Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

தன்னிலை விளக்கம் - தயவு செய்து கருத்து கூறவும்.

(இந்த பதிவுக்கு Comment moderate கிடையாது நேரடியாக உங்கள் கருத்துக்கள் பப்ளிஷ் ஆகும்)
நான் ஆங்கில தளத்தின் தகவல்களை காப்பி அடிப்பதாக நிறைய பேர் குறை கூறி உள்ளனர். அப்படின்னா என் தளம் ஆங்கில தளமா.  செய்திகளை பார்க்கிறேன் பகிர்ந்து கொள்கிறேன். தொழில் நுட்பத்தை என்னால் கண்டுபிடிக்க முடியாது அந்த அளவுக்கு அறிவாளியும் இல்லை.சில பிளாக்கர் டிப்ஸ்களை ஆங்கில தளத்தில் இருந்து  காப்பி அடிக்கிறேன் காப்பி அடிக்கிறேன் என்று சொல்றீங்களே அதே எவ்வளவு பேருக்கு பயனுள்ளதாக உள்ளது அதை பார்க்க மறுக்கிறீர்களே அது ஏன்.எவ்வளவு பேர் அவர்களின் தளங்களில் இந்த விட்ஜெட்களை போட்டு 
பயனடைகின்றனர் என்று பார்க்க உங்கள் மனம் ஏன் தடுக்கிறது. 

அந்த தளத்தில் உள்ள கோடிங்கை புரிந்து அதை மற்றவர்களுக்கு சேர்க்க கொடுப்பது தவறா. ஏன் இந்த பொறாமை குணம் தமிழனுக்கே உரித்தானதா. இதே ஆங்கில தளத்தில் காப்பி செய்து போட்டு இருந்தால் Very Nice இன்னு கமென்ட் போட்டுட்டு உன் தளத்தில் போட்டுக்க மாட்டியா. தமிழன் பிரபலமான உங்களுக்கு எரிச்சலாக இருக்கா.   
ஒண்ணு சொல்றேன் கேளுங்க ஆங்கில தளங்களும் மற்ற தளத்தில் இருந்து காப்பி செய்து சிறிது மாற்றம் செய்து தான் போடுகின்றன.

வெறும் காப்பி மட்டும் செய்து போட்டால் போதாது என்னால் முடிந்த வகையில் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து சந்தேகங்களை தீர்க்கிறேன்.

நான் காப்பி அடித்தது தவறா இல்லை பிரபலமானது தவறா?
கிரிக்கெட் பதிவு எழுதுபவர்களுக்கு:
  • கிரிக்கெட்டை இவர்கள் தான் கண்டுபிடித்தார்களா 
  • புள்ளி விவரங்களை இவரே கண்டு பிடித்து எழுது கிறார்களா 
  • பரம்பரை பரம்பரையாக தாத்தா அப்பா இவர் என்று புள்ளி விவரங்கள் சேமிக்க படுகிறதா. 
http://www.espncricinfo.com/. ஆங்கில தளத்தில் இருந்து தகவல்களை திரட்டி நமக்கு கொடுக்கின்றார். சுவாரஸ்யமான தகவலை நம் தாழ்மொழியில் பகிர்ந்து கொள்கிறார். இவர்கள் இல்லை என்றால் நாம் புரிந்தும் புரியாமலும் ஆங்கில தளங்களுக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
*********************************
சினிமா விமர்சனம் எழுதுபவர்களுக்கு:
  • படத்தில் பார்த்ததை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி என்றால் படத்தில் இருந்து காப்பி அடிக்கிறார்கள் என அர்த்தமா. 
  • ஆங்கில படங்களை பற்றி பகிர்ந்தால் ஆங்கில படங்களில் இருந்து காப்பி அடித்து எழுது கிறார்கள் என அர்த்தமா.  
படத்தினை பற்றி அவரின் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். அவ்வளவு தான்.

சிறிய அன்பான வேண்டுகோள்:
இப்பொழுதெல்லாம் ஏதேனும் படத்தை பார்க்க வேண்டுமென்றால் முதலில் அதற்க்கான விமர்சனங்களை பதிவுலகில் பார்த்த பிறகே நல்ல விமர்சனம் இருக்கும் படத்தை பார்க்க வேண்டிய எண்ணம் தோன்றுகிறது.  மற்ற படங்களை பார்ப்பது தவிர்க்க படுகிறது. ஒரு படம் என்பது தனிப்பட்ட ஒருவரின் உழைப்பை மட்டுமல்லாது நூற்றுகணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகிறது. 

ஏற்க்கனவே திருட்டு விசிடியால் அவதிப்பட்டு வரும் திரை உலகத்திற்கு மேலும் சிக்கலை தரும் என்பதில் ஐயமில்லை. இங்கு பத்திரிக்கை சுதந்திரத்தை பார்க்காமல் இதனால் பாதிக்க படும் நூற்றுகணக்கான ஊழியர்களை மனதில் வைத்து கொள்ளவும்.

 நீங்கள் விமர்சனம் எழுதுங்கள் குறைந்தது ஒரு 10 நாள் கழித்தாவது எழுதுங்கள்.
**********************************
லோஷன் என்பவர் தளம் எனக்கு பிடித்தது ஒன்று அதில் எவ்வளவோ பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தது உள்ளது. எவ்வளவோ நல்ல பதிவுகள் இருந்தும் இந்த சுமாரான பதிவை நான் காப்பி அடிக்க காரணம் என்ன. உனக்கு கிரிக்கெட்டை பற்றி என்ன தெரியும் என்று கேட்ட நண்பர்களிடம் கொடுத்த சவாலுக்கு அதை காப்பி செய்து என் பிளாக்கில் போட்டு இருந்தேன். காப்பி செய்வது தவறு என்றே எனக்கு அப்போது தெரியாது இதை நான் அவருக்கு மெயிலில் விளக்கமாக தெரிவித்தேன் ஆனால் அவர் அதை ஏற்க்கவில்லை. அவர் கூறிய உடன் அதை நான் நீக்கி விட்டேன்.இதற்காக அவரிடம் எத்தனையோ முறை மன்னிப்பும் கேட்டு இருந்தேன்.  linkwithin உபயோகித்து இருந்ததால் பதிவை அழித்தாலும் அந்த லிங்க் காட்ட பட்டே இருந்தது அதனால் தான் அந்த விட்ஜெட்டையே நீக்கினேன்.
*****************************************
(இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. சசிகுமார திட்டினா எதுவுமே கேட்க்க மாட்டான் இன்னு கண்டபடி திட்டுவதை நானும் எவ்வளவோ காலம்தான் கேட்டுக்கொண்டு பொறுமையாக இருப்பது,எனக்கும் உணர்வுகள் உள்ளனவே )

பிளாக்கர் டிப்ஸ் தருவது குற்றமென்றால் நான் இனி பிளாக்கர் டிப்ஸ் தகவலை தருவதா வேண்டாமா நீங்களே தயவு கூர்ந்து சொல்லுங்கள். இதனால் பாதிக்க படுவது நானல்ல.
தொடர்புக்கு - 99620 64266

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

102 comments :

  1. பல விஷயங்கள் தமிழில் கொடுப்பதை மறுக்க முடியாது.

    ஆனால் கோபத்தில் தளத்தை முடக்கிவிடுவேன் என்று சொன்னதே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்று எண்ணுகின்றேன்...

