Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

Youtube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை மட்டும் தேட

இணையத்தில் Youtube பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Youtube என்பது  ஆன்லைனில் வீடியோக்கள் பகிரும் தளமாகும். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நல்ல தரமான வீடியோக்களும் மற்றும் தரம் குறைந்த வீடியோக்களும் கலந்து இருக்கும். 
நாம் ஏதேனும் வீடியோவை ஆவலுடன் தேடினால் இதில் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். ஒரு சில வீடியோக்கள் ஆரம்பத்தில் சரியாக போகும் நடுவில் பிரச்சினையை ஏற்ப்படுத்தும். ஆகையால் நாம் தேடும் போதே தரம் மிகுந்த வீடியோக்களை மட்டும் தனியாக எப்படி தேடுவது என்று இங்கே பார்ப்போம். 
  • இதற்காக எந்த மென்பொருளும் உபயோகிக்க தேவையில்லை.
  • முதலில் நீங்கள் Youtube தளத்திற்கு செல்லுங்கள். 
  • உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ள Search பாரில் உங்களுக்கு தேவையான வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை கொடுக்கவும்.
  • இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து சர்ச் செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். 
  • இதில் தரம் மிகுந்த(High Quality) வீடிக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் '&fmt=18' (Stereo, 480 x 270 resolution)  இந்த வரியை கொடுக்கவும். 
  • அல்லது '&fmt=22' (Stereo, 1280 x 720 resolution) இந்த வரியை கொடுக்கவும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.

(OR)

  • உங்கள் வார்த்தைக்கும் இந்த வரிகளுக்கும் இடைவெளி விடவேண்டாம். தொடர்ந்து டைப் செய்யவும். 
  • நீங்கள் தேடும் வீடியோக்களில் இந்த தரங்களில் வீடியோ இருந்தால் மட்டுமே உங்களுக்கு வரும் இல்லையேல் NO VIDEOS FOUND என்ற செய்தி தான் வரும். அதற்க்கு கீழே தரம் குறைந்த வீடியோக்கள் வரும் அதில் பார்த்து கொள்ளவும்.
இதில் உள்ள வீடியோக்களை தரவிறக்க வேண்டுமென்றால் என்னுடைய முந்தைய பதிப்பான இணையத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் வேகமாக தரவிறக்க என்ற பதிவை பார்த்து உபயோக படுத்தி கொள்ளவும்


டுடே லொள்ளு 

Photobucket
போங்க வீரர்களே போங்க போயிட்டு நமக்கு ஓட்டும் கமெண்டும் போடாதவங்கள கட்டி தூக்கிகிட்டு வாங்க 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

12 comments :

  1. அடுத்த முறை யூ டுயூப்க்கு போகும் போது உபயோகப்படுத்தி கொள்கிறோம்

    ReplyDelete
  2. ஆகா அசத்தல் நண்பா
    ரொம்பவும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டீர்கள் சூப்பர்
    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    லொள்ளு செம கலக்கல்

    வீரர்களை நம்ம வீட்டுக்கு அனுப்பிடாதீங்க நான் ஓட்டும் கருத்துரையும் வழங்கிவிட்டேன்

    நன்றி
    என்றும் நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  3. சசிகுமார் said... 6
    @மாணவன்
    தாங்கள் எந்த வகையில் இணைப்பு கொடுத்தீர்கள் blog list மூலமாகவா.

    ஆம் நண்பரே,
    வேறு வழி உள்ளதா எப்படி என்று விளக்கவும் நண்பா
    நன்றி

    ReplyDelete
  4. கில்லாடி அய்யா நீர் ! பகிர்வுக்கு நன்றி.
    சசி , நேற்று நான் பென் டிரைவ் பற்றி கேட்டிருந்த சந்தேகம் அப்படியே உள்ளது கண்ணா! அதற்கு என்ன வழி என்று சொல்லவும்.
    --

    ReplyDelete
  5. @லொள்ளு: என்னை விட்ருங்கப்பா, நான் ரெண்டையும் செஞ்சிட்டேன்.

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி சசி!!

    ReplyDelete
  7. //மாணவன் said...
    சசிகுமார் said... 6
    @மாணவன்
    தாங்கள் எந்த வகையில் இணைப்பு கொடுத்தீர்கள் blog list மூலமாகவா.//

    நண்பரே சரி செய்து விட்டேன். டெம்ப்ளேட்டில் சிறிய பிரச்சினை இருந்தது இப்பொழுது சேர்த்து பாருங்கள் சேர்ந்து விடும்.

    ReplyDelete
  8. நன்றி சசி.. ட்ரை பண்றேன்..:))

    ReplyDelete
  9. super sasi.பயனுள்ளது,பாமரனுக்கும் புரியும்படி சொல்லி இருக்கீங்க.எனக்கு 2 டவுட்ஸ்

    1.இண்ட்லில 30 ஓட்டு விழுந்திருக்கு ஆனா கமெண்ட் கம்மியா இருக்கே ஏன்?இது எல்லா பிளாக்கிலும் பொதுவா பாக்கறேன்

    2.நல்ல நல்ல பயனுள்ள பதிவுகளுக்குகூட நம்ம மக்கள் மைனஸ் ஓட்டு போடறாங்க அது ஏன்?

    3.அந்த மைனஸ் ஓட்டும் பிளஸ் ஓட்டுக்கு சமமாதான் எப்பவும் இருக்கு,உதாரணமா 8 - 8
    அது ஏன்?

    ReplyDelete
  10. //1.இண்ட்லில 30 ஓட்டு விழுந்திருக்கு ஆனா கமெண்ட் கம்மியா இருக்கே ஏன்?இது எல்லா பிளாக்கிலும் பொதுவா பாக்கறேன்//

    நான் அதிக தளங்களுக்கு சென்று கமென்ட் போடுவதில்லை அதனால் எனக்கும் அதிக கமென்ட் வருவதில்லை thats all

    //3.அந்த மைனஸ் ஓட்டும் பிளஸ் ஓட்டுக்கு சமமாதான் எப்பவும் இருக்கு,உதாரணமா 8 - 8
    அது ஏன்//

    நண்பரே தங்களின் புரிதல் தவறாக உள்ளதாக நினைக்கிறேன். இது போன்று இருந்தால் அது மைனஸ் ஓட்டு அல்ல.
    8/7 இப்படி இருந்தால் உங்களுக்கு ஒரு மைனஸ் ஓட்டு விழுந்துள்ளது என்று அர்த்தம். இப்படி தான் உங்களுக்கு விழும் மைனஸ் ஓட்டை கணக்கிட வேண்டும்.

    ReplyDelete
  11. Hai Sasi.its fine can u explain how to download a youtube videos in my mobile E51 there is any software

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press