8/13/2010

பிளாக்கரில் "Blogger Automatic Redirecting OLD to NEW URL" வசதி கொண்டு வர

பிளாக்கர் நம் அனைவரும் உபயோக படுத்தும் ஒன்று. இந்த வகையில் நாம் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட பிளாக்குகள் வைத்திருப்போம். அதாவது முதலில் ஒரு பிளாக்கினை ஆரம்பித்து இருப்போம் அப்பொழுது எதுவும்
தெரியாமல் URL கூட சரியாக தேர்ந்தெடுக்காமல் ஆரம்பித்து விடுவோம் நாளடைவில் நம்முடைய தவிக்கு ஏற்ப  அனைத்தையும் சரிசெய்து ஒரு பிளாக் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்போம் ஆனால் இங்கு உள்ள வாசகர்கள் நமது புதிய தளத்திற்கு வருவார்களா மாட்டார்களா என்ற சந்தேகமே அதிகம் எழும். நீங்கள் நினைத்தது உண்மை தான் வாசகர்களின் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும் இந்த குறையை நீக்கவே இந்த பதிவு. இனி நீங்கள் எத்தனை பிளாக் வேண்டுமென்றாலும் ஓபன் செய்து கொள்ளலாம். இந்த பழைய தளத்தின் URL கொடுத்தால் அது REDIRECT ஆகி உங்களுடைய புதிய தளம் தான் வாசகர்களுக்கு வரும். இதனால் விலைமதிப்பில்லாத நம் வாசகர்கள் நம் தளத்தில் இருந்து குறைய வாய்ப்பில்லை. இதற்காக நீங்கள் ஒரு சிறிய கோடிங்கை உங்கள் பழைய தளத்தில் சேர்த்தால் போதும்.

    
மேலே உள்ள  லிங்கில் கிளிக் செய்து பாருங்கள் உங்களுக்கு அந்த தளம் செல்லாமல் அது ஓபன் ஆகிய ஒன்று இரண்டு வினாடிகளிலேயே மாறி என்னுடைய வந்தேமாதரம் தளம் ஓபன் ஆவதை காண்பீர்கள்.

இந்த வசதியை கொண்டு வர உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

  • DESIGN - EDIT HTML - சென்று </head&gt; இந்த வரியை கண்டு பிடிக்கவும். கண்டு பிடித்தபின் கீழே உள்ள வரியை காப்பி செய்து நீங்கள் கண்டு பிடித்த கோடிற்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.
<meta http-equiv="refresh" content="0;url=http://vandhemadharam.blogspot.com"/>
கோடிங்கில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியிருக்கும் இடத்தில் உங்களுடைய URL கொடுக்கவும். நீங்கள் மாற்ற மறந்தால் என் தளம் தான் ஓபன் ஆகும் இதுக்கு கம்பனி பொறுப்பல்ல. உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ இருக்க வேண்டும்.


கோடிங் கொடுத்த இடம் சரி என்று உறுதி செய்த பின்னர் நீங்கள் கீழே உள்ள SAVE TEMLATE என்ற பட்டனை அழுத்தி விடவும். இப்பொழுது நீங்கள் கோடினை சேர்த்த பழைய தளத்தின் URL கொடுத் ஓபன் செய்து பாருங்கள் உங்கள் பழைய தளம் ஓபன் ஆகி அடுத்த வினாடியே பழைய தளம் மறைந்து புதிய தளம் ஓபன் ஆவதை காண்பீர்கள்.

குறிப்பு :- நீங்கள் நினைத்தால் கூட உங்கள் பழைய தளத்தை காண முடியாது. திரும்பவும் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து இப்பொழுது சேர்த்த கோடிங்கை நீக்கினால் தான் உங்கள் தளம் திரும்பவும் காண முடியும். 

டுடே லொள்ளு 
Photobucket
funny animation
என்ன யாராவது காப்பாற்றி விடுங்க நான் அவுங்களையே  கல்யாணம் பண்ணிக்கிறேன்

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஒரு ஓட்டு போட்டு செல்லவும் முடிந்தால் கள்ள ஓட்டு கூட போடலாம் . 

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home