    ReplyDelete
  2. சசி , நீங்கள் எந்த தளத்தில் இருந்து தகவல் சேகரிக்கரீர்களோ அந்த தளத்தின் லின்கை பதிவின் இறுதியில் நன்றி என்று போட்டு விடுங்கள் பிரச்சனை முடிந்தது.

    ReplyDelete
  3. நீங்கள் மற்ற தளங்களின் பகிர்வை உங்கள் தளத்தில் போடும் போது கடைசியில் நன்றி என்று அந்த தளத்தின் பெயரை போடுவதால் உங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.... இனிமேல் அது போல் செய்யுங்கள்... அதுவே நல்ல பண்பு.

    வலைப்பூ நட்பு என்பது பெரும்பாலும் முகம் அறியாமல் எழுத்தின் மூலமாக பிணையப்பட்ட நட்பு... தாங்கள் தளத்தை முடக்கிவிடுவேன் என்று சொன்னதாலேயே அந்த நண்பர் அப்படி ஒரு பதிவு எழுதும்படி ஆகியிருக்கிறது... நட்பு தொடரட்டும்... அதுவே ஆரோக்கியமான வளர்ச்சி...

    வலைப்பதிவர்களுக்குள் அடிக்கடி இதுபோல் பிரச்சினைகள் எழுவதும் இரண்டு பிரிவுகளாக பிரிந்து எழுத்தால் தாக்கிக் கொள்வதும் ஆரோக்கியமான போக்கு அல்ல....

    எழுத்து என்ற ஆயுதம் உலகை புரட்டிப்போட வேண்டாம். நட்பை மட்டுமாவது வளர்க்கட்டும். இனி உங்கள் பதிவுகளின் கீழ் நன்றி என்ற ஒன்று வரட்டும்.

    நட்புடன்,
    -'பரிவை' சே.குமார்.

    ReplyDelete
  4. ஆங்கில தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை தான் உங்களால் மறுக்க முடியுமா?

    நண்பரே இதற்கான விளக்கத்தை மேலே தெளிவாக கூறி உள்ளேன்

    ReplyDelete
  5. //@சசி
    நடந்தவைகளை விடுங்கள். இனி நீங்கள் தொழிநுட்ப குறிப்புக்கள் குடுக்கும் பொழுது எந்த தளத்தில் இருந்து அவற்றை மொழிபெயர்த்தீர்களோ அந்த தளத்தின் பெயரை குறிப்பிடவும். அதுதான் வழக்கம்//

    மிக்க நன்றி அண்ணே இனி அப்படியே செய்கிறேன்.

    ReplyDelete
  6. லோஷன் என்பவர் தளம் எனக்கு பிடித்தது ஒன்று அதில் எவ்வளவோ பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தது உள்ளது. எவ்வளவோ நல்ல பதிவுகள் இருந்தும் இந்த சுமாரான பதிவை நான் காப்பி அடிக்க காரணம் என்ன. உனக்கு கிரிக்கெட்டை பற்றி என்ன தெரியும் என்று கேட்ட நண்பர்களிடம் கொடுத்த சவாலுக்கு அதை காப்பி செய்து என் பிளாக்கில் போட்டு இருந்தேன்.

    நீங்கள் அவருக்கு அளித்த பதிலில் நாம் சேமிப்பதற்காக எடுத்து வைதேன் என்று சொல்லியிருந்தீர்கள் என நினைக்கிறேன் சரிதானே இதிலும் உங்கள் பதில்கள் முரண்படுகிறதே

    ReplyDelete
  7. //நீங்கள் அவருக்கு அளித்த பதிலில் நாம் சேமிப்பதற்காக எடுத்து வைதேன் என்று சொல்லியிருந்தீர்கள் என நினைக்கிறேன் சரிதானே இதிலும் உங்கள் பதில்கள் முரண்படுகிறதே//

    ஆமாம் நண்பா இந்த காரணத்தை எப்படி கூறுவதென்று தெரியாமல் இது போல கூறினேன்.

    ReplyDelete
  8. // ஜிஎஸ்ஆர் said... ஒரு பதிவில் கேட்டிருந்தேன் அதுவும் நீங்கள் பதிவு இனைத்த சில நிமிடங்களில் அதுவும் நான் தான் அந்த பதிவின் முதல் கருத்துரையை எழுதியிருந்தேன் ஆனால் அதை நீங்கள் வெளியிடவில்லை//

    ஜி.எஸ்.ஆர் இதே தவறை நீங்களும் செய்தீர்கள் உங்களுடைய "எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம்" என்ற பதிவில் இவ்வளவு விரிவாக பதிவிட்ட நீங்கள் இது விண்டோஸ்7 க்கு சப்போட் ஆகாது என கூறியிருக்கலாம் என்ற என் பின்னுட்டத்தை வெளியிடவில்லை ஏன்?
    குற்றம் கண்டுபிடிப்பது சுலபம் நண்பரே.

    ReplyDelete
  9. நல்ல பதிவுகள் இருந்தும் இந்த சுமாரான பதிவை நான் காப்பி அடிக்க காரணம் என்ன.

    பிரபலமாக என்று நினைத்திருந்தால் அதை ஏன் தமிளிஷ் மற்றும் தமிழ்மண திரட்டிகளில் இணைக்காமல் இருந்தேன்.

    ReplyDelete
  10. நான் இத்தனை கருத்துரை எழுதியாது தாங்கள் நேரடியாக இப்படி ஒரு பதிவை எழுதியிருப்பதால் தான்

    சரியான புரிதலுக்கு நன்றி

    ReplyDelete
  11. //கோபத்தில் சொன்னவார்த்தை தான் அனைத்துப்பிரச்சனைக்கும் காரணம். இப்படி கூறியது நிச்சயம் தவறுதான்//

    தவறை உணர்ந்தேன் நன்றி தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  12. இது சரி என எனக்குப் படுகிறது..
    //lk said...
    சசி , நீங்கள் எந்த தளத்தில் இருந்து தகவல் சேகரிக்கரீர்களோ அந்த தளத்தின் லின்கை பதிவின் இறுதியில் நன்றி என்று போட்டு விடுங்கள் பிரச்சனை முடிந்தது.//

    தவிர.. எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள். உங்கள் மனசாட்சிக்கு சரி எனப்படுவதை தொடரலாம்.

    ‘I don't know the reason for success, but reason for failure is pleasing everyone!'

    ReplyDelete
  13. //ஜி கௌதம் said...
    தவிர.. எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள். உங்கள் மனசாட்சிக்கு சரி எனப்படுவதை தொடரலாம்.//

    நன்றி கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  14. //ஜிஎஸ்ஆர் said...நீங்கள் ஒரு வேளை கருத்துரை எழுதி அதை பதிவில் வராமல் போயிருந்தால் ஏதாவது தொழில் நுட்ப பிரச்சினைகளாக இருந்திருக்கும் இதையும் ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பமே//

    ok நண்பரே ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை நண்பரே.

    ReplyDelete
  15. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் உங்களால் நான் நிறைய விசயம் கற்றுகொண்டு இருக்கிறேன்....

