பயன்கள் :
- தினமும் நீங்கள் தான் பதிவு போடவேண்டும் என்ற அவசியம் இல்லை. நேரமில்லாத பொழுதும் உங்கள் நண்பரும் உங்கள் பிளாக்கில் பதிவிடுவார்.
- நீங்கள் காலையில் பதிவு போட்டால் மாலையில் உங்கள் நண்பர்கள் பதிவு போடுவார்கள் ஒரே நேரங்களில் பல பதிவுகளும் போடலாம். இதனால் உங்கள் பிளாக் வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறும்.
- நம் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்தால் அவர் என் தளத்தில் உள்ளதை Delete செய்து விடுவாரே என்று கவலை பட வேண்டாம். அவரால் உங்கள் பிளாக்கில் ஒன்றும் செய்ய முடியாது. (Admin வசதியை நீங்கள் அளிக்காதவரை).
- உங்கள் ஐடியை தரவேண்டியதில்லை அவருக்கென்று தனி ஐடி கொடுக்கப்படும். அவர் ஐடியில் நுழைத்தால் Admin சம்பந்தமான வசதிகள் எதுவும் காட்டபடாது.
- ஒருவேளை உங்கள் விருந்தினரின் பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் நீங்கள் நீக்கி விடலாம் வேண்டுமென்றால் அவரை விருந்தினர் வசதியில் இருந்தே நீக்கி விடலாம்.
- முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- மேலே படத்தில் உள்ளது Settings - Permissions - ADD AUTHORS என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- இப்பொழுது உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- அதில் உங்களின் நண்பர்களின் இமெயில் ஐடி தெரிந்தால் கொடுக்கவும் தெரியவில்லை என்றால் Choose From Contacts என்பதை க்ளிக் செய்து உங்கள் நண்பர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
- நண்பர்களின் மெயில் ஐடியை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள INVITE என்ற பட்டனை அழுத்தி விடவும்.
- அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த அனைவருக்கும் உங்கள் அழைப்பு லிங்க் செல்லும் அவர்கள் அந்த லிங்கில் க்ளிக் செய்து உங்கள் விருந்தினர் பதிவராக சேர்ந்து கொள்ளலாம்.
- இந்த லிங்கில் க்ளிக் செய்து அவர்களின் பாஸ்வேர்ட் கொடுத்து பதிவு போட ஆரம்பித்து விடலாம்.
டுடே லொள்ளு
திரட்டிகளில் சேர்க்கிற வரைக்கும் நல்லா தூங்கிக்கோ அப்புறம் உன்னாலா நிம்மதியா தூங்க முடியாது யாராவது கதவ தட்டிகிட்டே இருப்பாங்க.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து. |
Comments