நம்மிடம் ஏதேனும் வீடியோ இருக்கும் அதில் உள்ள சிறிய பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதை எப்படி gif பைலாக மாற்றுவது என்று இங்கே காணப்போகிறோம். இந்த வேலையை செய்ய நமக்கு இந்த சிறிய மென்பொருள் தேவைபடுகிறது.
- Install செய்ய வேண்டியதில்லை.
- மென்பொருளை ஓபன் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் பைல் கிளிக் செய்து உங்கள் வீடியோவினை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
- இது Avi, Mp4 ஆகிய பைல்களாக இருத்தல் அவசியம்.
- உங்கள் வீடியோவை தேர்ந்தெடுத்து கொண்டு உங்களுக்கு Gif பைலாக மாற்ற விரும்பும் பகுதியை தேர்ந்தெடுக்க இந்த scroll குறியை நகர்த்தவும்.
- உங்களுக்கு வேண்டிய பகுதி வந்ததும் Set Start Point என்ற குறியை கிளிக் செய்யவும்.
- உங்களுக்கு தேவையான பகுதி வந்தவுடன் End என்று குறிப்பிட்டு இருக்கும் பட்டனை க்ளிக் செய்து விடவும்.
- இப்பொழுது நீங்கள் Export என்பதை க்ளிக் செய்யவும்.
- அடுத்து Export to animated gif என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
- அடுத்து உங்கள் File name கேட்க்கும் அதை கொடுத்து விட்டு Save என்பதை கிளிக் செய்து விடவும்.
- அவ்வளவு தான் உங்கள் Gif பைல் உருவாகி விட்டது.
கொஞ்ச நேரம் தனியா ஆட விடுங்கப்பா
Comments