    ReplyDelete
  16. அன்பின் நண்பருக்கு நடந்ததை பற்றி கவலையில்லை இனி நடக்கவேண்டியதை கவணியுங்கள் தங்களை போன்ற பதிவர்கள் அவசியம் தேவை நானும் சில பிளக்கர் டிப்ஸ் பற்றிய தங்களின் தளத்தில் வைத்து தான் நானும் என் தளத்தில் செய்திருக்கிறேன் என்பதையும் மறுப்பதற்கில்லை எழுதுங்கள் இன்னும் சிறப்பாக எழுதுஙகள் இனிமேல் இதுபோன்ற பிழைகள் நடக்காவாறு பார்த்துக்கொள்ளுங்கள் நான் மேலே எழுதிய கருத்துரைகள் ஏதாவது தங்களை காயப்படுத்துமேயானால் அதற்காக வருந்துகிறேன் மன்னிக்கவும், நீங்கள் நேரடியாக உங்களை பற்றி விமர்சனைதை வைத்ததால் எழுதினேன் அதையும் தாங்கள் சரியாகவே புரிந்துகொள்வீர்கள் என்றே நம்புகிறேன்
    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  17. தங்களுக்கு என் முழு ஆதரவு உண்டு. தெரியாத பல நல்ல தகவல்களை உங்கள் வலைதளத்தில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி. ஆங்கில தளங்கள் பார்த்து புரிந்து கொள்ளுதல் அனைவராலும் முடியாதது. எனவே, விமர்சனங்களை பொருட்படுத்தாமல், தங்கள் சேவையை தொடருங்கள். தேவையானால், மூல பதிவின் தொடர்பையும் கொடுத்து விடுங்கள்........

    ReplyDelete
  18. //ஜிஎஸ்ஆர் said.
    நீங்கள் நேரடியாக உங்களை பற்றி விமர்சனைதை வைத்ததால் எழுதினேன் அதையும் தாங்கள் சரியாகவே புரிந்துகொள்வீர்கள் என்றே நம்புகிறேன்//

    இவ்வளவு நாள் மனதை குழப்பிய ஒரு விஷயம் தெளிவாகியது நன்றி நண்பா ஞானசேகர் நம் நட்பு தொடரட்டும்

    ReplyDelete
  19. சொந்தாம எழுதுன்னா யாரைலையும் அதிகமாக எழுத முடியது.

    முடிந்த வரை சொந்தமாக +காபி செய்து விட்டு

    கடசியில் நன்றி-அந்த தளத்தின் உரிமையளார் அல்லது எங்கு பார்த்திர்கள்ளோ அந்த தளத்தின் முகவரி இனைத்துடுங்கள் ....

    ReplyDelete
  20. Blogger சசிகுமார் said...

    //ஜிஎஸ்ஆர் said.
    நீங்கள் நேரடியாக உங்களை பற்றி விமர்சனைதை வைத்ததால் எழுதினேன் அதையும் தாங்கள் சரியாகவே புரிந்துகொள்வீர்கள் என்றே நம்புகிறேன்//

    இவ்வளவு நாள் மனதை குழப்பிய ஒரு விஷயம் தெளிவாகியது நன்றி நண்பா ஞானசேகர் நம் நட்பு தொடரட்டும்


    புரியவில்லையே நண்பரே

    ReplyDelete
  21. ஜிஎஸ்ஆர் said.

    இந்த பதிவினால் என்னுள் குழம்பி கிடந்த விஷயங்களை வெளியிட்டு விட்டேன் தங்கள் கமெண்ட்களும் மேலும் என்னுள் இருந்தவைகளை வெளிபடுத்தியது இப்பொழுது தான் மனது லேசாக உள்ளதை போல உணர்கிறேன்

    ReplyDelete
  22. எனக்கு தெரிந்த வரை சசியின் "வந்தே மாதரம் " பதிப்புக்கள் எங்கிருந்து வந்தன போன்ற ஆதார கேள்விகள் இல்லை. எனக்கு தெரியாதவற்றை தெரிந்து கொள்ள அவைகள் உதவுகின்றன. என்னைபோல ஏராளம் .அவ்வளவே. இங்கு எவருக்கும் "சுயம் " இல்லை.
    இதில் ஏன் ஒருவர் மற்றவரை தூற்றுகிறீர்கள்? சுயமாக சிந்தித்து எழுதும் பதிவர்கள் குறைவே. இப்படி இருக்க தேவை யற்ற வீண் வம்புகளை தவிருங்கள்.

    ReplyDelete
  23. நிறைய விஷயங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமைபடுத்தி,தமிழ்படுத்தி தந்தமைக்கு முதலில் மிக்க நன்றி.ஒருவர் பிரபலம் அடையும் பொழுது நிறைய பிரச்சனைகள் எழுவது சகஜம் தானே!

    ReplyDelete
  24. ஆங்கில தளங்கள் எல்லாம் கோப்பி அடிக்காம எழுதுவாங்களா ?
    என்னே ஒரு ஆச்சரியம்...

    நண்பா சசிகுமார்,
    நீ தொடர்ந்து எழுது.. வேண்டியதை நாங்கள் எடுத்து கொள்கிறோம்!

    ReplyDelete
  25. கக்கு - மாணிக்கம் said...

    என் வார்த்தையை ஏற்று கருத்து கூறியதற்கு மிக்க நன்றி மாணிக்கம் அண்ணா.

    ReplyDelete
  26. asiya omar said...

    என் வார்த்தையை ஏற்று கருத்து கூறியதற்கு மிக்க நன்றி ஆசியா அக்கா.

    ReplyDelete
  27. தயவு செய்து தங்கள் சேவையை தொடருங்கள்.

    ReplyDelete
  28. யூர்கன் க்ருகியர் said...


    என் வார்த்தையை ஏற்று கருத்து கூறியதற்கு மிக்க நன்றி யூர்கன் க்ருகியர்

    ReplyDelete
  29. //பிரவின்குமார் said...
    தயவு செய்து தங்கள் சேவையை தொடருங்கள்//

    என் வார்த்தையை ஏற்று கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பா பிரவீன்

    ReplyDelete
  30. தன்னிலை விளக்கம் வேண்டாம். உங்கள் பணி செய்து கிடப்பதே.

    ReplyDelete
  31. //LK said...

    சசி , நீங்கள் எந்த தளத்தில் இருந்து தகவல் சேகரிக்கரீர்களோ அந்த தளத்தின் லின்கை பதிவின் இறுதியில் நன்றி என்று போட்டு விடுங்கள் பிரச்சனை முடிந்தது.//

    As LK Said,simple thing....pls do it :)

    ReplyDelete
  32. உங்கள் சேவை தொடரட்டும்.. ஆனா, கடைசில ஒரு நன்றி சொல்லிடுங்க அல்லது அந்த தளத்துக்கு இணைப்பு கொடுத்துடுங்க..

    ReplyDelete
  33. சசி உங்களால் பல புது பதிவர்கள் சந்தேகம் தெளிந்துள்ளனர்..பல பழைய பதிவர்கள் இஉங்கள் தளத்தையே சிபாரிசு செய்கின்றனர்..நானும் பல புதியவர்களுக்கு உங்கள் தளத்தையே சுட்ட்டி காட்டுகின்றேன்..அதனால் உங்கள் பிளாக் முழுமையாக கறை இல்லாத ஒரு பிளாக்...தொழில்நுட்ப பதிவிடுவதில் நீங்கள் ரஜினி மாதிரி..ஏனென்றால் அவ்வளவு எளிமையாக இருக்கிறது..எனவே கலங்காதீர்கள்..புதிய பதிவர்கள் உங்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளனர்...வருத்தத்தை தூக்கி எறிந்து விட்டு எப்போதும் போல செயல்படுங்கள்..லிங்க் வித் இன் கேட்ஜெட்டை மறுபடி பொருத்துங்கள்..காப்பி பேஸ்ட் செய்தால்தான் உலகில் அப்டேட் ஆகும் அனைத்து தகவல்களும் தமிழனுக்கும் வந்து சேரும்...மற்றவர்கள் எல்லோரும் தாங்களாகவெ ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிறார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை..

