Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பேஸ்புக் கணக்கை ஒரு ஐடியில் இருந்து வேறொரு ஈமெயில் ஐடிக்கு மாற்றுவது எப்படி?

கூகுள் சேவைகளுக்கு அடுத்தப்படியாக வந்தேமாதரத்தில் அதிக இடுகைகள் இந்த பேஸ்புக் தளத்தை பற்றியதாக தான் இருக்கும். அந்த அளவு பல்வேறு வசதிகள் சமூக இணையதளமான பேஸ்புக்கில் உள்ளது. பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் ஈமெயில் ஐடியில் ஓபன் செய்து விடுகின்றனர். ஆதலால் அவர்களின் ஈமெயில் ஐடிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான ஈமெயில் அறிவிப்புகள் வருவதால் முக்கியமான ஈமெயில்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது. அல்லது உங்களின் பெர்சனல் ஈமெயில் தெரிந்து விடுவதால் அந்த ஐடியை சுலபமாக ஹாக் செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது. ஆதலால் பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு ஈமெயில் ஐடிக்கு மாற்றுவது என பார்க்கலாம்.

  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் Email பகுதியில் உள்ள Edit என்ற லிங்கை கிளிக் செய்யவும். 
  • அடுத்து Add another Email என்பதை கிளிக் செய்யவும். 
  • இப்பொழுது வரும் விண்டோவில் உங்களின் புதிய ஈமெயில் ஐடியை கொடுத்து பேஸ்புக்கில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற பட்டனை அழுத்தவும். 
  • மேலே உள்ள படத்தில் உள்ளது போல சரியாக கொடுத்து Save Changes என்ற பட்டனலை அழுத்தியவுடன் உங்களின் புதிய ஈமெயில் ஐடிக்கு Activation link செய்தி அனுப்ப பட்டதற்கான அறிவிப்பு வரும். 
  • உங்களின் ஈமெயில் ஓபன் செய்து அதில் உள்ள Activation Link கிளிக் செய்தால் உங்களின் புதிய ஈமெயில் ஐடி பேஸ்புக்கில் சேர்ந்து விடும்.
  • மறுபடியும் Account Settings - Email - Edit பகுதிக்கு சென்று புதிய ஈமெயிலை தேர்வு செய்து பேஸ்புக் பாஸ்வேர்ட் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை கிளிக் செய்து விடவும். 
  • இப்பொழுது மறுபடியும் அதே Email - Edit பகுதிக்கு சென்று பழைய ஈமெயில் அடிக்கு நேராக உள்ள Remove என்ற லிங்க் அழுத்தி கீழே பாஸ்வேர்ட் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய ஈமெயில் ஐடி முழுவதுமாக பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கிவிடும்.

இனி நீங்கள் புதிய ஈமெயிலில் பேஸ்புக் கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் பெர்சனல் ஈமெயில் ஐடியையும் பாதுகாக்கலாம்.

டிஸ்கி: நண்பர் ஒருவர் நேற்று மொபைலில் தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்டதால் இந்த பதிவு அனைவருக்கும் பயன்படும் என்பதால்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

25 comments :

  1. இது ரொம்ப புரோசனமா இருக்கும்யா நன்றி!

    ReplyDelete
  2. ஒரு ஐடியில் இருந்து மற்றோரு ஐடிக்கு பிளாக்கை எப்படி மாற்றுவது என்று தங்கள் மூலமாக நான் தெரிந்துக் கொண்டேன்..

    தற்போது பேஸ் புக்-யை எப்படி அதுபோன்று மாற்றுவது என்ற எளிய விளக்கத்தின் மூலம் அறிந்துக்கொண்டேன்..

    நன்றி..!

    ReplyDelete
  3. பேஸ் புக்கில் எனக்கு வேறொறு பிரச்சனை இருக்கிறது...


