பை வைத்து தான் வாசகர்கள் நம் தளத்திற்கு வருவார்கள் மற்றும் பதிவிற்கு ஏற்ற தலைப்பை தேர்ந்தெடுக்கவும்.
  • ADULDTS ONLY பதிவுகளை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் நம் வாசகர்கள் எண்ணிக்கை கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது.
  • நம் பிளாக்கின் URL கூகுள், யாகு, பிங் போன்ற தேடியந்திங்களில் சேர்க்கவும். இது மிகவும் முக்கியமான ஒன்று.  இதன் மூலம் நாம் அதிக அளவு புதிய வாசகர்களை பெற வாய்ப்புள்ளது.  
  • பதிவு எழுதும் போது பதிவின் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தவும், வாசகர்களை கவரக் கூடியதாகவும் அதே சமயம் பதிவிற்கு சம்பந்தமாகவும் தேர்வு செய்ய வேண்டும்.    
  •  நம் பிளாக்கில் எவ்வளவு வாசகர்கள் வருகிறார்கள் என்பதைவிட எவ்வளவு நேரம் ஒவ்வொரு பக்கமும் பார்வையிடப்படுகிறது என்பதை வைத்தே ALEXA RANK மதிப்பிட படுகிறது. ஆகவே நம் பிளாக்கை வாசகர்களை கவரும் விதத்தில் அழகாக மாற்றி கொள்ளுங்கள்.
  • உங்கள் பதிவில் படத்தினை சேர்த்தால் கண்டிப்பாக அந்த பதிவிற்கு ஏற்ற தலைப்பை கொடுக்கவும். ஏனென்றால் Google Images போன்ற தேடியந்திரகளில் தேடும் போது தலைப்பை வைத்தே படங்கள் தேர்வு பக்கத்தில் வரும்.    
  •  உங்கள் பிளாக்கிற்கு ஏற்ற keyword செலக்ட் செய்து உங்கள் டெம்ப்ளேட்டில் meta tag சேர்த்து விடவும். 
  • உங்கள் பிரௌசரில் Alexa Rank toolbar சேர்க்கவும். நிச்சயமாக இதன் மூலம் நம் பிளாக்கின் ரேங்க் உயர வாய்ப்புள்ளது.  
  • முக்கியமான விஷயம் தவறாமல் பதிவு போடவும் அதாவது அடிக்கடி பதிவு போடுவது என்று அர்த்தமல்ல தினமும் ஒரு பதிவு போட்டால் தினமும் ஒரு பதிவு போடவும். அல்ல வாரம் ஒருமுறை போட்டால் தவறாமல் அந்த நாளில் போட்டு விடவும். 
இந்த குறிப்புகளை கண்டிப்பாக நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக உங்கள் பதிவை பிரபல மாக்கலாம். பின்பு விளம்பரங்களையும் பெறலாம்.

டுடே லொள்ளு  
Photobucket
ரோபோ சூட்டிங் போகணும்பா யாராவது வண்டி வச்சிருந்தால் கொஞ்சம் டிராப் பண்ணுங்கப்பா 


பதிவு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டு விட்டு செல்லவும்.

Comments