    ReplyDelete
  34. நீங்கள் தன்னிலை விளக்கம் கொடுத்தது தவறு..அவனவன் இஸ்டத்துக்கு எழுதுவான்..உங்கள் வருத்தம் தான் அதிகமாகும்

    ReplyDelete
  35. இங்க என்ன சொல்வதென்றெ தெரியவில்லை எனது தளத்தில் கூட பல மாற்றுதல்களை தங்கள் தளத்தை வைத்துத் தான் செய்தேன்.... இனியும் செய்வேன்.. நிங்கள் தங்கள் பதிவை தொடரலாம்... அத்துடன் நீங்கள் மற்றவரின் குரலுக்கு செவி கொடுத்தது தான் மிகப் பெரிய தப்பு காய்க்கும் மரங்கள் கல்லெறி வாங்குவது சகஜமானது தான்...

    ReplyDelete
  36. பாலை வனத்தில் தவித்தவன் துருவ நட்சத்திரத்தின் உதவியடன் மீண்டிருக்கலாம் ஆனால் அவன் பேட்டியில் தன் திறமை என்று தான் சொல்வான்.. அதே போல் தான் தங்களின் தளம் பலருக்கு இருக்கிறது...

    ReplyDelete
  37. நான் இடுகையில் குறிப்பிடும் எந்த ஒரு வசதியையும், மென்பொருளையும் நானோ அல்லது ஆங்கில பதிவர்களோ உருவாக்கவில்லை..//
    ம்ம்...இது சரியாக இருக்கிரது..பிறகு ஏன் சசி கலங்க வேண்டும்..உங்களுக்கு கூகிள்,அலெக்ஸா தான் அங்கீகாரம் கொடுத்து விட்டார்களே..பிறகு ஏன் கலக்கம்..பொறாமை பிடித்தவர்களின் அங்கீகாரத்திற்கு கவலைபடாதீர்கள்

    ReplyDelete
  38. சசி என்ன சொல்வதென்றூ தெரியவில்லை.. நான் நிறைய பதிவுகள் படிப்பதில்லை.. நீங்கள் வெளியிடும் அனைத்துமே நன்றாக உபயோகமாக உள்ளது..

    ஒரு வேளை மற்றவர்களின் பதிவு எங்களுக்கு பயன்படும் என நீங்கள் நினைத்தால் பதிவின் முடிவில் நன்றி என்று குறிப்பிட்ட பதிவின் பெயரை சேருங்கள்..

    எழுதாமல் இருக்க வேண்டாம்.. நல்ல இடுகைகள் தருகிறீர்கள்..உங்கள் நல்லிதயத்துக்கு நல்லதே நடக்கும் ..மென்மேலும் உங்கள் புகழ் வளரட்டும்

    ReplyDelete
  39. விடுங்கள் சசி...

    உங்கள் பதிவை பார்த்து என் பிளாக்கில் பல மாற்றங்க செய்து இருக்கிறேன்... தொடர்ந்து எழுதுங்கள்...

    தொழில்நுட்ப இடுகைகள் refer செய்துதான் எழுத வேண்டும்... courtesy போடுவது உத்தமம்

    ReplyDelete
  40. நண்பா உங்கள் சேவை என்னை போன்ற சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் .கடவுள் துணை இருப்பார் . நன்றியுடன்
    முரளி

    ReplyDelete
  41. தகவல்கள் எங்கிருந்தாலும் பாராட்டபடவேண்டியது தான் ..
    உங்கள் பணி தொடரட்டும் ..
    லிங்கை கொடுங்கள் ..ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்புகள் பாராட்டத்தக்கவை ..

    ReplyDelete
  42. //PALANI said...
    ஆனால் நீயோ எந்த பதிவ எடுத்தாலும் உங்கள் புகைப்படத்தை போடுவது. தன்னைப்பத்தி தானே பீத்திக்கொல்வது//

    நீங்கள் கூறுவதை என்னால் ஏற்க்க முடியவில்லை நான் எங்கே என் புகைபட்டதை வெளியிடுகிறேன். நான் எங்கும் சென்று தற்பெருமை அடித்தது கிடையாது. அலெக்சா ரேங்க் ஒரு லட்சத்திற்குள் வந்தவுடன் ஒரு பதிவு போட்டேன். இது போல் நம்ம ஜாக்கி அண்ணனும் பதிவு போட்டு உள்ளார்.

    சாரியாக விளக்கி கூறினால் மாற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

    ReplyDelete
  43. //curesure4u said...
    தகவல்கள் எங்கிருந்தாலும் பாராட்டபடவேண்டியது தான்//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  44. //சூர்யா ௧ண்ணன் said...
    எனது பணி நான் கற்றுக்கொள்வதை பலருக்கும் கற்றுக் கொடுப்பதுதான்..//

    மிகச் சரியான கருத்து சார்

    வலைத்தளம் என்பது நமக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்வதும் தெரியாத விடயங்களை பிற நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும், முக்கியமாக நல்ல நட்பு உருவாக காரணமாக உள்ளது. இதில் நண்பர்கள் ஒருவரையொருவர் கருத்துக்களால் தாக்கிக்கொள்ளுதல், ஆபாச வசப்பாடல்கள், தீயச் சொற்களைப் பயன்படுத்துதல் இதெல்லாம் வேண்டாம் நண்பர்களே, அப்படி ஏதேனும் ஒருவரின் பதிவில் குறைகளோ கருத்துமுரன்பாடுகள் இருந்தால் அதை நாகரிகமான முறையில் சுட்டிக்காட்டினால் தவறை திருத்திக்கொள்வதற்கு உதவியாய் இருக்கும்.

    பதிவுலகில் வன்முறை வேண்டாம் நண்பர்களே...

    அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொண்டு ஒற்றுமையாகாவும் சிறந்த நட்புடனும் பயணிப்போம்...

    சசி நண்பரே,
    ”நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்
    இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்”

    கவலையை விடுங்கள் நாம் வரும்போதே எல்லாம் தெரிந்துகொண்டும் கற்றுகொண்டா வருகிறோம்...

    நீங்கள் வேறு ஏதேனும் தளத்தில் கற்றுக்கொண்ட தகவல்களை உங்கள் தளத்தில் பதிவிடும்போது முடிந்தவரையில் அவர்களுக்கு ஒரு நன்றியைத் தெரிவித்து விடுங்கள் இதில் நாம் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை நண்பா...

    எல்லாத்தையும் மறந்துவிட்டு நீங்கள் வழக்கம்போல் உங்கள் பணியை தொடருங்கள்
    மீண்டும் இதே உற்சாகத்துடன் எழுத வருவீர்கள் என்ற நம்பிக்கையில் எதிர்பார்ப்புடன்...

    ReplyDelete
  45. பிறக்கும்போது யாரும் எந்த அறிவையும் கொண்டுவரவில்லை. இப்போது என்னுடையது என்று சொந்தம் கொண்டாடும் எல்லா அறிவுகளும் யாரிடமிருந்தோ கடன் பெற்றதுதான்.

