Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி

இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.


 மற்றவர்கள் திரும்பி செல்ல வேண்டியது தான். முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு ஆன்லைனில் Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்லைனில் Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.


Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :
இதற்காக ஒரு http://appointments.uidai.gov.in/ இணையப்பகுதியை உருவாக்கி உள்ளது. 

தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு(Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab)  மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்த லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


உங்களுக்கு இது போன்று விண்டோ வரும் இதில் நீங்கள் எப்பொழுது யாரை பார்க்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் இருக்கும். இதை ஒரு Print எடுத்துக்கொண்டு அதனோடு உங்களின் ID Proof மற்றும் Address proof போன்றவைகளை எடுத்து கொண்டு குறிப்பிட்ட அதிகாரியை பார்த்து உங்கள் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். 

அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:
Id Proof மற்றும் Address Proof க்கு எவைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் உண்டாகலாம். அவர்கள் கீழே உள்ள பதத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு செல்லலாம். 


ஆன்லைனில் Enrolment Form டவுன்லோட் செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும் என்பர் எண்ணினால் இந்த லிங்கில் சென்று Enrolment Form டவுன்லோட் செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும். 

வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு இந்த லிங்கில் http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx கிளிக் செய்து செல்லுங்கள். 

இதில் உங்களின் மொபைல் எண்ணையும், Token ID கொடுத்து தேவையான பட்டனை அழுத்தி பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் சந்தேகங்களுக்கு:
உங்களுக்கு இந்த Aadhar அடையாள அட்டையை பற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் Toll free: 1800-180-1947 மற்றும் Email: appointments@uidai.gov.in இவைகளை தொடர்பு கொண்டு கேட்கலாம். 

முடிந்தவரை அனைத்து தகவல்களும் இங்கு தரப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் வேண்டுமென்றால் கருத்துரையில் கேட்கவும்.

இந்த செய்தி அனைவருக்கும் சென்றடைய கீழே ஓட்டு பட்டைகளில் ஓட்டு போட்டும் சமூக தளங்களில் பகிரவும்.

Techshortly

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

27 comments :

  1. Super informetion.....
    Thanks.....

    ReplyDelete
  2. எனக்கென்னவ இந்த அடையாள அட்டை மொத்த இந்தியாவையும் உளவுபார்க்க அரசுக்கள் செய்துள்ள ஏற்பாடோ என தோன்றுகின்றது
    http://mydreamonhome.blogspot.com/

    ReplyDelete
  3. இதுவாவது சரியா வரணும்...அப்பத்தான் எவன் எவன் என்னன்னே பண்றான்னு ஈசியா கண்டு பிடிக்க முடியும் ஹிஹி...பகிர்வுக்கு நன்று மாப்ள!

    ReplyDelete
  4. payanulla padhivu nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  5. சீக்கிறம் தமிழகத்திற்க்கு வரட்டும் வாங்கிடுவோம்...

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  6. என்னை போன்ற மும்பைவாசிகளுக்கு சிறந்தது நன்றி..!

    ReplyDelete
  7. பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி சசி.

    ReplyDelete
  9. அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. முக்கியமான தகவலை தெரிவித்து இருக்கிறிர்கள்
    தெரிவித்தமைக்கு மிக்க நன்றி .....சரி
    NRI ஆட்கள் எப்படி வாங்குவதாம் ??
    வெளிநாட்டில் இருந்தே வாங்க முடியுமா ?
    சிரமம் பார்க்காமல் பதில் அளிக்கவும்

    ReplyDelete
  11. உண்மையிலேயே உங்களுக்கு சமூக அக்கறை வந்துவிட்டது என்று நினைக்கிறேன் சசி! இத்தகைய பதிவுகள் என்றும் நிலைத்து நிற்கும்..!! சபாஷ் சசி!! எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..!!!

    ReplyDelete
  12. விளக்கமான பதிவு,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. useful information friend

    www.astrologicalscience.blogspot.com

    ReplyDelete
  14. வணக்கம் பாஸ்,

    தமிழகச் சொந்தங்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  15. thanks good article keep it up...........

    ReplyDelete
  16. thanks & good article........

    ReplyDelete
  17. உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  18. உங்கள் தகவலளுக்கு மிக்க நன்றி............

    ReplyDelete
  19. KINDLY CLARIFY THIS: MY FAMILY HAS TOTAL 5 MEMBERS. EXCEPT MY MOTHER AND ME, ALL THE THREE MEMBERS GOT THEIR AADHAAR CARD. MYSELF AND MY MOTHER BOTH HAVE TO APPLY FOR A NEW CARD NOW. MY QUERY IS: WHETHER WE HAVE TO SUBMIT SEPERATE FORM FOR EACH OF US? OR WE CAN SUBMIT BOTH NAMES IN A SINGLE FORM?. THE AADHAAR FORM CONTAINS A COLUMN LIKE "DETAILS OF RELATIVE AT COLUMN NO.5. IS IT ENOUGH TO PROVIDE THERE MY MOTHER'S NAME TO GET AADHAAR CARD FOR BOTH. (As My mother is an aged lady and cant spend more time in Govt offices). PLS CLARIFY.

    ReplyDelete
  20. VERY GOOD TIPS FOR NEW PEOPLES, CONTINUE YOUR WAY

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press