போலி பேஸ்புக் Wall Message உருவாக்குவது எப்படி? ஏமாறாதீர்கள் எச்சரிக்கை!!

இணையத்தில் காணப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பினால் நீங்கள் இணையத்தை புதிதாக பயன்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது இணைய ஏமாற்றுதல்களை பற்றி அறியாமல் இருந்திருக்க வேண்டும். இணையத்தில் மோசடிக்காகவும், நண்பர்களுக்குள் விளையாடி கொள்ளவும் இது போன்ற புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாம் நண்பர்களுடன் விளையாடி கொள்ளும்படி இணையத்தில் நண்பர்கள் குமிழும் ஒரு இடமாக பேஸ்புக் தளத்தில் போலியான பேஸ்புக் Wall Mssage உறுவாக்குவது எப்படி என பார்ப்போம்.
  • இதற்க்கு ஒரு இணையதளம் உள்ளது முதலில் இந்த the wall machine லிங்கில் சென்று அந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • அதிலுள்ள f Connect என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Allow பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • மேலே இருப்பதை போல விண்டோ வந்தவுடன் உங்களுக்கு தேவையான படி அதை எடிட் செய்து கொள்ளலாம். 
  • போட்டோவும் உங்களுக்கு தேவையான போட்டோவை தேர்வு செய்து கொள்ளலாம். 
  • போட்டோ தேர்வு செய்யும் பொழுது கூகுள் மூலம் தேடி பெரும் வசதியும், உங்களின் பேஸ்புக் நண்பர்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் கொடுத்து இருக்கிறார்கள்.

இப்படி விருப்பம் போல உருவாக்கி நண்பர்களோடு விளையாடி மகிழலாம். 

டிஸ்கி: பதிவை படித்து கொண்டு இருக்கும் நண்பர்களே உங்கள் நண்பர்களும் இதுபோல ஏதேனும் போலியாக உருவாக்கி உங்களை ஏமாற்ற நினைக்கலாம் ஆதலால் நம்ப வேண்டாம். நீங்க இதுபோல ஒண்ணு உருவாக்கி பதிலடி கொடுங்க..

Comments