    ஒவ்வொரு முறையும் நாம் தமிழில் எழுதி பதிவு போடும்போது, இந்தத்தமிழ் எழுத்துக்களை எனக்கு கற்பித்தவர் திரு. **** வாத்தியார் என்றா போடுகிறோம்?

    ReplyDelete
  46. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்
    இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்

    ReplyDelete
  47. மகிழ்ச்சி நண்பரே... நடந்த சம்பவங்களை நான் முற்றிலும் மறந்துவிட்டேன்... உங்களால் மறக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை... நான் எனது நட்பால் அவற்றை மறக்கடிக்க முயல்கிறேன்...

    ReplyDelete
  48. PALANI said...
    அண்ணே நானே அவரிடம் எத்தனையோ முறை சாரி கேட்டு விட்டேன். அவரும் அதை விட்டு விட்டார் அவர் தளத்தை பார்த்து சில பேர் இதையே குறையாக எங்கு சென்றாலும் கூறி இருக்கிறார்கள். எவ்வளவு நாள் தான் நானும் பொறுமையாக இருப்பது. எனக்கும் உணர்வுகள் உள்ளனவே

    ReplyDelete
  49. நான் இப்போது எனது பதிவை டெலீட் செய்துவிடட்டுமா...

    ReplyDelete
  50. எப்பா இன்னும் முடியலையா நான் போய் சாப்ட்டே வந்துட்டேன். ஏம்ப்பா சசி உன்ன வெச்சி இன்னைக்கு நல்லா டைம் பாஸ் பண்ணுறானுங்க நம்ப பசங்க.


    சசி தம்பி ரஜினிய ஒருகாலத்துல பைத்தியம்னு சொன்னானுங்க ஜெயலலிதாவ வப்பாட்டினு சொன்னானுங்க அதெல்லாம் அவுங்க காதுல்ல வாங்குனான்களா? ஆனால் இன்னைக்கு தெய்வமே, அம்மா, தலைவா, தங்கத்தாரகையே, அப்படித்தான். இதுதான் வாழ்க்கை. வறுமையில் இருக்கும்போது உனக்கு கீழ இருக்குறவன பார் வாழ்க்கையில் முன்னேற நினைக்கும்போது உனக்கு மேலே இருப்பவனை பார். நடுவல்ல எதாவுது நாதாரிங்க கிச்சிகிச்சி மூட்டுச்சிங்கனா சிரிச்சிக்கிட்டு போயிட்டே இரு.

    ReplyDelete
  51. பிறக்கும்போது யாரும் எந்த அறிவையும் கொண்டுவரவில்லை. இப்போது என்னுடையது என்று சொந்தம் கொண்டாடும் எல்லா அறிவுகளும் யாரிடமிருந்தோ கடன் பெற்றதுதான்.

    ஒவ்வொரு முறையும் நாம் தமிழில் எழுதி பதிவு போடும்போது, இந்தத்தமிழ் எழுத்துக்களை எனக்கு கற்பித்தவர் திரு. **** வாத்தியார் என்றா போடுகிறோம்?

    //


    நான் சொல்லவந்த விஷயத்தை இந்த அன்பர் அருமையாக கூறியுள்ளார்... நாம் எதையும் கொண்டு வரவில்லை... நாம் எழுதுவது. பேசுவதும் அனைத்தும் கற்றதும் பெற்றதும் தான்...

    நண்பரே தங்கள் தளத்திலுள்ள பல விசயங்களால் நான் பயனடைந்துள்ளேன்... தொடர்க உங்கள் பணி... நன்றியுடன்..

    ReplyDelete
  52. //palani said...
    எப்பா இன்னும் முடியலையா நான் போய் சாப்ட்டே வந்துட்டேன். ஏம்ப்பா சசி உன்ன வெச்சி இன்னைக்கு நல்லா டைம் பாஸ் பண்ணுறானுங்க நம்ப பசங்க. //

    இப்பொழுது தான் மனது பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. நன்றி பழனி அண்ணா.

    ReplyDelete
  53. இதில் அதிகமக எழுத்து பிழை இருக்கிறது. தவறுக்கு மன்னிக்கவும் :(

    ReplyDelete
  54. வந்தேமாதரம் வலைப பதிவை, தவறாமல் படிக்கும் வலைப பதிவர்களில், நானும் ஒருவன். பதிவர்களுக்குப் பயன்படும் பல அரிய தகவல்களை, எளிய தமிழில் அளிக்கும் உங்கள் பணி, மகத்தானது, தயங்காமல் தொடருங்கள்.
    கே ஜி கௌதமன்
    எங்கள் ப்ளாக்.

    ReplyDelete
  55. உன் மேல குறை இருக்கு நான் இல்லன்னு சொல்லல ஏன் நான் கூட டைம் பாஸ் ஆகலன்னா ஜாக்கி krp கேபிள் இவுங்கள பின்னூட்டம் போட்டு வேருப்பேத்துவேன் அவுங்க சீரியச்சாவே எடுத்துக்க மாட்டாங்க அந்தமாதிரிதான். எனக்கு இப்ப என்ன தோணுது தெரியும்மா நீ நன்றி கூட சொல்ல தேவை இல்லைன்னு தோணுது. தமிழ் படம்ல்லாம் டப்பன்னி அடிக்கிறானுங்க என்ன நன்றியா போடுறானுங்க இவ்வளவு ஏன் சரத்குமார் சார் ராதிக மேடம் நெத்தில நன்றியா எழுதி இருக்காரு? அந்த மாதிரி நெனச்சிக்கிட்டு லூசுள்ல விடுங்க

    ReplyDelete
  56. prabhadamu said...
    எவ்வளவோ வேலைகளுக்கிடையில் வந்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  57. ஆமினா said...
    மிக்க நன்றி அக்கா எவ்வளவோ வேலைகளுக்கு இடையில் வந்து இவ்வளவு நீல கமெண்ட்டை போட்டதற்கு.

    ReplyDelete
  58. சசி & பிரபா நண்பர்கள் இருவரும் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு இருவரும் நட்புடன் கைகுலுக்கிக்கொண்டு மீண்டும் வழக்கம்போல் உங்கள் பணிகளை செவ்வெனே தொடருங்கள்...

    சமீப காலமாக நமது தமிழ் வலைத்தளங்கள் சிறந்த வளர்ச்சிப் பெற்று நல்ல பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது இந்த பயணங்கள் சிறப்பாக தொடரவும், பதிவுலகிற்கு வரும் இளைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருப்போம்.

    முடிந்தவரையில் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி சிறந்த நண்பர்களாக இருப்போம்...

    நட்பு:
    வளர்பிறைபோல் வளரும்
    வானிருக்கும் வரை...
    உயிருடன் வாழும்
    உலகிருக்கும் வரை...

    நன்றி
    என்றும் நட்புடன்
    உங்கள்.மாணவன்

    ReplyDelete
  59. //////ஆமினா said...///////


    ஆமினா என்னது இது இப்புடி பின்னூட்டம் போட்டு கலக்குறிங்க. எனக்கு அப்புடியே புல்லரிக்கிது. இன்னும் அஞ்சி நிமிஷத்துள்ள நான் உங்களுக்கு follower ஆகிடுரன் பாருங்க

    ReplyDelete
  60. சசிகுமார் அண்ணே!!
    //இந்த பொறாமை குணம் தமிழனுக்கே உரித்தானதா..
    /முற்றிலும் உண்மை...

