Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவது எப்படி - Vacation Responder

கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவை வசதியான ஜிமெயிலில் ஏராளமான வசதிகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Vacation Responder வசதி. நாம் எப்பொழுதாவது வெளியூருக்கு சென்று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகள் காரணமாக உங்களின் ஈமெயிலை பார்க்க முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் உங்களுக்கு அனுப்பப்படும் ஈமேயில்களுக்கு பதில் போட முடியாமல் போய்விடும். உங்களுக்கு மெயில் அனுப்பி விட்டு பதில் வரும் என காத்திருப்பவர்க்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும். நீங்கள் எப்ப்லோலுது திரும்ப வருகிறீர்களோ அப்பொழுது தான் Reply அனுப்ப முடியும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவதோடு மட்டுமில்லாமல் ஏதேனும் தொழில் ரீதியான ஈமேயிலாக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

இந்த பிரச்சினைகளை தீர்ப்பது தான் ஜிமெயிலின் Vacation Responder வசதி. இந்த வசதியின் மூலம் ஒரு குறிப்பிட்ட செய்தியை சேமித்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் நீங்கள் இல்லாத சமயத்தில் வரும் அனைத்து ஈமேயில்களுக்கும் Automatic பதில் அனுப்பி விடும். இதனால் ஈமெயில் அனுப்பிவரும் உங்களின் நிலைமையை புரிந்து கொள்வார். பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

Vacation Responder வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி:
  • முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • அடுத்து Options ==> Mail Settings பகுதிக்கு செல்லுங்கள். 
  • உங்களுக்கு வரும் விண்டோவில் Vacation Responder என்ற வசதி பகுதிக்கு செல்லவும்.
அடுத்து கீழே படத்தில் உள்ளதை போல Settings மாற்றி கொள்ளுங்கள்.  கொள்ளுங்கள்.


First Day - நீங்கள் ஈமெயில் பார்க்க முடியாமால் போகும் தேதி.
Ends - இந்த வசதியை நிருதப்படவேண்டிய நாள்.

பிறகு அந்த கட்டத்தில் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள டிக் மார்க் தேர்வு செய்தால் உங்கள் மெயில் Contact List ல் இருந்து வரும் மெயில்களுக்கு மட்டும் Automatic Reply Email அனுப்பப்படும். வேறு ஈமேயில்கள் வந்தால் Automatic Reply அனுப்பாது.

அனைத்தும் தேர்வு செய்த பின்னர் கீழே உள்ள Save Changes என்ற பட்டனை கிளிக் செய்தால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும். அதற்க்கான அறிவிப்பு உங்கள் ஜிமெயில் முகப்பு பக்கத்தில் இருக்கும்.

திரும்ப வந்து இதில் உள்ள Endnow லிங்கை அழுத்தினால் இந்த வசதி Off ஆகிவிடும்.


இந்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஓட்டு போட்டு செல்லவும். மற்றும் சமூக தளங்களில் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். 

Tech Shortly

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

17 comments :

  1. பயனுள்ள பகிர்விற்க்கு நன்றி நண்பரே..

    எனினும் சிறு சந்தேகம்.இது தேவையில்லாத மெயில்களுக்கும் reply சென்றுவிடுமா..?

    நன்றி நண்பரே..

    இன்று எனது வலையில்



    எனக்குள் நான் (பசுமையான பயோடேட்டடா)


    பதிவினை காண அன்புடன் அழைக்கிறேன்

    ReplyDelete
  2. @சம்பத் குமார்


    அதற்க்கு தான் கீழே உள்ள டிக் மார்க் தேர்வு செய்து விடவும்..

    ReplyDelete
  3. //அதற்க்கு தான் கீழே உள்ள டிக் மார்க் தேர்வு செய்து விடவும்..//

    நன்றி நண்பரெ..

    சரியாகிவிட்டது..ஆக்டிவேட் செய்தும் விட்டேன்

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  4. என்ன? இன்னும் பிரகாஷையும், தக்காளீயையும் காணோம்?

    ReplyDelete
  5. உபயோகமான பகிர்வுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  6. உண்மையில் நல்ல தகவல்தான்...

    ReplyDelete
  7. அருமையான தகவல் நண்பா
    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

    த.ம 4

    ulavu 4

    thamil 10- 10

    indli 9

    ReplyDelete
  8. இதோ நானும் செய்து விட்டேன். தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. நானும் செட் செய்துவிட்டேன் நன்றி...!!!

    ReplyDelete
  10. எடுத்துச் சொல்ல ஒரு ஆள் வேண்டும். நன்றி.

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. தகவலுக்கு நன்றி அண்ணா...

    அன்புடன்
    ராஜா

    ReplyDelete
  13. உபயோகமான தகவல் பல உங்கள் வலைப்பூல தெரிஞ்சிக்கிறேன் சகோதரரே நன்றி அதுக்கு.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press