பிளாக்கரில் மேலும் ஒரு புது வசதி "Automatic Spam and Total comments" தெரிந்து கொள்ள

  இணைய உலகில் பிளாக்கர் என்பது முக்கியமான அங்கமாயிற்று. இதில் உலகம் முழுவதும் பல எண்ணற்ற வாசகர்கள் உள்ளனர். பிளாக்கர் வாசகர்களுக்கு புது புது வசதிகளை கொடுத்துகொண்டே உள்ளது. இந்த வரிசையில் இன்று நாம் பார்க்க போவது "Automatic Spam detection" வசதி. எப்பவும் போல காலையில் வந்து பிளாக்கர் ஓபன் செய்தால் ஒரு அறிவிப்பு செய்தி வந்தது அதை படித்துவிட்டு அப்படியே கீழே பார்த்தால் comments என்ற ஒரு புது link இருந்தது.
முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். அங்கு மேலே படத்தில் காட்டியுள்ளதை போல Comments என்ற ஒரு புதிய  லிங்க் இருக்கும் அந்த லிங்கில் செல்லுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்

கமெண்ட்ஸ் பக்கத்திற்கு சென்றவுடன் அதில் மூன்று option இருக்கும்.  
  • Published - நம்  தளத்தில் இதுவரை வந்த கமெண்ட்ஸ் 
  • Awaiting Moderation - இது நாம் பப்ளிஷ் செய்யவேண்டிய கமெண்ட்ஸ் 
  • Spam - இது நாம் தடுக்க வேண்டிய கமெண்ட்ஸ் வரும் பகுதி.
Published :   
   இந்த பகுதியில் இதுவரை நமக்கு வந்த அனைத்து கமெண்ட்களும் அதனதன் தலைப்போடு நமக்கு தெரியும்.   வலது பக்க மூலையில் நமக்கு இதுவரை வந்த மொத்த கம்மேன்ட்களின் எண்ணிக்கை வரும்.  இதில் நீங்கள் spam ஆக நினைக்கும் பின்னூட்டத்தை டிக் செய்து spam என்ற பட்டனை அழுத்தினால் போதும். அந்த comment நம்முடைய spam பகுதிக்கு சென்று விடும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Spam : 

இதில் இரண்டாவதாக உள்ள Awaiting Moderation என்ற வசதி அனைவரும் அறிந்ததே ஆகையால் Spam பகுதிக்கு செல்கிறோம்.   நீங்கள் spam என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் பிளாக்கரில் நீங்கள் spam என்று ஒதுக்கி வைத்திருந்த கமெண்ட்ஸ் அனைத்தும் காணப்படும். நீங்கள் ஒருமுறை spam என்று கொடுத்து விட்டால் போதும் இனிமேல் அந்த முகவரியில் இருந்து இனிமேல் நமக்கு வரும் கமெண்ட் நேராக Spam பகுதியில் வந்து விடும். ஒருவேளை நீங்கள் தவறாக ஏதேனும் முகவரியை Spam என்று தேர்வு செய்துவிட்டால் நீங்கள் இந்த பகுதியில் உள்ள Not spam என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும் திரும்பவும் பப்ளிஷ் ஆகிவிடும். 
இனிமேல்  நமக்கு வரும் comment மிகவும் பாதுகாப்பாக வரும் இன்னொரு விஷயம் நமக்கு வரும் கமெண்ட் இனி நம் பதிவின் தலைப்போடு சேர்ந்தே வரும். இதற்காக நாம் post name என்பதை அழுத்தி பார்க்க தேவையில்லை. 
நன்றி உலவு.காம்  
இதுவரை என் தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து தோழர்களுக்கும் மிக்க நன்றி.பதிவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் நம் தமிழ் திரட்டியான உலவு.காம் ஒரு போட்டியை அறிமுக படுத்தியது பதிவை இடு பரிசை எடு என்பது. அதில் சென்ற மாத சிறந்த பதிவராக என்னை தேர்வு செய்து உள்ளனர். என்னை தேர்வு செய்த உலவு.காம் நிறுவனர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது போல் மேலும் பல மாற்றங்கள் செய்து பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டு  கொள்கிறேன். 

டுடே லொள்ளு 
Photobucket
என்ன வான வேடிக்கைன்னு பார்க்கறீங்களா   எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாங்க, பாசக்கார பயபுள்ளைங்க 

Comments