    என்னை போல் வலைதளம் அமைக்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பதிவு...எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து எங்களுக்காக பதிவுகளை போடுங்கள்....

    மேலும் தமிழில் நவீன தொழில் நுட்ப செய்திகளை தரும் அனைத்து பதிவர்களுக்கும் நன்றி.......

    ReplyDelete
  61. நண்பரே உங்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  62. தமிழ் உதயம் said...

    மிக்க நன்றி ரமேஷ் சார்

    ReplyDelete
  63. என்ன ஆச்சு நண்பா? அனைவரும் கூறியது போல தளங்களின் லிங்க் எழுதி ஒரு நன்றி போட்டு விடுங்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  64. சசி யார் விருப்பத்துக்கும் நாம் எழுத முடியாது... நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள், என ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு... சொந்தமா சிந்திச்ச மூளைகளின் பதிவை எத்தனை பேர் படிப்பாங்க என்பது அவர்களுக்கே வெளிச்சம்...

    ReplyDelete
  65. அலுவலகத்தில் இருந்து செல்வதால் இனி ஏதேனும் கமென்ட் வந்தால் நாளை பதில் போடுகிறேன். வீட்டில் இணையம் இல்லை

    ReplyDelete
  66. தம்பி சசி! குறையே இல்லாதவன் இறைவன் மட்டுமே! எந்த மனிதரிடத்திலும் குறையும் நிறையும் கலந்துதான் இருக்கும். இதில் யாரும் விதிவிலக்கல்ல. குறையை விட்டு நிறைகளை மட்டுமே பார்ப்பதுதான் ஆரோக்கியமான நட்புக்கு வழிவகுக்கும். அதே சமயம் திருத்தும் நோக்கில் குறையை சொல்வதாக இருந்தால் தனிப்பட்ட முறையில்தான் அதை சுட்டிக்காட்ட வேண்டும். இந்த முறைகள் தவறியதால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்!

    எல்லா சகோ. க்களும் தங்களின் கருத்துக்களை அருமையாக கூறியுள்ளார்கள். நான் நினைப்பதும் இதுதான். அதாவது, யாருமே தாயின் வயிற்றில் இருந்துக்கொண்டே தனக்கு தேவையான கல்விகளைக் கற்றுக் கொண்டு வருவதில்லை. நமக்குத் தெரியும் விஷயங்களை யாரிடம் கற்றோமோ அவர்களும் இன்னொருவரிடம் கற்றவர்தான். அதேசமயம் அடுத்தவரின் உழைப்பின் மூலமாக கிடைத்த ஒரு நல்ல தகவலை நம் மூலமாக மக்களுக்கு சொல்லும்போது, நன்றி தெரிவிக்கும் நல்ல பண்பை கடைபிடிப்போம். மேலும் நம்முடைய பணிகளை 'பிரபலம்' நோக்கில் அல்லாமல் 'சேவை' நோக்கில் தொடர்வோம். கவலை வேண்டாம் சசி! நடந்ததை மறந்து, உங்கள் பணியை தொடருங்கள்.

    ReplyDelete
  67. அட!நாம் கற்றுக் கொள்வதே பலருக்குக் கற்றுக் கொடுக்கதான்னு எப்பவும் ஆசிரியர்களுக்குச் சொல்வேன்!....கற்றுக் கொண்ட இடத்துக்கு ஒரு நன்றி கார்டு போட்டால் போதுமே!!!

    ReplyDelete
  68. தொடர்ந்து எழுதுங்கள் சசி .
    எமது ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு .

    ReplyDelete
  69. எனது தளத்தில் இட்டிருந்த இடுகையை நான் நீக்கிவிட்டேன்... நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருகிறேன்...

    ReplyDelete
  70. சசி என்ன பிரச்சினைன்னு எனக்கு படித்தும் ஒன்னும் புரியல..இருந்தாலும் உங்க பதிவின் மூலம் நிறைய தெரிந்துக்கொண்டேன் என்பது உண்மை...இப்போ நானும்தான் பதிவு போடுகிறேன் என்றால் எல்லாம் அம்மா,பாட்டியிடம்,பக் படித்து,டி வி பார்த்து கற்றுக்கொண்டதுதான்...அதுபோல் தான் உங்க பதிவும் உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டிங்க...இனி மற்ற பதிவிலிருந்து போடும்போது எல்கே சொன்னமாதிரி லிங்க் கொடுத்துடுங்க..தேவையில்லாத விமர்சனம் வராது..தொடரட்டும் உங்கள் பணி..எனக்கு தம்பில இல்லை..நீங்க என்னை அக்கான்னு கூப்பிடும் போது சந்தோஷமா இருக்கும்..வாழ்த்துக்கள் சகோ!!

    ReplyDelete
  71. அன்பு சசி அவர்களுக்கு, எனக்கு ஆங்கிலம் தெரியாது ஆனால் உங்கள்
    சைட்டிலிருந்து நிறைய படித்து தெரிந்துள்ளேன், நான் ஆங்கில வலையில்
    சென்று படிக்க முடியாது தெரியாது.

    என்னைப்போல உள்ள பலருக்கும் உங்கள் தளம் மிக உபயோகமாக உள்ளது.

    தொடருங்கள் உங்கள் பணிகளை எதையும் பாராமல்.


    அன்புடன்

    ReplyDelete
  72. மனிதன் பிறக்கும் போதே எதையும் கற்றுக்கொண்டு வருவதில்லை. கற்று கொண்டது அனைத்தும் மற்றவர்களிடம் இருந்து தான். நீங்கள் பெற்ற இந்த அறிவும் அப்படித்தான்!. நிலைமை இப்படி இருக்க அந்த அறிவு என்பது ஒரு தனிமனித சொத்தாக மாற முடியுமா?
    யாராவது விளக்கமளிக்க முடியுமா?

    ReplyDelete
  73. நாம் அறிந்ததை படித்ததை மற்றவர்களுடன் பகிர்வதுதான் சரி.

    பலருடைய கருத்துப்படி 'நன்றி' கொடுத்து விட்டால் வேறு ஒன்றும் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.
    தொடருங்கள்...!

    ReplyDelete
  74. பொறாமை பிடிச்ச பைத்தியக்காரங்கள்... 1000 சொல்வாங்கள்... அவங்களுக்காக.. நீங்கள் உங்கட சேவையை நிப்பாட்ட வேண்டாம்.
    ஏதோ... அவை திறம் மாதிரி... ஆரையாவது சொறியிறதுதான் இவங்கட வேலை...
    உங்கள் தளத்தில் இன்னும் கனக்க தகவல்களை எதிர்பார்த்திருக்கிறோம்... தொடர்ந்து தரனும் நீங்கள்.:)
    ( கென்டக்ட் ஃபோர்ம் போடுறதெல்லாம் உங்களதை பார்த்துத்தான் செய்தேன்... )

    ReplyDelete
  75. நண்பரே தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் அனுபவத்தை தானே எழுதுகிறீர்கள் இதற்கு நன்றி சொல்ல வேண்டியது நாங்கள் தான்.
    ஏதாவது அறிவுசார்[intellectual Property] தகவல்களை பகிரும் போது மட்டும் படைப்பாளிக்கு ஒரு நன்றி சொல்வது படைப்பாளிக்கு தரும் மரியாதை.

