ஜிமெயிலில் அனைத்து ஈமெயில்கள்களையும் ஒரே நிமிடத்தில் டெலீட் செய்ய

உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் தேவையற்ற மெயில்களால் நிரம்பி வழிகிறதா? 100 அல்ல ஆயிரம் அல்ல அதற்க்கு மேலும் மெயில்கள் சேர்ந்து உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் குப்பை கூடையாக மாறிவிட்டதா? இவைகளை ஒவ்வொரு பக்கமாக தேடி அழிப்பதற்குள் பொழுது விடிந்துவிடும். இவைகள் அனைத்தையும் ஒரே நொடியில் அழிக்க வேண்டுமா? கீழே உள்ள வழிமுறை உபயோகிக்கவும்.

முதலில் ஜிமெயிலுக்கு செல்லுங்கள் இன்பாக்ஸில் உள்ள மெயில்கள் அனைத்தும் உங்களுக்கு தேவையில்லை என உறுதி செய்த பிறகு Select பகுதியில் உள்ள சிறிய கட்டத்தை டிக் குறியிட்டு தேர்வு செய்யவும்.


இப்பொழுது அந்த பக்கத்தில் உள்ள அனைத்து ஈமெயில்களும் தேர்வு செய்யப்படும். அதோடு மேலே கட்டமிட்டு காட்டியிருப்பதை போல ஒரு செய்தியும் வரும் அதில் நீங்கள் இப்பொழுது தேர்வு செய்துள்ள ஈமெயில்களின் எண்ணிக்கையும் அருகில் Select all என்று உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து ஈமேயில்களின் எண்ணிக்கையும் காட்டும். 

இரண்டாவத்தாக உள்ளதை கிளிக் செய்தால் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து ஈமெயில்களும் தேர்வு செய்யப்படும். இனி வழக்கம் போல டெலிட் பட்டனை அழுத்தினால் ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அதில் OK கொடுத்தால் போதும் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து ஈமெயில்களும் அழிக்கப்பட்டு விடும். 

இந்த ஈமெயில்கள் அனைத்தும் மீண்டும் வேண்டுமென்றால் Trash போல்டரில் இருந்து மறுபடியும் இன்பாக்சிற்கு கொண்டு வரலாம். 

இது சின்ன விஷயம் ஆனால் இது தெரியாம நான் ஒவ்வொரு பக்கமாக டெலீட் செய்தேன் பிறகு தான் தெரிந்து கொண்டேன் இந்த வசதியை. என்னை போல அவதி படுபவர்களுக்காக இந்த பதிவு.

Comments