Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

Youtube- ஐ வீழ்த்த யாகூவின் புதிய வீடியோ தளம்- Yahoo Video

யூடியுப் தளத்தை பற்றி ஏற்க்கனவே அனைவர்க்கு தெரியும் இணையதளங்களில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டு களிக்க கூகுள் வழங்கும் ஒரு சேவையாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப் படுகிறதாம். இந்தியாவில் ஒருவர் சராசரியாக 58வீடியோக்களை ஒரு மாதத்தில் பார்க்கிறாராம். கூகுளின் தளங்களில் இப்பொழுது மிகப்பெரிய வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது யூடிப் தளம் மட்டுமே. இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த யாகூ நிறுவனம் யூடியுப் தளத்திற்கு போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது.


இந்த தளத்திலும் யூடியுப் தளத்தில் உள்ளதை போலவே பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம். யாஹூ தளம் இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு காப்புரிமை வழங்கப்பட்ட ஒரிஜினல் வீடியோக்களை மட்டுமே இந்த தளத்தில் பகிர்ந்துள்ள்ளது. யாகூ நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தான் முழு நீளத் திரைப்படத்தை காணும் Movieplex வசதியை கொண்டுவந்தது. அதற்குள் இப்பொழுது புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.


கீழே வீடியோக்கள் மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் பட்டியல் 

Category
Partners
NewsNDTV, Headlines Today , Aajtak, Newzstreet, ANI, Star News, Star Majha, Star Ananda
MoviesDigit 9, Shemaroo, Ultra, Reliance Pictures,Sri Ganesh Video, Star Entertainment, PVR Pictures, Shree International
TV ShowsStar Plus, Star One, Channel V, Star PravahStar Jalsa, Star Vijay, Star World, 9XM
Regional and English MoviesDigit 9, Shemaroo, Ultra, Kavithalaya,Sri Ganesh Video
FinanceNDTV (Profit)
BollywoodNDTV, Newzstreet, Lehren, Glamsham, Saanskruti, Movie Talkies, Nine Winds, Digit 9

அவ்வளவும் ஒரிஜினல் வீடியோக்கள் என்பதால் தரத்தை பற்றி கவலை இல்லை. ஆனால் வாசகர்கள் வீடியோக்களை அப்லோட் செய்யும் வசதி இந்த தளத்தில் இல்லை.  ஆதலால் தற்பொழுது யூடியுப் தளத்துடன் எந்த விதத்திலும் போட்டி போட முடியாது. பிற்காலத்தில் மேலும் பல வசதிகளை கொண்டு வந்தால் இந்த தளமும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் ஐயமில்லை.

இந்த தளத்திற்கு செல்ல - http://in.video.yahoo.com/

Tech Shortly

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

15 comments :

  1. அறிமுகம் செய்ததற்கு நன்றி!
    இந்தத் தளத்தில், videoவை Link மற்றும் பகிர Embeded வசதி இருக்கிறது! தயவு செய்து மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்!

    ReplyDelete
  2. தங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள பதிவாக
    அவசியம் பதிவர்கள அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய
    கனமான விஷயங்களை தாங்கியதாக்வே உள்ளது
    தொடர்ந்து அனைத்து பதிவுகளையும் இந்த வாரத்தில்
    படிக்க உத்தேசித்துள்ளேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @Er.Rajkumar P.P

    தவறை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே... அந்த தகவலை நீக்கி விட்டேன்..

    ReplyDelete
  4. எனக்கு உபயோகமான விஷயம் சொல்லி இருக்கீங்க நன்றி மாப்ள!

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல். நன்றி.

    ReplyDelete
  6. பயனுள்ள தகவலுக்கு நன்றி சசி சார். உங்கள் பிளாக்கில் நீங்கள் அளிக்கும் பதில் மட்டும் நீலநிறக் கட்டத்தில் வருகிறதே. அதுபோல என் பிளாக்கிலும் வர விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? உதவும்படி வேண்டுகிறேன். என் இமெயில்: bganesh55@gmail.com நன்றி சார்...

    ReplyDelete
  7. அருமையான தகவல் நன்றி...!!!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. தகவலுக்கு நன்றி!
    (//பெரும் என்பதில்// 'பெறும்' என்பதே சரி, அடுத்த முறை கவனம் please!)

    ReplyDelete
  12. மிக்க நன்றி சகோ ஆனால் யரியுப் மாதிரி இணைய இணைப்பிற்கேற்றது போல அங்கே விடியோவை காணமுடியாது... அதனால் இது போட்டியானது என்று கூறமுடியாதுள்ளது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)

    ReplyDelete
  13. நம்ம சைட் பக்கமெல்லாம் உங்க காத்து வீசாதோ?
    இருக்கட்டும்.இருக்கட்டும்!

    ReplyDelete
  14. தோழரே ...நல்ல தகவலை தெரிவித்ததற்கு
    ரொம்ப தாங்க்ஸ் ........
    மேலும் இது போன்ற தகவல்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press