    ReplyDelete
  76. உங்கள் பதிவுகள் பயனுள்ளவையே. தொடர்ந்து எழுதுங்கள். ஆனால் அடுத்தவர் பதிவுகளை உங்கள் தளத்தில் வெளியிடும் போது நிச்சயம் அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.

    ReplyDelete
  77. //மங்குனி அமைச்சர் said...

    அதுக்கு பேர் காப்பி அடிப்பது இல்லைங்க மொழி பெயர்த்தல் ..........அது தப்பே இல்ல ...... அந்த மாதிரி பதிவுகளில் நன்றின்னு அந்த லிங்க் பேரு போட்ருங்க ......தட்ஸ் ஆள்............. நீங்கள் பிளாக்கை முடக்கி விடுவேன் என்று கமன்ட் போட்டது தப்புதான்//

    நானும் அதையேதான் சொல்றேன்.
    நீங்க தொடருங்க.

    ReplyDelete
  78. நண்பா. உங்களுடைய பதிவுகளை பார்த்து நிறைய தொழில்நுட்பசெய்திகளை தெரிந்துள்ளேன். உங்களுடைய சேவை, எனக்கு மிகப்பயனாக இருந்துள்ளது. உங்கள் பணியை நீங்கள் தொடருங்கள். பாரதியாரே, "சென்றிடுவீர் எட்டுதிக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" சொல்லியிருக்கிறார். ஆங்கிலத்தை தமிழ் படுத்துவதற்கு கூட தனித்திறமும், ஆர்வமும் வேண்டும். பகவத் கீதை சொல்வதைப்போல, உலகில் எந்த கருத்தையும் யாரும் உருவாக்கவும் இல்லை. அழிக்கவும் இல்லை. ஃப்ரீயா இருங்க நண்பா.

    ReplyDelete
  79. முதல் முறையா உங்கள் blog படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. உங்களுக்கு பிடித்ததை எழுதுங்கள். எல்லோரையும் சந்தோஷப்படுத்த முடியாது. உங்கள் கோபம் நியாமானது. எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை தனிப்பட்ட பாணியில் எழுதுவதை விட யாருக்கும் தெரியாத விஷயத்தை பற்றி simple ஆக எழுதுவது மேல் என்பது என் கண்ணோட்டம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  80. ராஜ நடராஜன்November 18, 2010 at 11:27 PM

    சசி!முதல் வரிகளை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டத்துக்கு வந்து விட்டேன்.

    எதிர்வினைகளையெல்லாம் கண்டுக்காம நீங்க அடிச்சு ஆடுங்க.அவ்வளவுதான் சொல்வேன்.

    ReplyDelete
  81. நண்பா நீங்கள் தொடருங்கள் உங்கள் பணியை...உங்களின் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன்...

    ReplyDelete
  82. வணக்கம் சசி

    நானும் ஒரு கேள்வி கேட்டுருந்தேன் உங்களிடம் Chrome & Internet இடையேயான அலைமண்ட் பிரட்ச்சனையை எப்படி தீர்ப்பதென்று ஆனால் உங்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை....

    மற்றும் படி உங்கள் பதிவுகள் அனைத்தும் உபயோகமானது தயங்காமல் தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை உங்கள் பாதையில்.

    ReplyDelete
  83. வணக்கம்! அண்ணா உமது கருத்துக்கள் நியாயமானவை,அதேபோல் உம் வாசகர்களுக்கும் சில கருத்துக்களுண்டு,விமர்சனத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதவும்.வந்தேமாதரம் என்றும் என்றென்றும் புதிதாய் மிளிர என் வாழ்த்துக்கள்! -கலைச்செல்வன்.

    ReplyDelete
  84. என்ன சார் ந்ங்கள் ,,இதுக்கெல்லாம்போய்யி,,,விவெக் காமெடியை ந்னைத்து கொள்லுங்கள்,,
    கல்லை விடெறிந்தால் அதைவைத்து வீடு கட்டுங்கள்,,தக்காளியை தூக்கி எறிந்தால் போடங் கொக்காலெ என்று பொய்கிட்டே இருங்கள்,,நூறு சதவிகிதம் சொந்த சரக்குள்ளவன் இங்கு
    எவனுமே இல்லை,, கவலையை விடுங்கள் சார்

    ReplyDelete
  85. சொல்றவன் அப்படிதான் சொல்லுவான் சசி...நீங்க என் கவலை படறிங்க உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்க....தெரியாதவர்கள் தெரிந்துகொள்கிறார்கள் இதில் என்ன தவறு....சில பேருக்கு ஆங்கிலம் புரியாது அதுபோல உள்ளவர்களுக்கு உங்கள் தளம் மிகவும் சிறப்பானது. உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்க....வாழ்த்துகள் சசி... மனவேதனை அடையவேண்டாம்....இந்த உலகம் அப்படிதான்

    ReplyDelete
  86. சசி இந்த ஒரு பிரச்னையும் உங்களுக்கு நன்மையே....பார்த்தீங்களா எத்தனை பேர் உங்களால் பயன் அடைந்து இருக்கிறார்கள் என்று.....?!

    ஒவ்வொருத்தரின் வார்த்தைகளும் உங்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியது.....!

    இத்தனை நட்பு உள்ளங்கள் இருக்கும் போது எதற்கு சசி கலங்க வேண்டும்....! உங்கள் பலம் இந்த நட்புதான்.

    பழைய படி இன்னும் அதிகமாக எழுதுங்கள்...! அடுத்த டிப்ஸ் எப்போது என்று காத்திருக்கிறோம்....!

    ReplyDelete
  87. நன்பரே..

    தகவல்களை நீங்கள் லாவகமாகக் கையாண்டு எளிமையாக தருகிறீர்கள். இது ஒரு தேர்ந்த ஆசிரியனுக்கு மட்டுமே வரும் கலை.

    எத்துனையோ பேர் பயனடைந்தது மட்டுமல்ல, இந்த தொழில் நுட்பங்களை ஒரு பூதமாக எண்ணி விலகியோரும் அதை எளிமையாக அணுகி தங்கள் வலைத் தளத்தில் கையாண்டு வருகின்றனர்.

    சேவையைத் தொடரவேண்டும் என்பது எம் எண்ணம்.

    God Bless You..

    ReplyDelete
  88. kandippa ezhudhunga bro.ungaludiya indha tips nala ethanai per payanadaikirargal theriuma..ithukkellam feel pannatheenga..

    ReplyDelete
  89. இதற்கு தன்னிலை விளக்கமெல்லாம் தேவையற்றது. யாரும் பிறக்கும்போதே எல்லாம் தெரிந்து கொண்டு வருவதில்லை. நாம் அறிந்ததெல்லாம் இன்னொரு இடத்திலிருந்து நமக்குக் கிடைத்ததே.

