பீட்பர்னரில் Email Delivery நேரத்தை மாற்ற [ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-3]

பீட்பர்னரில் வாசகர்களை அதிகரிப்பது சம்பந்தமாக இதுவரை இரண்டு (ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-1ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க-2) பதிவுகளை பார்த்து விட்டோம். Feedburner பற்றி பதிவர்களுக்கு தெரிந்திருக்கும். உங்களுடைய பதிவில் நீங்கள் போடும் பதிவுகள் உங்களின் ஈமெயில் வாசகர்களுக்கு மெயிலில் செல்லும். அவர்கள் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்கள் தளத்திற்கு வந்து பதிவை படித்து செல்வார்கள். ஆனால் வாசகர்கள் எப்பொழுதும் காலை நேரங்களில் அவரவர் வேலைகளில் பிசியாக இருப்பார்கள் ஆதலால் அந்த நேரத்தில் நம் மெயில் சென்றால் அவர்கள் பார்ப்பது அறிது. மதிய நேரங்களில் கொஞ்சம் நேரம் கிடைக்கலாம் அந்த நேரத்தில் Feedburner ஈமெயில் சென்றால் அவர்கள் அதை படிக்கும் வாய்ப்பு சற்று அதிகமே. அதனால் நமது வலைப்பூவுக்கும் வாசகர்கள் வர வாய்ப்புள்ளது. ஆகவே எப்படி பீட்பர்னரில் நேரத்தை மாற்றுவது என கீழே பாருங்கள். (இது பல பதிவர்களுக்கு தெரிந்து இருக்கும் தெரியாதவர்களுக்காகவே இப்பதிவு)

  • முதலில் உங்கள் பீட்பர்னர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். உங்களின் பிளாக் Feed மீது கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். 
  • Publicize - Delivery Options என்பதை அடுத்தடுத்து கிளிக் செய்யுங்கள். 
  • உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Email நேரம் கொடுக்கப்பட்டிருக்கும். 
  • அதில் பத்திற்கும் மேற்ப்பட்ட நேர இடைவெளிகள் காட்டும் இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள். 
  • நான் 1:00 pm - 3:00 pm என்பதை தேர்வு செய்துள்ளேன். இது போல உங்களுக்கு எது சரியென படுகிறதோ அந்த நேர இடைவெளியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து கீழே உள்ள Save என்ற பட்டனை அழுத்தினால் உங்களின் நேரம் சேமிக்கப்படும். 
இனி நீங்கள் ஏதேனும் புதிய பதிவு போட்டால் நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு உங்களின் Feedburner ஈமெயில் செல்லும்.

Comments