நினைத்த இடத்தில் கூகுள் மற்றும் விக்கியில் தேடலாம்- Chrome Add On

இணைய உலவிகளில் மூன்றாவது பிரபலமான உலவி உள்ளது இந்த கூகுளின் வெளியீடான இந்த கூகுள் KROM உலவி. இணைய உலவிகளில் வேகமாக செயல்படும் வகையில் வடிவமைத்து இருப்பதால் அனைவரும் இதனை விரும்புகின்றனர். கூகுள் குரோம் உபயோகிப்பவர்களுக்கு மேலும் ஒரு பயனுள்ள வசதி இணையத்தில் எந்த இடத்தில் இருந்தும் கூகுளில் தேடலாம். கூகுள் மட்டுமலாமல் விக்கிபீடியா மற்றும் மேலும் இரு தளங்களில் கூட தேடி கொள்ளலாம். இவ்வசதியை பெற நம் கணினியில் ஒரு நீட்சியை(Add-on) நிறுவ வேண்டும்.
  • இந்த லிங்கில் சென்று Fastest Chrome நீட்சியை உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
  • உங்கள் கணினியில் இந்த நீட்சியை நிறுவியவுடன் அது வேலை செய்ய ஆரம்பித்து விடும். 
  • இந்த நீட்சியை நம் கணினியில் நிறுவுவதால் நிறைய பயன்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது இந்த தேடுதல் வசதி.
  • நீங்கள் ஏதோ ஒரு இணைய பக்கத்தில் இருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். உங்களுக்கு அந்த தளத்தில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தயை கூகுளில் தேட நினைத்தால் நீங்கள் கூகுளுக்கு வந்து தட்டச்சு செய்து தேட வேண்டிய அவசியமில்லை.
  • அந்த தளத்தில் அந்த வார்த்தையை மவுசின் மூலம் தேர்வு செய்யுங்கள். தேர்வு செய்தவுடன் உங்களுக்கு சிறிய கட்டத்தில் நான்கு பட்டன்கள் தெரியும். 
  • அதில் Google, Surf canyon, Duck Duck Go, wikipedia ஆகிய நான்கு தேடியந்திரங்கள் காட்டும் இதில் உங்களுக்கு தேவையான தேடியந்திரத்தில் தேடி கொள்ளலாம்.
  • மற்றும் இதில் உள்ள இன்னொரு வசதி இணையத்தில் நாம் பார்த்து கொண்டிருக்கும் பக்கத்தை முடித்து அடுத்த பக்கத்திற்கு செல்ல நாம் Next க்ளிக் செய்ய வேண்டியதில்லை.
  • நீங்கள் படித்து கொண்டிருக்கும் பக்கத்தின் கடைசி பகுதிக்கு நீங்கள் வந்தவுடன் இந்த நீட்சி தானாகவே அந்த பக்கத்தை திறந்து காட்டும்.
  • இனி நாம் குரோமை மேலும் வேகமாக கையாளலாம்.
டுடே லொள்ளு 


சரி சரி தூங்கியது போதும் எழுந்து வந்துள்ள கமெண்ட்டை பப்ளிஷ் பண்ணு.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

Comments