    உங்கள் பிளாக்கால் பயன் பெற்றோர் உங்களைப் பற்றி அறிவார்கள்.. புழுதி வாரித்தூற்றுவோர் தூற்றிவிட்டும் போகட்டும், அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றால் நமக்கும் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  90. தம்பி சசி,எதற்கும் கவலைப்படாதீர்கள்.மகாகவி கூறியது போல,செல்வீர் எட்டுதிக்கும்...என்ற கவிதைக்கு உயிர்கொடுத்துள்ளீர்கள். இதற்கெல்லாமா பிளாக்கை மூடுவேன் என்பது..என்னைப்போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு, நீ தான் துரோனாச்சாரியார்..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  91. அன்பின் சசி, போற்றுவார் போற்றட்டும்
    புழுதிவாரி தூற்றுவார் துற்றட்டும்
    என் கடன் தெரியாத தமிழர்களுக்கு எனக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுப்பதே. உங்கள் வலைப்பதிவுகளை கண்டே பல விசயங்கள் அறிந்து கொண்டிருக்கிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  92. தங்களின் பயனுள்ள பதிவுகள் தொடர்ந்து வரட்டும்...

    மொழிபெயர்ப்பு எப்படி காப்பியடித்ததாகும்?

    ReplyDelete
  93. எம்.ஏ.சுசீலாNovember 20, 2010 at 7:59 AM

    அன்பின் சசிகுமார்,
    உங்கள் வலைக் குறிப்புக்களால் பெரிதும் பயன் பெற்று வருகிறேன்.எதையும் யாருக்காகவும் நிறுத்தத் தேவையில்லை.
    போற்றுவார் போற்றலும்...
    புழுதி வாரித் தூற்றுவார் தூற்றலும் போகட்டும்!தொடரட்டும் உங்கள் தொய்வில்லாப்பயணம்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  94. பிரியமிக்க சசி,
    நான் ஒரு பள்ளி ஆசிரியன். கணினி, இணையம் எல்லாம் னக்கும், எனது மாணவர்க்கும் ரொம்ப, ரொம்ப புதுசு.. எங்களுக்கு எந்த ஆங்கிலத் தளம் தெரியப்போகிறது..? அப்படியே தெரிந்தாலும் அதை ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி பயிலும் எனது கிராம மாணவனால் புரிந்துகொள்ள இயலுமா.? இன்று எனது பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களே ஒரு பிளாக்கை நிர்வகிக்கும் தகுதியைப் பெற தங்களைப் போன்றோரின் இணையம் எங்களுக்கு பேருதவியாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல சசி..! அப்படியே நீங்கள் படித்தவற்றை பகிர்ந்து கொள்கிரீர்கள் என்றாலும் அதை இங்கு தமிழ் படுத்தி கூறுவது தவறு ஒன்றும் அல்ல. என் போன்ற ஆசிரியர்கள் கூட படித்தவற்றையும், அறிந்தவற்றைம் தானே மாணவர்களுக்கு போதிக்கிறோம். எனவே. விமர்சனங்களை மதியுங்கள். அது தவறானவை எனப் பட்டால் அவற்றை ஒதுக்கி வையுங்கள். இவ்வளவு ஆதங்கத்திற்கு மனதை கொண்டு செல்லாதீர்கள்.. உங்களின் இந்தப் பணி தொடரட்டும். நன்றி.!

    ReplyDelete
  95. நானும் தான் அப்படியே கொப்பி பேஸ்ட் செய்து பிழைச்சுக்குறவன் இருந்தாலும் சசியின் வலைப்புவே எனக்கு ஆசான்....
    www.kalmunaipc.blogspot.com

    நன்றி

    ReplyDelete
  96. பயனுள்ள செய்திகளைத் தரும் உங்கள் பணி தொடரட்டும். பல்வேறு இடங்களிலிருந்து திரட்டித் தருவதும் பாராட்டத் தக்க பணியாகும். ஆனால், 'ஏன் இந்த பொறாமை குணம் தமிழனுக்கே உரித்தானதா' என்று நீங்கள் எழுதியது கொஞ்சம் மிகைதான்.

    ReplyDelete
  97. என்னைப் போன்றோருக்கு உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நண்பா. போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும். தொடர்ந்து செல்க

    ReplyDelete
  98. நண்பரே!

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பிளாக்கரில் புதிதாக நுழைபவர்களுக்கு மிகவும் பயன்படும்.

    சமகாலத்தில் எதையும் யாரும் கண்டுபிடித்ததே இல்லை! எல்லாமே அப்டேட்டட் தான்.

    உங்கள் பதிவிற்கான உழைப்பை யார் அறிவார்?! எவரையும் பற்றி கவலை கொள்ள வேண்டாம். சேவை தொடரட்டும்.

    வருங்கால பிளாக்கர் தலைமுறை உங்களை வாழ்த்தட்டும்..

    www.anburaja.in

    ReplyDelete
  99. நண்பரே...

    போற்றுவோர் போற்றட்டும்

    தூற்றுவோர் தூற்றட்டும்.

    புதிய பதிவர்கள்களுக்கு வடிகாலாய் உங்கள் பதிவுகள் என்னென்றும் நிலைத்து நிற்கும்.அதில் மாற்று கருத்து ஏதுமில்லை.

    நட்புடன்
    சம்பத்

    ReplyDelete
  100. உங்களின் வந்தேமாதரம் இதழை தொடர்ந்து படித்து வருபவர்களில் நானும் ஒருவன். உங்கள் பிளாக்கை சாதாரண ஒரு பிளாக் என நினைத்து நீங்கள் ஒர்க் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அது இந்த பதிவின் மூலமே தெரிகிறது. உங்கள் பிளாக் ஒரு தரமான வெப்சைட் என்ற நினைப்பு உங்களிடம் இல்லை. ஏதோ ஒரு குழந்தை அழுதது என்பதக்கு, ஊரை கூடி அப்பாவி போல அழுகிறீர்கள். நீங்கள் ஒரு தரமான வெப் டிசைனர் மட்டுமல்ல, ஒரு ஆசிரியர். தெரியாத எவ்வளவோ விசயங்களை உங்கள் பிளாக்கில் தெரிந்து கொள்கிறோம். உங்கள் பிளாக்கின் தரம் நம்மால் கொடுக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தில்கூட ஒரு சிலர் இருக்கலாம். அது அவர்கள் அறிவு. ஒரு பள்ளிகூடத்தில் இருக்கும் ஆசிரியர் சொந்தமாக வீட்டில் எழுதிக்கொண்டுவந்து மாணவர்களுக்கு சொல்லிகொடுக்கிறாரா? உங்கள் பிளாக் உலகில் எவ்வளவோ உள்குத்து இருக்கலாம்.அதை எல்லாம் பப்ளிக்காக கொண்டுவந்து உங்கள் பிளாக்கின் தரத்தை குறைத்து கொள்ளாதீர்கள். எந்த நிமிடமும் உங்கள் நினைப்பு " ஒரு தரமான வெப்சைட் நடத்துகிறோம் என்ற நினைப்பை வையுங்கள்". தரமான செய்திகளை எங்கிருந்து வேண்டுமானாலும் கொடுங்கள். பதிவை போடுவதற்கு அந்த வெப்சைட்-இல் மட்டும் அனுமதி கேட்டு கொள்ளுங்கள். " பதிவு இங்கிருந்து வந்தது என" எங்களுக்கு போடவேண்டியதில்லை. பதிவு கொடுக்கும் வெப்சைட்டு மட்டும் அனுமதி கேளுங்கள் போதும்."
    இன்றே இந்த மொத்த பதிவையும் அழித்துவிட்டு, தரமான வெப்சைட்டாக நடத்துங்கள்.

    appan.pks,sivagiri,Erode.
    Cell: 98429-95609.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press