    Add Friend கொடுத்தால்

    ///////
    Sorry, we can't send your request
    Because sending requests to strangers is considered spam, your friend requests have been blocked for 7 days. Please visit the help center to learn more or let us know if you believe we've made a mistake.
    //////


    என்ற தகவல் வருகிறது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொலல் முடியுமா..?

    ReplyDelete
  4. யாருப்பா அந்த நண்பர்...

    நிறைய கேளுங்கப்பா...

    நன்றி..

    ReplyDelete
  5. @கவிதை வீதி... // சௌந்தர் //

    நண்பா நிறைய பேருக்கு ஒரே நேரத்தில் Request அனுப்பினால் இப்படி தான் ஆகும். 7 நாட்கள் கழித்து உபயோகிக்கவும்.

    ReplyDelete
  6. இந்தப் பிரச்சனையே எனக்குக் கிடையாது!எங்கிட்டதான் மூஞ்சிப் பொத்தகம் இல்லியே?ஹி!ஹி!ஹி!

    ReplyDelete
  7. வணக்கம் பாஸ்,
    இந்த ஐடி மாற்றும் விடயம் எனக்கு ஏலவே தெரியும், ஆனாலும் ரொம்ப சூப்பரா, விளக்கமா சொல்லியிருக்கிறீங்க!
    நன்றி.

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல் .
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  9. ரொம்ப நாளா ட்ரை பண்ற சமாச்சாரம். பயனுள்ள வகையில் விளக்கம். பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  10. தேவையான பதிவுதான்..உடனே செயல் படுத்த வேண்டும்..

    ReplyDelete
  11. அருமையான தகவல் தான் மாம்ஸ் .
    எனக்கு அதில் கணக்கு இல்லை .ஆனால் நிறைய நபர்கள் தாங்கள் சொன்னது போல் அவஸ்தைதான் படுகிறார்கள் .அவர்களுக்கு மிகவும் உபயோகப்படும் .

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  12. thxs for this useful post sasi!!

    ReplyDelete
  13. டிஸ்கி ல சொன்ன நண்பர் நான்தான்....ரொம்ப நன்றி அண்ணா ....

    அன்புடன்
    ராஜா
    http://cinnapayan.blogspot.com/

    ReplyDelete
  14. பயனுள்ள உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சகோ ....

    ReplyDelete
  15. தகவல்கள் ரொம்ப உபயோகம் வழக்க்மபோல....இன்றைய என் இடுகைல உங்க பேரையும் ஹீரோக்கு ஃப்ரண்டா போட்டிருக்கேன் சசிகுமார்!!

    ReplyDelete
  16. >>டிஸ்கி: நண்பர் ஒருவர் நேற்று மொபைலில் தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்டதால் இந்த பதிவு அனைவருக்கும் பயன்படும் என்பதால்.

    hi hi சசி நண்பியா? நண்பரா? ஹி ஹி

    ReplyDelete
  17. I have a problem of maintaining few profiles in fb. I have mail ids from gmail, yahoo and sify. I have few friends there in all fb profiles. I wanna merge all and wanna see them all in my main fb account. How shall i do it? Solution much appreciated!

    ReplyDelete
  18. நண்பர் சசி அவர்களுக்கு வணக்கம்.
    Face bookல் Ticker என்பது என்ன? எனது Face புக் ஒவ்வொரு அசைவுகளும் எனது நண்பன் ஒருவனுக்கு தெரிகிறது. அதை எப்படி activate, deactivate செய்வது.

    ReplyDelete
  19. நண்பர் சசி அவர்களுக்கு வணக்கம்.
    Face bookல் Ticker என்பது என்ன? எனது Face புக் ஒவ்வொரு அசைவுகளும் எனது நண்பன் ஒருவனுக்கு தெரிகிறது. அதை எப்படி activate, deactivate செய்வது.

    ReplyDelete
  20. தமிழார்வன் உங்கள் கஷ்டம் புரிகிறது.http://www.facebook.com/help/ticker
    இந்த லிங்கில் கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் பெறுங்கள்.
    அப்பன்.பி.கே.எஸ்,ஈரோடு.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press